We are the Registered Organization of Southern Regional Mines and Mineral based workers welfare Association.
தமிழகத்தின் தென்மாவட்ட கடற்கரைகளில் மேற்கு தொடர்ச்சி மலையின் பாறையில் உள்ள அபூர்வ கனிமங்கள் இயற்கை மாற்றத்தால் மணல் வடிவில் நொறுங்கி அவை அங்கிருந்து உருவாகும் ஆறுகளால் அடித்து வரப்பட்டு கடலில் கலக்கப் பட்டவை. கடல் வேண்டாம் என வெளியே தள்ளுவதால் கடற்கரைகளில் வெகுகாலமாக படிந்து ஏராளமாக உள்ளது.
இதனை தொழில் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்த வேண்டும் என திருச்செந்தூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு.கே.டி.கோசல்ராம், இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினராக திரு.குமரி அனந்தன் ஆகியோர் பலமுறை பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பேசி இதனை தொழில் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்த அரசு ஆவண செய்ய வேண்டும் என கேட்டார்கள். தமிழக அரசும் இதனை சுரங்க பணி செய்ய ஏராளமான சுரங்க குத்தகைகளை வழங்கின. இதனால் மழை மறைவு பிரதேசமான இராதாபுரம் தாலுகாவில் ஏராளமான நபர்கள் கனிம தொழிலில் வேலை வாய்ப்பு பெற்றார்கள். இக்கனிம தொழிலில் முன்னணியாக விளங்கிய சில நாடுகள் இந்தியாவில் உள்ள சில தீய சக்திகளை கையில் எடுத்து அவர்களது ஏகபோகத்திற்கு போட்டியாக இந்தியா உருவாவதை தடுப்பதற்கு கனிம தொழிலுக்கு பல்வேறு வகையில் இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். இதனால் கனிம தொழிலாளரின் நலனை பாதுகாப்பதற்காக 1994-ம் வருடம் “இராதாபுரம் வட்டார கனிமம் மற்றும் கனிமம் சார்ந்த தொழிலாளர் நல சங்கம்” ஏற்படுத்தப் பட்டு பதிவு எண் 3/95 என 11.1.1995 அன்று சங்கங்கள் பதிவு சட்டப்படி பதிவு செய்யப்பட்டது.
அதன் பிறகு தென்மாவட்ட கடற்கரைகளில் ஏராளமான சுரங்க குத்தகைகள் வழங்கப் பட்டு ஏராளமான நபர்களை வேலை வாய்ப்பு பெற்றார்கள். அவர்களது வேண்டுதலின் படி சங்கத்தின் பெயர் மாற்றப் பட்டு “தென்மண்டல கனிமம் மற்றும் கனிமம் சார்ந்த தொழிலாளர் நல சங்கம்” என பெயர் மாற்றம் செய்யப் பட்டது.
சங்கம் கனிம தொழிலாளர் நலனுக்காக ஏராளமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த சுரங்க பணி என்பது விவசாய பணியை விட இலகுவானது. இதற்கு வெடி பொருளோ டிரில்லிங் மெஷின் போன்ற கனரக இயந்திரங்களோ தேவை இல்லை. விவசாய பணியை போல் மேலே படிந்துள்ள மணலை வழித்து எடுப்பது மட்டுமே இதில் சுரங்க பணி என அழைக்கப் படுகிறது. ஆனால் இந்திய அரசு ‘உலோக தாது சுரங்க விதிமுறைகள் 1961 (Metalliferous Mines Regulations, 1961) இந்த இலகுவான சுரங்க பணிக்கும் பொருந்தும் என அறிவித்தது. அதே போல் இப்பணியில் வெடி வைக்க வேண்டிய தேவையே இல்லாத நிலையில் இந்த கனிம சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் ‘மைன்ஸ் மேட்’ (Mines Mate) ‘சுரங்க போர்மேன்’ (Mines Foreman) தேர்வு எழுத வேண்டும் என்றால் ‘வெடி வைக்கும் பயிற்சி சான்று’ (Blaster Certificate) வேண்டும் என வலியுறுத்தி இவர்களை வேறு வெடி வைக்கும் சுரங்களில் போய் பயிற்சி எடுத்து Blaster Certificate வாங்கினால் மட்டுமே அவர்களை தேர்வு எழுத அனுமதிப்பதாக இந்திய அரசு சுரங்க பாதுகாப்பு துறை தலைமை இயக்குனர் (Director General of Mines Safety) தெரியப்படுத்தினார்.
இதனை விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு Dhanbad, Director of Miens Safety அலுவலகத்தில் உள்ள சுரங்க தேர்வு குழு தலைவருக்கு 11.02.2002 அன்று ஒரு விரிவான கடிதம் எழுதப்பட்டது. அதன் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபேராணை மனு எண் 8752 of 2002 தாக்கல் செய்து ஒரு ஆணை பெறப் பட்டது. அதன் படி மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்ற 4 வார காலத்திற்குள் மேற்கண்ட மனுவில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என காலகெடு நிர்ணயித்து ஆணை பிறப்பிக்கப் பட்டது.
அதன் பிறகும் தொழிலாளர்களுக்கு எதிராகவே சுரங்க பாதுகாப்பு துறை இயக்குனரகம் ஆணை பிறப்பித்ததால் இச்சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு இடைக்கால ஆணை பெறப்பட்டது.
அதே போல் தொழிலாளர் நலனுக்கு விரோதமாக எப்பொழுது எல்லாம் சூழ்நிலை அல்லது செயல்பாடுகள் உள்ளதோ அப்போது எல்லாம் தொழிலாளர் நலனை பாதுகாக்க உரிய அலுவலகங்களை அணுகி அவ்வப்போது வழக்கு தொடர்ந்து அவர்களது நலனை பாதுகாத்து வந்துள்ளது.
இந்த பணி இனி மேலும் தொடரும்…..