Tag Archives: Monazite

காசுக்காக அப்பட்டமான பொய் செய்தி வெளியிடும் ஜீனியர் விகடனுக்கு மறுப்பு

அந்நிய நிறுவனங்கள் மட்டும் இன்றி இந்திய தொழில் போட்டியாளர்களும் சேர்ந்து தாது மணல் தொழிலுக்கு எதிராக பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டதோடு நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு வரும் போது நீதித்துறையை அச்சப்படுத்த அல்லது எதிராக திருப்ப சில ஊடகங்களை பயன்படுத்தி செய்தி வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். அவ்வாறு ரேர் எர்த் தயாரிக்க மட்டுமே உபயோகப்படும் மோனசைட்டில் இருந்து கிடைக்கும் தோரியத்தில் இருந்து அணுகுண்டு தயாரிக்கப்படுகிறது என்று ஒரு அபாண்டமான பொய்யை காசுக்கு வேசி தனம் செய்யும் விகடன் குரூப் தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம் இன்று உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வர இருப்பதும் தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்ததும் தான். அதற்கு நமது சங்கத்தின் சார்பில் ஒரு மறுப்பு மின் அஞ்சல் அனுப்பப் பட்டது. காசு வாங்கி கொண்டு பொய் செய்தி வெளியிடும் விகடன் நிச்சயம் நமது மறுப்பை வெளியிட மாட்டார்கள். எனவே உறுப்பினர்களின் தகவலுக்காக அந்த மின் அஞ்சல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

**********

———- Forwarded message ———-
From: Southern Mineral Workers Association <sworkersassociation@gmail.com>
Date: 2018-07-02 11:41 GMT+05:30
Subject: Objection to Junior Vikatan News dated 04.07.2018
To: editor@vikatan.com, jv@vikatan.com, av@vikatan.com, aval@vikatan.com
Cc:  All medias

                                                            நாள் : 02.07.2018

பெறுநர்
ஆசிரியர்
ஜீனியர் விகடன்,
சென்னை
ஐயா
“தாது மணல் கடத்தல் அணு ஆயத ஆபத்து – அதிர வைக்கும் ஆவணங்கள்” என்ற தலைப்பில் 04.07.2018- என கடந்த சனிகிழமை தாங்கள் வெளியிட்டுள்ள செய்தி மிகைப்படுத்தி கூறப்பட்ட உண்மைக்கு மாறானது ஆகும்.
உண்மையில் உலகின் எந்த மூலையிலும் மோனசைட் அணுகுண்டு உற்பத்திக்கோ, அணுமின்நிலைய உற்பத்திக்கோ பயன்படுத்தப்படுவதில்லை. இதில் இருந்து கிடைக்கும் தோரியம் கதிர்வீச்சு உள்ளதே தவிர பிளவுபடும் பொருள் (களைளடைந) அல்ல. எனவே அதனை எந்த காரணத்திற்கும் உபயோகிக்க முடியாது. நாளது தேதியில் உலகின் எந்த நாட்டிலும் இந்த மோனசைட்டில் இருந்து கிடைக்கும் தோரியம் அணுமின் நிலையத்திற்கோ அல்லது அணுகுண்டு செய்யவோ உபயோகப்படவில்லை. இந்தியாவில் மட்டும் தான் இதனை அணுமின் நிலையத்திற்கு இரண்டாம் உப பொருளாக மாற்றி உபயோகிக்கலாமா என  ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. 2080 வாக்கில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது அனைத்தும் உங்களுக்கு தெரிந்தாலும் கூட வளர்ப்பு நாயை கல்லால் அடித்தால் ஐயோ பாவம் வாயில்லா பிராணியை தாக்குகிறார்கள் என கூறுவதை தவிர்ப்பதற்காக வெறிநாய் என்ற பெயரில் தாக்குவது போல் தாங்கள் இந்த அபாண்டமான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை கூறி உள்ளீர்கள். இது பத்திரிக்கை தர்மத்திற்கு நியாயம் அல்ல. உண்மையில் உலகத்தில் எந்த நாட்டிலும் இவ்வாறு உபயோகத்தில் இல்லை என்பதும் வெளிநாடுகளிலேயே மோனசைட் இலகுவாக கிடைக்கிறது என்பதும் இந்தியாவில் இருந்து தோரியம் கடத்தல் என பத்திரிக்கைளில் எழுதுவது என்பது உண்மைக்கு மாறானது என்பதையும் பாராளுமன்றத்திலேயே வினா எண் 1872-க்கு பதிலாக 9.3.2016 அன்று தெரியப்படுத்தி உள்ளார்கள். தாங்களும் அதனை இந்திய அரசு இணையதளத்தில் பார்க்கலாம்.
மேலும் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் நாட்டின் தரைவழி எல்லை பாதைகள் ஆகிய அனைத்திலும் கதிரியக்க பொருட்கள் போக்குவரத்தை கண்டுபிடிக்கும் மின்னணு சாதனத்தை பொருத்தி அவற்றை சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களோடு ஒருங்கிணைத்து வைத்துள்ளதாகவும் எனவே தோரியம் கடத்தப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதையும் பாராளுமன்றத்தில் அமைச்சர் வினா எண் 896 நாள் 20.12.2017-ல் தெரிவித்துள்ளார். அதனையும் தாங்கள் இந்திய அரசு இணையதளத்தில் பார்க்கலாம். எனவே தங்களது செய்தி உள்நோக்கத்தோடு எழுதப்பட்டது.
கடந்த 1995-ம் வருடத்தில் இருந்தே விக்டர் ராஜமாணிக்கம் அவரது முதலாளி தயாதேவதாஸ் ஆகியோர் பல்வேறு பெயர்களில் பல்வேறு புகார்களை எழுதியதோடு மட்டும் இன்றி ஏராளமான ரிட் மனுக்களையும் தாக்கல்; செய்து இருந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் ஒரு பத்திரிக்கையில் ஒரு நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவதற்கு அதில் உள்ள ரிப்போர்ட்டருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து ரூபாய் 5000 செலுத்தி ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்து அதில் அபாண்ட குற்றச்சாட்டுகளை கூறினால் தரமற்ற அல்லது விளம்பரம் கிடைக்காத பத்திரிக்கைகள் சூடான செய்தி என முக்கியத்துவம் கொடுத்து போடுவார்கள். சம்மந்தப்பட்ட நபர்களும் ஒரு பத்திரிக்கையில் கால்பக்க விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் சுமார் 2 லட்சம் கொடுக்க வேண்டும். மாறாக 5000 ரூபாய் பொது நல வழக்கிலும் சில குறிப்பிட்ட ரிப்போர்ட்டர்களுக்கு செய்த சிறிய செலவிலும் மக்களிடமும் அதிகாரிகள் மட்டத்திலும் ஒரு கோபத்தை ஏற்படுத்தலாம் என இம்மாதிரி செய்து வருவது 1995- முதலே நடந்து வருகிறது.
பொதுவாக தாது மணல் தொழில் ஏற்றுமதி என்பதால் உள்ளுர் பத்திரிக்கைகளுக்கு விளம்பரம் கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. ஆனால் தங்களுக்கு விளம்பரம் என்ற பெயரில் மாமூல் வரவில்லை என்பதால் சில பத்திரிக்கைகள் அவ்வப்போது இதனை தாக்கி எழுதுவது வழக்கம். அதே போல் இதற்கென்றே சில ஊடகவியலாளர்களை பணம் கொடுத்து கையில் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதும் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு வரும் போது நீதித்துறையின் மனதில் ஒரு அச்சத்தை ஏற்படுத்த அல்லது ஒரு விலகி ஓடும் எண்ணத்தை ஏற்படுத்த இவ்வாறு எழுதுவது வழக்கம். இதற்கென்றே தயாதேவதாஸ் மட்டும் இன்றி இந்திய தாது மணல் உற்பத்தியாளர்களிடம் தங்கள் வியாபாரத்தை இழந்த அன்னிய நிறுவனங்களும் பெரும் தொகை செலவு செய்கிறார்கள். அதன் வெளிப்பாடே இந்த புகார் மற்றும் பொது நல வழக்கு எல்லாம்.
தங்கள் கட்டுரையில் முதலில் கூறி இருக்கும் விக்டர் ராஜமாணிக்கம் திரு.தயாதேவதாசால் பல்வேறு வகைகளில் சட்டவிரோதமாக பலன் அடைந்தவர். இந்த கூட்டத்தில் சில ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும் உண்டு. இவர்கள் வாங்கும் பணத்திற்காக தவறுதலாக பிரச்சாரம் செய்வார்கள். இது பற்றிய விபரங்களை தாங்கள்  http://www.beachminerals.org/video-home/ வீடியோவில் பார்க்கலாம்.
திரு.வி.சுரேஷ் என்பவர் இப்போது அல்ல, 2005 முதலே தாது மணல் தொழிலுக்கு எதிரானவர். ஏற்கனவே இந்த தொழிலை நிறுத்த வேண்டும் என மனித உரிமை ஆணைய அமைப்பு (Pருஊடு) என்ற அமைப்பு சார்பில் ஒரு உறுப்பினராக இருந்து அறிக்கை கொடுத்தவர். தாது மணல் நிறுவனங்களுக்கு எதிராக ஏற்கனவே நடந்த ஒரு பொது நல வழக்கில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுந்தரம் சார்பில் ஆஜர் ஆனவர். வழக்கறிஞர் சட்டப்படி இந்த விபரங்களை அவரே நீதிமன்றத்தில் சொல்லி இந்த வழக்கில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக அவரும் சொல்லவில்லை. நீதிமன்றமும் இதனை கவனிக்கவில்லை. திரு.சுரேஷ் கொடுத்த அறிக்கை என்பது இந்த தாது மணல் தொழிலையும், ஆற்று மணல் போல் சுவாகா செய்ய வேண்டும் என நினைத்து செயல்பட்ட நிழல் உலக அரசின் உறவினரான திரு.கருணாகரன் என்பவர் கொடுத்த ஒரு தலை பட்சமான அறிக்கையின் அடிப்படையிலும், ஏற்கனவே விவி மினரல் நிறுவனத்தோடு சேரன்மகாதேவி சார் ஆட்சியராக இருக்கும் போதே முன்பகை உள்ள திரு.ககன்தீப்சிங் பேடி என்பவர் கொடுத்த ஒரு தலைபட்சமான அறிக்கையின் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டது. கருணாகரன் சட்டவிரோதமாக தான் செயல்பட்டார். சட்டப்படி விசாரணை தேதியை தெரிவிக்காமல் ஒரு தலைபட்சமாக உத்தரவு பிறப்பித்தார். மேலும் அவருக்கு அதிகாரமே பகிர்ந்தளிக்கப்படவில்லை என அரசு தெரிவித்த ஆதாரம் உட்பட அனைத்து ஆதாரங்களும்  www.beachminerals.org  என்ற இணையதளத்தில் உள்ளது. அதனை தாங்கள் பார்க்கலாம்.
எந்த நிலையிலும் ஏற்றுமதி தடை செய்யப்படவில்லை. மாறாக சுரங்க பணி செய்வது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே குவாரி செய்த கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்பட எந்த தடையும் கிடையாது. ஏற்றுமதி மாநில அரசின் கட்டுப்பாட்டில் வராது என்பது உங்களுக்கு தெரிந்தாலும் கூட உள்நோக்கத்தோடு தாங்கள் இதனை எழுதி உள்ளீர்கள்.
திரு.சாகு குழுவின் அறிக்கையிலும் வேண்டும் என்றே சில இனங்களை மறைத்து திரித்து கூறி உள்ளார். அதாவது உங்கள் நிர்வாக பத்திரிக்கைக்கு வளர்ச்சிக்காக, செய்திக்காக எப்படி சகாயம் விசாரணையை நடத்தி இறுதியில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என அறிக்கை செய்தாரோ அதே போல் பத்திரிக்கைளில் செய்திகளுக்காக சில இனங்களை திரித்துள்ளார்.
அதாவது அரசு நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தில் தான் ஏற்றுமதிக்கு என வைக்கப்பட்டுள்ள கார்னட், இல்மனைட் கனிமங்களில் மோனசைட் 0.25 சதவீதத்திற்கு கூடுதலாக இருந்தது என்பதை தெரிவிக்காமல் பொதுப்படையாக சில நிறுவனங்கள் என தெரிவித்துள்ளார். அதே போல் சில தனியார் நிறுவனங்களில் செமி பிராசஸ்டு கனிமங்களில் உள்ள மோனசைட்டை அதிகப்படுத்தி காட்ட வேண்டும் என்றும் அவற்றை பிராசஸ்டு கனிமங்களில் அதிகம் இருக்கிறது என வேண்டும் என்றே காட்டினார். இவை அனைத்தையும் தயார் செய்வது திருநெல்வேலியில் உள்ள தங்கமுனியசாமி என்னும் ஒரு துணை இயக்குனர் தான்.
நாளது தேதியில் அனைத்து துறைமுகங்களிலும் ஸ்கேனர் வசதி பொறுத்தப்பட்டு விட்டதால் 0.25 சதவீதம் என்ற லிமிட் எதுவும் அமுலில் இல்லை. இதனை அணுசக்தி துறை மற்றும் அணு கனிம இயக்குனரகம் உறுதி செய்துள்ளது.
உண்மையில் மாவட்ட ஆட்சியர் கருணாகரன் அறிக்கையும், ககன்தீப் சிங் பேடி அறிக்கையும் சாகுகமிட்டி ஆய்வறிக்கையும் சட்ட விதிகளில் கூறியபடியும் இந்திய அரசு வகுத்துள்ள நெறிமுறை படியும், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறை படியும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பு அனுப்பி அவர்களது முன்னிலையில் அளவீடு மேற்கொண்டு தயாரிக்கப் பட்டது அல்ல. ஒரு தலை பட்சமாக ஆற்றுமணலை போல் தாதுமணலையும் சுவாகா செய்வதற்காக தயாரிக்கப் பட்டது. ஆற்று மணலும் முன்பு இது போல் ஒரு அறிக்கை வாங்கி தான் அரசு நடத்துவோம் என எடுத்தார்கள். இப்போது அங்கு நடப்பது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக தயாரிக்கப் பட்ட ஒரு தலைபட்சமான அறிக்கை. அதே நேரத்தில் மத்திய அரசு அதிகாரிகளும் மத்திய மாநில அரசு அதிகாரிகளும் பல்வேறு முறை கூட்டு புலத்தணிக்கை, ஆய்வு, பரிசீலனை மேற்கொண்டு எந்த தவறும் இல்லை என்பதை பலமுறை அறிக்கை செய்துள்ளார்கள். அவையும் மேற்கண்ட இணைய தளத்தில் இருக்கும். பார்க்கலாம்.
மேலும் விவி மினரல் நிறுவன பணியாளர்கள் தனியாக  http://vvmemp.blogspot.in  என்ற இணையதளம் வைத்துள்ளார்கள். அதிலும் இம்மாதிரி ஏராளமான அறிக்கைகள், உண்மைகள் பதிவிடப்பட்டுள்ளன. அதனையும் பார்க்கலாம்.
சாகுகமிட்டியின் தவறுகள் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் சுட்டிக்காட்டப்படும். நிறுவனங்களுக்கு எதிராக எழுதுவதற்கு மட்டுமே பணம் பெற்ற விகடன் போன்ற பத்திரிக்கைகள் நிச்சயம் அதனை எழுதாது. இருப்பினும் இது ஏராளமான தொழிலாளர் வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்பதால் இந்த உண்மைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தாது மணல் தொழில் நிறுத்தத்தால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 780 கோடி ரூபாய் இழப்பீடு. மத்திய அரசுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் அந்நிய செலவானி இழப்பீடு. நேரடி மறைமுக வேலைவாய்ப்பு பெரும் சுமார் 50000 தொழிலாளர்கள் இதில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். எனவே தயவு செய்து மனசாட்சியோடு உண்மையை மட்டும் எழுதுங்கள். இன்று வழக்கு விசாரணைக்கு வருவதற்காக இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டீர்கள். வழக்கமாக வழக்கு விசாரணைக்கு சில தினங்களுக்கு முன்பு திருமதி சந்தியா ரவிசங்கர் என்பவர் தான் இவ்வாறு செய்தி வெளியிடுவார். கடந்த விசாரணையோடே தங்களை செய்தி வெளியிட எல்லாம் செய்து விட்டோம் என ஒரு தரப்பினர் கொக்கரித்தனர். ஆனால் இந்த முறை அது வந்துள்ளது. நாங்கள் தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும். உலகை காக்க வந்த ஏசு பிரானையே 30 வெள்ளி காசுக்காக காட்டி கொடுக்க ஆட்கள் இருக்கும் போது பணத்திற்காக எழுதுவதற்கு பத்திரிக்கை நண்பர்களா இருக்க மாட்டார்கள்?  தயவு செய்து எங்கள் மனவேதனையை தங்கள் பத்திரிக்கையில் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
ஆர்.பாலகிருஷ்ணன்
Virus-free. www.avast.com

 

ஆற்றுமணல் கொள்ளையை திசைதிருப்ப தாது மணல் கொள்ளை என்று திட்டமிட்ட பிரச்சாரம். இதோ ஆதாரம்

தாது மணல் தொழிலுக்கு எதிராக வேண்டும் என்றே தவறாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது பொது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக சில நிழல் உலக மணல் மாபியாக்களால் அரசின் ஆதரவோடு செய்யப்படுகிறது. தமிழக அரசு ஒரு லோடு மணலை ரூபாய் 700 என நாங்கள் விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டு அரசுக்கு 89 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது என மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளது. ஆனால் உண்மையில் நடப்பது பொதுப்பணித்துறை என்ற பெயரில் முன்பு சசிகலாவின் உறவினரான திவாகரன் மற்றும் அவரது கூட்டத்தால் ஆற்று மணல் சூறையாடப்பட்டது. தற்போது இது போல் நிழல் உலக அரசு தாதாக்களால் ஆற்று மணல் சூறையாடப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு 200 நாட்கள் மட்டும் ஆற்று மணல் எடுக்கப்பட்டால் குறைந்த பட்சம் வருடத்திற்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் ஆற்றில் இருந்து சுரண்டப்படுகிறது. அப்படியானால் வருடம் முழுவதும் ஆற்று மணல் எடுக்கப்படும் போது வருடத்திற்கு 40000 கோடி ரூபாய் சுரண்டப்படுகிறது அல்லவா? இது வெளியே தெரியாமல் இருக்க சில ஊடகங்களுக்கு மாமூல் கொடுத்து பொது மக்கள் இதனை பற்றி விழிப்புணர்வு அடையாமல் இருப்பதற்காக பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்களின் கவனத்தை திசை திருப்ப அரசு அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் தான் தாது மணல் கொள்ளை என்பது. இதோ ஆற்று மணலில் எவ்வளவு கொள்ளை என்பதற்கான பட்டியல் கீழே கொடுக்கப்படுகிறது.

Link: http://scroll.in/article/815138/tamil-nadus-political-parties-are-making-money-from-sand-worth-a-whopping-rs-20000-crore-a-year

இந்தியாவில் தொழில் செய்வது தான் எத்தனை கடினம்??

அனைத்து அனுமதிகளையும் பெற்று சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்று வந்த தாது மணல் தொழில் சில நிழல் உலக அரசால் கபளிகரம் செய்வதற்காக பொய்யான குற்றச்சாட்டுகள் ஏற்படுத்தப்பட்டு பலமுனை தாக்குதலுக்கு அதில் ஊடகங்களும் பயன்படுத்தப்பட்டன. வேண்டும் என்றே உண்மை தெரிந்து சில ஊடகங்களும், உண்மை தெரியாமல் நல்லெண்ணத்தில் சில ஊடகங்களும் இந்த தொழிலுக்கு எதிராக எழுதி வருகின்றன. எல்லாம் நீதித்துறை அச்சப்படுத்துவதற்கு ஒரு நடவடிக்கை. அரசின் வேண்டுகோள் படி அறிக்கை கொடுத்த அதிகாரிகளும் ஒரு படத்தை 64 துண்டுகளாக மாற்றி பசில் என சரி செய்ய கொடுப்பது போல் அதிகாரிகளையும் வழக்கறிஞர்களையும் குழப்புவதற்காக அறிக்கைகளை வேண்டும் என்றே சரியாக கொடுக்கவில்லை. இதில் முக்கியம் இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் ஏற்றுமதி கனிமங்களில் தான் மோனசைட் அளவுக்கு அதிகமாக இருந்தது என்ற விபரத்தை வேண்டும் என்றே அதிகாரிகள் மறைத்து விட்டு சில இனங்களில்; கூடுதல் கொடுத்து விட்டார்கள். இதன் அடிப்படையில் இந்து தமிழ் பத்திரிக்கையில் 22.5.18 ஒரு செய்தி மிகைப்படுத்தி எழுதப்பட்டு இருந்தது. அதற்கு நம் தொழிலாளர் சங்கம் சார்பாக ஒரு பதில் அனுப்பப் பட்டுள்ளது. இது இந்து நிறுவனத்தின் உயர் நிர்வாகிகள் கவனத்திற்கு வந்தால் நிச்சயம் இதில் நல்ல முடிவு எடுப்பார்கள். எனவே நமது சங்கத்தில் இருந்து இந்து பத்திரிக்கையின் இயக்குனர்களை சந்திக்க கால ஒதுக்கி தரவும் கேட்க முடிவு செய்துள்ளோம். அந்த பத்திரிக்கைக்கு அனுப்பிய பதில் அனைத்து உறுப்பினர்களும் தெரிந்;து கொள்ள கீழே வெளியிடப் பட்டுள்ளது.

***********

From: Southern Mineral Workers Association <sworkersassociation@gmail.com>
Date: 2018-05-23 10:28 GMT+05:30
Subject: Clarification regarding “குவித்து வைக்கப்பட்ட தாது மணலில் கதிர்வீச்சை கக்கும் மோனசைட்”

To: flcomments@thehindu.co.in, flletters@thehindu.co.in, flnsub@thehindu.co.in, inetads@thehindu.co.in

அன்புடையீர்,

தங்களது 22.5.18 தேதிய பத்திரிக்கையில் “குவித்து வைக்கப்பட்ட தாது மணலில் கதிர்வீச்சை கக்கும் மோனசைட்” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.  இதன் தொடர்ச்சியாக எங்கள் விளக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் மேற்கண்ட அறிக்கையை முழுவதும் படிக்காமல் இந்த கட்டுரையை எழுதி உள்ளீர்கள் என்பதையும் விருவிரு செய்தி கொடுக்க வேண்டும் என்று மிகைப்படுத்தி எழுதி உள்ளதையும் தெரிய முடிகிறது. ஒருவேளை இந்த கட்டுரைதாரரில் யாராவது திருமதி சந்தியா ரவிசங்கரின் கூட்டாளியாகவோ அல்லது பங்குதாரராகவோ இருக்கலாம். அதுவும் இந்த கட்டுரை உண்மைக்கு புறம்பாக வருவதற்கு காரணம்.
முதலில் கதிர்வீச்சை கக்கும் மோனசைட் என்பது தாது மணலில் மட்டும் கிடைப்பது அல்ல. அது ஆற்று மணலிலும் கிடைக்கும். பெரும் பகுதியாக கிடைப்பது இரும்பு தாது சுரங்கத்திலும், சுண்ணாம்பு தாது சுரங்கத்திலும் தான். ஆனால் அவற்றிற்கு பணத்திற்காக புகார் எழுதும் பொய்யர் கூட்டம் இல்லாததால் அதை பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. மாறாக குடும்ப பகை, தொழில் போட்டி, மாமூல் தரவில்லை என்ற கோபம், விளம்பரம் தரவில்லை என்ற கோபம் ஆகியவற்றிற்காக மிகைப்படுத்தி இவை எழுதப்படுகின்றன.
இது போக இதில் அன்னிய சக்திகளின் கையும் உண்டு. இந்திய உற்பத்தியாளர்களால் தங்களது ஏகபோக வாணிபம் தடை பட்டதை சகித்து கொள்ள முடியாத அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் சில கைக்கூலிகளை கையில் வைத்து தவறாக எழுதுகின்றன.
முதலாவதாக மோனசைட்டில் கிடைக்கும் தோரியம் மற்றும் யுரேனியம் பிளவு படக் கூடியது அல்ல. எனவே அவற்றை எந்த வகைக்கும் உபயோகிக்க முடியாது. உலகத்தில் எந்த நாட்டிலும் மோனசைட்டில் இருந்து கிடைக்கும் தோரியத்தை வைத்து எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்தியாவில் இதனை பிளவு பட வைக்க  முடியுமா என்பதற்கான ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. 2080-ல் இதில் வெற்றி பெறுவோம் என நம்புகிறார்கள். எப்படி கடல் நீரில் இருந்து  பெட்ரோல் தயாரிக்க ஆராய்ச்சி சென்று கொண்டு இருக்கிறதோ அது போல் இது ஒரு ஆராய்ச்சி.
இந்த மோனசைட் கனிமம் இதர கனிமங்களோடு கலந்து இருந்தால் இதர கனிமங்களுமே உபயோகத்திற்கு லாயக்கற்றதாகி விடும். உலக நாடுகளில் மோனசைட் கனிமம் கட்டுப்பாடு எதுவும் இன்றி விலை மலிவாக கிடைப்பதால் அந்நிய நாடுகள் இந்த மோனசைட்டில் இருந்து ரேர் எர்த் தயாரிப்பதற்கு இந்தியாவிடம் கொள்முதல் செய்வதை 2004-லேயே நிறுத்தி விட்டார்கள். இதனை இந்திய பாராளுமன்றத்தில் வினா எண் 420-க்கு பதிலில் மத்திய அமைச்சர் அவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.
தாங்கள் கிடங்குகளில் ஏற்றுமதிக்கு வைக்கப்பட்டுள்ள மணலில் மோனசைட் கனிமம் அதிகம் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆனால் அது இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் சரக்கு என்பதை வேண்டும் என்று மறந்தீர்களோ அல்லது தெரியாமல் விட்டீர்களோ தெரியாது. உங்கள் கவனத்திற்கு கீழ்கண்டவற்றையும் கொண்டு வர விழைகிறேன்.
மோனசைட் என்பது இயற்கையாக கிடைக்கும் ஒரு கனிமம். இதில் இத்தனை சதவீதம், அத்தனை சதவீதம் என்று எந்த கட்டுப்பாடும் கிடையாது. தங்கள் பார்வைக்கு அணுசக்தி துறையின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மோனசைட் கனிமம் ஏற்றுமதி செய்யப்படலாம் என்ற ஒரு எண்ணத்தை நீதித்துறையில் ஏற்படுத்துவதற்காக இந்த திட்டமிட்ட செய்திகள் பரப்பபடுகின்றன. உண்மையில் எல்லா துறைமுகங்களும் விமான நிலையத்தில் உள்ளது போல் லாரியோடு செல்லும் சரக்குகளை ஆய்வு செய்ய ஸ்கேனர் வசதி பொறுத்தப்பட்டுள்ளது. எனவே அவற்றின் வழியாக மோனசைட்டோ அல்லது எந்த கதிரியக்க பொருளுமோ கொண்டு செல்லவோ இறக்குமதி செய்யவோ முடியாது. நாளது தேதி வரை இவ்வாறு எந்த கதிரியக்க பொருளும் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்ற விபரத்தை நீங்கள்  http://www.beachminerals.org/tuticorin-port-trust-has-scanner-to-find-out-radioactive-materials-uranium-thorium-monazite-or-other-unwanted-materials-used-for-export-until-now-no-such-materials-found-in-the-export-cargo-tutico/  ல் காணலாம்.
தாங்கள் மற்றும் திருமதி சந்தியா ரவிசங்கர் ஆகியோர் முழுவதும் விவி மினரல் நிறுவனத்தையும் வைகுண்டராஜனையும் குறி வைத்து தாக்குவதை வழக்கமாக கொண்டவர்கள்.
தாங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பதாக கூறி உள்ளீர்கள். எது அனுமதிக்கப்பட்ட அளவு? அதற்கான அரசாணை அல்லது அறிவிக்கை எங்கே உள்ளது?
தாங்கள் திருவம்பலாபுரத்தில் மோனசைட் இருப்பு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். உண்மை. அவை இதர கனிமங்களை பிரித்த பிறகு அணுசக்தி  துறை  நிபந்தனை படி தனியாக பாதுகாத்து வைக்கப்பட்டு அணுசக்தி துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திலேயே மத்திய அமைச்சரால் பதிலாக question No. 2654  தெரியப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் அதனை தெரிவித்தால் பெரிய குற்றச்சாட்டாக பதிய முடியாது என்பதற்காக தாங்கள் அதனை விட்டிருக்கலாம்.
இப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மோனசைட் இருக்கும் பகுதிகள் எந்த தனியாருக்கும் குத்தகை வழங்கப்படுவது இல்லை. தனியாருக்கு குத்தகை வழங்கப்பட்டுள்ள பகுதிகள் அனைத்தும் குறைந்த அளவு மோனசைட் உள்ள பகுதிகள் ஆகும்.
எனவே எந்த இடத்திலும் கதிர்வீச்சை கக்கும் மோனசைட் குவித்து வைக்கப்படுவதில்லை. மாறாக பாதுகாப்பாக பாதுகாத்து வைத்துள்ளார்கள். திருவம்பலாபுரத்திலும் 23461 மெட்ரிக் டன் வைத்திருப்பதாக நிறுவனம் சொல்ல ஆனால் 23608 மெட்ரிக் டன் மோனசைட் இருப்பதாக அதிகாரிகள் கண்டுபிடித்தால் நிறுவனம் தவறு செய்யவில்லை என்று தானே அர்த்தம். அதனை நீங்கள் குறிப்பிட்டு இருக்கலாமே..
மத்திய அணுசக்தி துறை அதிகாரிகள் உங்களிடம் கூறினார்கள் என கூறி உள்ளீர்களே.. அவர்கள் இந்த மோனசைட் இருப்பு வைக்கும் போது கதிர்வீச்சு வராமல் இருக்க மேலே இரண்டு மீட்டர் கழிவு மணல் கொட்ட வேண்டும் என்ற விதி இருப்பதை அவர்களாக விட்டார்களா அல்;லது நீங்களாக விட்டீர்களா தெரியாது. அவ்வாறு உள்ள கழிவு மணலையும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராக அறிக்கையில் காட்ட வேண்டும் என்று சில அதிகாரிகளின் வற்புறுத்தலால் காட்டி இருக்கலாம். ஆனால் இது பற்றி சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்யும்.
ஒரு பொறுப்பு உள்ள பத்திரிக்கை குழுமத்தில் இருந்து வந்து உள்ள இந்து போன்ற ஒரு பத்திரிக்கை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு இனத்தை கையில் எடுத்து நீதித்துறையை அச்சுறுத்துவதற்கு இவ்வாறு செய்தி வெளியிட்டது வருந்ததக்கதே!!. இந்த செய்தியை வெளியிட இந்தியாவில் உள்ள தலைசிறந்த பத்திரிக்கை ஜாம்பவான் ஆன திரு.ராம் மற்றும் திருமதி மாலினி பார்த்தசாரதி போன்றவர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்பதும் விந்தையாக உள்ளது.
தயவு செய்து இந்த விளக்கத்தை உங்கள் பத்திரிக்கையில் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஆர்.பாலகிருஷ்ணன்
தலைவர்

தனியார் தாதுமணல் சுரங்க பகுதியில் பாதிப்பு இல்லை.

தனியார் தாது மணல் சுரங்க பகுதி மற்றும் தொழிற்சாலை உள்ள பகுதிகளில் விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுவதால் எந்த நோயும் கிடையாது. மாறாக மத்திய அரசு நடத்தும் தாது மணல் தொழிற்சாலையால் நோய் பாதிப்பு என பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகிறது. இதில் இருந்து விதிமுறைகளை யார் சரியாக கடைபிடித்து குவாரி செய்கிறார்கள் என்பது தெரியவில்லையா?

 

ஊடகதுறையில் நேர்மையை கடைபிடிக்கும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கொச்சினுக்கு வாழ்த்துக்கள்.

வழக்கம் போல் கேரளா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருவதை தெரிந்து, நீதித்துறையை எதிராக்குவதற்காக பொய் செய்திகளை வெளியிடும் கும்பல் வழக்கு விசாரணைக்கு வரும் 19-ம் தேதி கேரளா இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் விவி மினரல் நிறுவனம் கேரளாவில் இல்லீகல் மைனிங் செய்ததாக அங்குள்ள ஒரு காவல் அதிகாரி அறிக்கை செய்துள்ளார் என ஒரு தலைபட்சமாக ஒரு செய்தியை வெளியிட வைத்தார்கள். இது பற்றி தெரிந்த உடன் உண்மை நிலவரத்தை திரு. எஸ்.வைகுண்டராஜன் மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்தி அந்த அறிக்கை ஒரு தலைபட்சமானது. அதனை செயல்படுத்தக் கூடாது என கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட விபரத்தையும் அவ்வாறு பொய்யாக அறிக்கை தயாரித்து கொடுத்த திரு.உன்னிராஜன் என்ற அதிகாரி மீது குற்ற நடவடிக்கையும், துறை நடவடிக்கையும் எடுக்க ஆளுனர் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பிய விபரத்தையும் ஆளுனரின் கடிதத்தின் அடிப்படையில் கேரளா தலைமை செயலர் அந்த அதிகாரி மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உள்துறை செயலருக்கு உத்தரவு பிறப்பித்த விபரத்தையும் ஆதார ஆவணங்களோடு தெரியப்படுத்தினார். அவற்றை பரிசீலித்த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கொச்சின் 21.03.2018-லேயே இந்த விளக்கத்தை அவர்களது 6-வது பக்கத்தில் வெளியிட்டதோடு ஒரு தலைபட்சமான அறிக்கையின் அடிப்படையில் செய்தி வெளியிட்டதற்கு வருந்துகிறோம் என பெருந்தன்மையோடு குறிப்பிட்டுள்ளார்கள். ஜனநாயகத்தை காக்கும் 4-வது தூணான ஊடக துறையில் இன்னும் நேர்மையை கைவிடாமல் கடைபிடிக்கும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்துக்கள்.

Source : http://epaper.newindianexpress.com/1587027/The-New-Indian-Express-Kochi/21032018#page/6/1

 

ஒரு தாது மணல் தொழிற்சாலை நிறுத்தத்தால் மட்டும் தொழிலாளர்களின் சம்பளம் ரூபாய் 40 கோடி இழப்பு

தென்மாவட்டங்களில் பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. கூடன்குளத்திலும், இஸ்ரோவிலும் தமிழர்கள் தவிர பிற மாநிலத்தவர்களே அதிகம் வேலை பார்க்கிறார்கள். தமிழர்கள் அதிகம் வேலை பார்க்கும் தொழில் தாது மணல் தொழில் மட்டுமே. ஆற்று மணலை போல் கையகப்படுத்தி கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணத்தில் முன்பு ஆற்று மணல் மீது குற்றச்சாட்டு கூறி அரசு கொள்ளை அடிக்க எடுத்தது போல் தாது மணலுக்கு திட்டம் தீட்டப்படுகிறது. இதற்கிடையில் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாததால் மணவாளக்குறிச்சி தாது மணல் தொழிற்சாலையை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொழிற்சாலை இயங்காமல் சம்பளம் கொடுத்தால் 40 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என இந்திய அரசு நிறுவனம் மத்திய தொழிலாளர் நல வாரியத்திடம் முறையிட்டு இது பற்றி விசாரணை கடந்த 09.03.2018 அன்று டெல்லியில் நடந்தது. அதற்கு அந்த தொழிற்சாலையின் மினரல் ஒர்க்கர்ஸ் யூனியன் கொடுத்த மனுவிலும் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தாது மணல் தொழிற்சாலைகள் சட்ட விரோதமாக நிறுத்தப்பட்டுள்ளன. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தாது மணல் தொழிலாளர்கள் இந்திய அரசுக்கு அனுப்பிய மனுவை விசாரித்த இந்திய அரசு தொழிலாளர் நல ஆணையர் தாது மணல் தொழிற்சாலைகளை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே விசாரித்து இந்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்து விட்டார். அவர் தொழிற்சாலை நிறுத்தத்தால் இந்திய அரசுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் ஏற்றுமதி பாதிப்பு என்றும் தொழிலாளர்களுக்கு சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு என்றும் மாநில அரசுக்கும் சுமார் 700 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு தோறும் இழப்பீடு ஏற்படுகிறது என்றும் அறிக்கை சமர்பித்துள்ளார். ஆனால் ஆற்று மணல் போல் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் உள்ள அரசியல்வாதிகள் எப்படி கொள்ளை கூட்ட உறவினர்களை ஆணையராக நியமித்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், இறக்குமதி மணலையும் விற்க கூடாது என தடுத்தார்களோ அப்படியே இந்திய அரசு தொழிலாளர் நல ஆணையர் அறிக்கை சமர்பித்த பின்பும் கூட தொழிலாளர்களின் நலனில் எந்த அக்கரையும் செலுத்தாமல் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எல்லா தாது மணல் தொழிற்சாலைகளும் இயங்க வேண்டும். ஏராளமான தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும். இதற்கு உறுதுணையாக இருக்கும் அரசியல் கட்சிகளை தொழிலாளர் சமுதாயம் ஆதாரிக்க வேண்டும். இதனை பொது மக்களிடமும் தொழிளாளர்களிடமும் பரப்புவோம்.

 

புதிய தலைமுறை கனிம தொழிலுக்கு எதிராக திட்டமிட்டு பொய் செய்தி பரப்பி வருகிறது என்பதை ஆணிதரமாக வெளிபடுத்தி உள்ளார் தென்மாவட்ட கட்டு மர நாட்டு படகு மீனவர் சங்க தலைவர். இதோ அவர் புதிய தலைமுறைக்கு அனுப்பிய மின் அஞ்சல்

——— Forwarded message ———-
From: Raja Menavar Sangam <rajamenavar@gmail.com>
Date: 2015-02-21 13:54 GMT+05:30
Subject: Motivated False News at Puthiya Thalaimurai
To: news@gennowmedia.com
Cc: president@beachminerals.org, coastalenv.01@gmail.com, sworkersassociation@gmail.com
                                               நாள் : 21.02.2015

பெறுநர்

நிர்வாக ஆசிரியர்,
புதிய தலைமுறை தொலைகாட்சி,
சென்னை.

அன்புடையீர்,

 பரவலாக ஒரு பேச்சு எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களின் கல்வி கொள்ளையை வெளியே தெரியாமல் மறைப்பதற்காகவும் மக்களின் கவனத்தை திசை திருப்பவும் தான் புதிய தலைமுறை தொலைகாட்சி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு வேலையே உண்மைக்கு புறம்பான செய்திகளை மிகைப்படுத்தி வெளியிட்டு மக்கள் கவனத்தை திசைதிருப்புவது என பேச்சு வந்தது. அது பற்றி ரூபஸ்ரீ (http://ruba442.blogspot.in/) மற்றும் கல்வி கொள்ளைக்கு எதிரான மக்கள் இயக்கம் (http://pmaed.org/) ஆகிய இரண்டு இணைய தளங்களிலும் ஏராளமான பதிவுகள் இருந்தன. அரசு அலுவலகங்களின் ஆவணங்களும் இருந்தன. அதனை இது வரை நம்பாமல் இருந்தேன். ஆனால் நேற்று 20.02.2015 “நேர்பட பேசு” தாது மணல் பற்றி உள்ள கலந்துரையாடலை பார்க்;கும் போது எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் ஊழல்களை மறைப்பதற்காக தான் புதிய தலைமுறை தொலைகாட்சி செயல்படுகிறது என்பது நிதர்சனமாக தெரிந்தது.

 திரு.வைகுண்டராஜன் என ஒருவர் பெயரை சொல்லி கூலிக்கு மாறடிக்கும் திரு.இசக்கிமுத்து என்பவர் பேசினார். அவர் கடந்த சட்ட மன்ற தேர்தலில் திரு.வைகுண்டராஜனிடம் கேட்ட தொகை ரூபாய் 50 லட்சம். ஆனால் திரு. வைகுண்டராஜன் கொடுத்து 5 லட்சம். எனவே அந்த கோபத்தில் பேசுகிறார் என்பது தெளிவாக தெரிந்தது.

 யாரை திட்ட வேண்டுமோ அவர்களை திட்டுவதற்கு இந்த இசக்கிமுத்து, புதிய தலைமுறை, சன் தொலைகாட்சி, கலைஞர் தொலைகாட்சி ஆகிய 3-க்கும் ஒரு ஊதுகுழலாக பயன்பட்டு வருகிறார் என்பது எல்லோருக்குமே தெரியும். எனவே யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 ஆனால் புதிய தலைமுறை நேர்மை தவறி செய்தி வெளியிடுகிறது என்பதை நேற்று அப்பட்டமாக காண்பித்து விட்டது. முகநூலில் உள்ள செய்திகள் என ஸ்குரோலில் ஓட விட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை முகநூலை எடுத்து பார்த்தால் அதில் உள்ள கமெண்ட்டில் 1) வெற்றிவேல் 2) Ungal Nanban 3) Veera Sankar 4) R R Immanuvel Nadar 5) Nithya Kalyani 6) Selva Sekaran 7) Keep Walking 8) Sakthi Murugan 9) Veera Veera 10) Rajan Raj  மற்றும் பலர் மிகவும் ஆதாரமாக புதிய தலைமுறை உள்நோக்கத்தோடு செய்தி வெளியிடுகிறது என்பதை கண்டித்தும் அரசின் நடவடிக்கை சரியாக உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள். இதில் ஒரு செய்தி கூட ஸ்குரோலில் ஓடவில்லை. எனவே அந்த ஸ்கோரோலில் ஓடும் செய்தி அனைத்தும் புதிய தலைமுறை அலுவலகத்தில் சில போலி பெயர்களில் ஊழியர்களால் தயாரித்து ஓட விடப்படுவது என்பது தெளிவாக தெரிகிறது.

 45,000 ரூபாய் மட்டுமே ஆண்டு கட்டணமாக வசூலிக்க வேண்டும் என நிர்ணயித்து உள்ள நிலையில் 10 லட்ச ரூபாய்க்கு மேல் எஸ்.ஆர்.எம். நிறுவன கல்லூரிகள் வசூலி;க்கிறது. இது பற்றி புதிய தலைமுறை ஒரு நேர்பட பேசு நிகழ்ச்சி வைக்க வேண்டும். எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் பெற வேண்டிய துறைகளில் எந்த அங்கீகாரமும் இல்லை என்பதும் மேற்சொன்ன இணைதளங்களில் தெரிய வருகிறது.

 தீயணைப்பு துறையின் அனுமதி இல்லை என ஜவுளி வியாபாரிகளின் கடைகள் இடிக்கப்படுகின்றன. ஆனால் அதே தீயணைப்பு துறை அனுமதி இல்லாமல் இயங்கும் இந்த கல்வி வியாபாரியின் நிறுவனங்கள் மீது நடவடிக்கை இல்லை. ஆளுக்கு ஒரு நீதியா? இது பற்றியும் பேச வேண்டாமா?

 அதே போல் www.beachminerals.org என்ற இணையதளத்தை பார்வையிட்டால் மத்திய மாநில அரசு அதிகாரிகள், கூட்டு ஆய்வு செய்து புகார்கள் உண்மையல்ல என்பதை அறிக்கை செய்த ஆவணம் உள்ளது. ஆஷிஷ்குமார் கலெக்டர், தயாதேவதாசிடம் வேலை பார்க்கும் திரு.சுந்தரத்தால் தான் பொய் அறிக்கை எழுத வற்புறுத்தப் பட்டார் என்பது வீடியோவாக உள்ளது. திரு.சுந்தரமே காசுவாங்கி வேலை பார்க்கும் நபர் என்பதும் விக்டர் ராஜமாணிக்கமும் தயாதேவதாசிடம் பணியாற்றுபவர் என்பதும் வீடியோவில் உள்ளது.

 முதல்வர் உரையில் தயாதேவதாசின் 39 லட்சம் டன் கனிம கொள்ளை பற்றி பேசியதை தாங்கள் வேண்டும் என்றே இருட்டடிப்பு செய்தீர்களே? இதற்கு எத்தனை கோடி வாங்கினீர்கள்?

 மேற்கண்ட 39 லட்சம் டன் கனிம கொள்ளையை திமுக ஆட்சியில் பாதுகாத்து ஒரு பொய்யான அறிக்கையை கோட்டாட்சியர் மூலம் சமர்பித்தார்கள். அந்த அறிக்கையையும் நான் நேர்பட பேசு நிகழ்ச்சியில் கொண்டு வந்து நிரூபிக்கிறேன். இதனையும் உலக மக்கள் அனைவரும் பார்க்கட்டும்.

அதே போல் பொய் அறிக்கை கொடுத்ததற்காக திரு.ஆஷிஷ்குமார் மீது குற்ற வழக்கு தொடர கொடுக்கப் பட்ட மனு மற்றும் அனைத்து அலுவலர்களிடம் இருந்தும் தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெறப் பட்ட தகவல்கள் அனைத்தும் அந்த இணையதளத்தில் உள்ளது. எனவே இந்த புகாரே பொய் என்பதற்கு எல்லா ஆவணங்களும் அங்கு உள்ளது. ஆனால் ஒரு தனி நபரை அவருக்கு சந்தர்ப்பமே கொடுக்காமல் தொலைகாட்சியில் பேசுவதற்கு பெயர் தான் நேர்மையா?

நேற்று 20.2.15 அன்று மேலும் மனித உரிமை பாதுகாப்பு இயக்க வழக்கறிஞர் விளக்கம் என ஒன்றை கூறினீர்கள். அவர் மதுரையில் உள்ள இரண்டு வழக்கறிஞர்களோடு திருநெல்வேலியில் முகாமிட்டு வைகுண்டராஜனிடம் பொது நல வழக்கை வாபஸ் வாங்க இரண்டு  கோடி ரூபாய் பணம் கேட்டதும், வைகுண்டராஜன் அவ்வாறு தர முடியாது என மறுத்ததும் இறுதியில் ஒரு கோடி என அவர் இறங்கி வந்ததும் இது பற்றி மற்றவர்களிடம் கலந்து பேசாமல் முடிவு செய்ய முடியாது என வைகுண்டராஜன் கூறியதும் உண்மை. இதனையும் அந்த வழக்கறிஞரையும் வைத்தே உங்கள் தொலைகாட்சியில் விவாதம் நடத்துவோம். தாங்கள் தயாரா?

உயர்நீதிமன்றத்தின் ஒரு இடைக்கால தடை உத்தரவை வைத்து தான் பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்த பச்சமுத்து, தெலுங்கு ஆர்ஜின் என சிறுபான்மை நிறுவனமாக பதிவு பெற்றார். இந்த தகவல்களும்; மேல் அதிக தகவல்களும் இணையதளங்களில் உள்ளதோடு அல்லாமல் அசல் ஆவணங்களை நேர்பட பேசு விவாத நிகழ்ச்சியில் ஆஜர் படுத்துகிறேன். வெளியிட தயாரா என்பதை கூறுங்கள்.

உங்கள் தொலைகாட்சியில் ஒரே நேரத்தில் இந்த கல்வி கொள்ளை பற்றியும், கனிம கொள்ளை பற்றியும் நேர்பட பேசு நிகழ்ச்சி வைப்போமா? தயாதேவதாசிடம் பணம் வாங்கிய உங்கள் காம்பயரும், அதே போல் சந்தியாவும் சாவு வீட்டிற்கும், திருவிழாவிற்கும் போகும் கரகாட்டகாரன் இசக்கி முத்துவும் ஒரு கரையில் இருக்கட்டும். நானும் கல்வி கொள்ளைக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் இருந்து மேலும் இருவரும் வருகிறோம். நீங்கள் உங்கள் தரப்பு ஆவணங்களை காட்டுங்கள். நாங்கள் எங்கள் தரப்பு ஆவணங்களை காட்டுகிறோம். எதனையும் எடிட் செய்யாமல் அப்படியே உலக மக்கள் அனைவரும் பார்க்கும் படி வெளியிடுவோம். தங்கள் தொலைகாட்சி தயாரா?

என்று நேர்பட பேசு வைக்கலாம் என்பதை கூறுங்கள். நாங்களே தமிழகம் முழுவதும் பத்திரிக்கைகள் மூலம் அந்த நேரத்தை வெளியிடுகிறோம். எங்களுக்கு தேவை கல்வி கொள்ளை, கனிம கொள்ளை இரண்டையும் ஒரே நேரத்தில் பேசி எது உண்மை, எது பொய் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தயவு செய்து வெளியிடுங்கள்.

இப்படிக்கு
 
 

M. Raja

President,

Southern District Kattumara Nattu Padaku Fisherman Association,

Idinthakarai,

Radhapuram Taluk,

Tirunelveli District, Tamilnadu, India.

Mobile No :  91 9444271595