தன்வினை தன்னைச் சுடும்

தென்மேற்கு பருவமழை காலத்தில் அரபிக்கடல் கொந்தளிப்புடன் காணப்படுவது இயற்கை. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் ஜீன் முதல் செப்டம்பர் மாதம் வரை கடலுக்கு செல்லுவதை நிறுத்துவதும் வழக்கம். தொழில் நிறுவனங்களில் மாமூல் கேட்டு தரவில்லை என்றால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புகார் மனுக்களாக எழுதி தள்ளுவார்கள். ஆனால் படிப்பறிவு அதிகம் உள்ள குமரி மாவட்டத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். தனியார் நிறுவனங்களுக்கு எதிராக முதன் முதலில் இவர்களை கொம்பு சீவி விட்டது மணவாளக்குறிச்சி இந்தியன் ரேர் எர்த் நிறுவனம். தற்போது தன்வினை தன்னை சுடுகிறது.

உலக கையிருப்பில் மூன்றில் ஒரு பங்கு கனிமங்களை வைத்துள்ள இந்தியா அதனை வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தவில்லை.

கனிமம் மற்றும் உலோகங்களுக்கான சர்வதேச கவுன்சில் கனிமம் மற்றும் உலோக உற்பத்திக்கு முயற்சி எடுத்து வளர்ந்த 18 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உலகின் மொத்த கையிருப்பில் மூன்றில் ஒரு பங்கு தாது மணல் கனிமங்களை கையிருப்பாக கொண்டுள்ள இந்தியா இடம் பெறவில்லை என்பது வருத்தமான விசயம். இதற்கு அரசு மட்டும் காரணம் அல்ல. தங்கள் வளர்ச்சிக்காக பொய் செய்திகளை மிகைப்படுத்தி வெளியிடும் சில ஊடகங்களும் சுய லாபத்திற்காக அரசின் பொது கொள்கைகளை வளைக்கும் சில அரசியல்வாதிகளும் கூட காரணம்.

நன்றி. பேராசிரியர் சீனிவாசன் பாலகிருஷ்ணன்

சாதுவான தாதுமணல் சுரங்க பணிக்கும், இதர சுரங்க பணிக்கும் உள்ள வித்தியாசம்

சுரங்கங்களில் பைப் லைன் வெடி என தொடர்ச்சியாக பல நூறு மீட்டர் நீளத்திற்கு வெடி வைத்து தகர்க்கும் முறை உள்ளது. இதில் பூமி அதிரும். சுற்றுச்சூழல் மாசுபடும். ஒலி மாசு, காற்று மாசு ஏற்படும். ஆனால் தாது மணல் சுரங்க பணிக்கு இம்மாதிரி கேடான எந்த தேவையும் இல்லை.

தமிழகத்தை முந்துகிறது கேரளா

அகில இந்திய அளவில் தாது மணல் உற்பத்தியில் தமிழகம் தான் முதலிடம் பெற்றது. தமிழகத்தில் 50,000 நபர்களுக்கு மேல் நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு தரும் தாது மணல் தொழிலை நிறுத்தி வைத்துள்ளார்கள். ஆனால் அண்டை மாநிலமான கேரளா மத்திய அரசின் Geological Survey Department  -க்கு அழுத்தம் கொடுத்து கேரளாவில் உள்ள தாது மணல் இருப்பு விபரங்களை ஆய்வு செய்து அறிக்கை தர வற்புறுத்தி அனுமதியும் பெற்றது. இதில் முக்கியம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை முன்னேற்ற ஆய்வு கூட்டமும் நடத்தி வருகிறது. தமிழக அரசு பல ஆண்டு காலமாக ஆற்றுமணல் மட்டும் போதும் தங்கள் வருவாய்க்கு என வாழா இருந்ததன் விளைவு 50,000 தொழிலாளர்கள் பணி இழப்பு, மாநில அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரி இழப்பு சுமார் 780 கோடி ரூபாய். இந்த விபரங்களை மாண்புமிகு தமிழக முதல்வரிடமும் நிதித்துறை அமைச்சரிடமும் திட்டமிட்டு மறைத்த அதிகாரிகள் பற்றி என்ன சொல்ல..!

தாதுமணல் தொழிலை ஊடகங்கள் தான் கெடுத்து வருகிறது என கேரளா சபாநாயகர் பேசிய செய்தியும் தற்போது சிந்திக்க வேண்டியதே.. இணைப்பு கீழே.

Link : http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/kerala-assembly-speaker-bats-for-mineral-beach-sand-mining-lng-pipeline/articleshow/57289159.cms

 

 

ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியாவின் கனிம இருப்பு ஆய்வறிக்கை

ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியா, இந்தியா முழுவதும் உள்ள சில கனிமங்கள் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. அது பொது மக்கள் மற்றும் உறுப்பினர்கள் பார்வைக்கு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை

தமிழக அரசு மாநிலத்தின் நிதி நிலைமை பற்றி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த வெள்ளை அறிக்கையில் கண்ட கீழ்கண்ட படங்கள் முக்கியமானது. இதனை பார்த்தால் 2013 முதல் மாநிலத்தின் நிதி நிலை மோசமாகி வருவதை காணலாம். தவறான பொய்யான புகார்களால் தாது மணல் சுரங்க பணி நிறுத்தப் பட்டு ஒரே நேரத்தில் 50,000 தொழிலாளர்கள் பணி இழந்தது இதே 2013-ம் ஆண்டு தான். இதுவே மாநிலத்தின் நிதி நிலை மோசமாவதற்கு தாது மணல் சுரங்க பணி நிறுத்தம் ஒரு காரணம் என்பதை நிரூபிக்கும். அதே பட்டியலை பார்வையிட்டு வரும் போது 2019 முதல் 2021 வரை உள்ள கால கட்டத்தில் நிதி நிலை மிக மிக மோசம் அடைந்து உள்ளது. 2019-ல் தான் மத்திய அரசு தவறான அறிவுரையால் இந்தியா முழுவதும் உள்ள சுமார் 24 சதவீத சுரங்க குத்தகைகளை ஒரே நேரத்தில் ரத்து செய்து உத்தரவிட்டது. அதாவது இந்தியா முழுவதும் உள்ள 328 பெருங்கனிம சுரங்க குத்தகைகளில் 72 சுரங்க குத்தகைகளை மத்திய அரசு ரத்து செய்தது. இதில் 64 சுரங்க குத்தகைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இப்போது புரிந்து இருக்கும். தமிழகம் நிதி நிலையில் இவ்வளவு மோசம் ஆவதற்கு என்ன காரணம் என்பது. அப்போதைய தமிழக தொழிற்துறை மந்திரி தன் சொந்த பகைக்காக மாநில அரசை கலந்து பேசாமல் மத்திய அரசு சுரங்க குத்தகைகளை ரத்து செய்தது தவறு என மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை. ஆனால் தற்போதைய அரசு நிதிநிலையை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே இந்த நடவடிக்கையும் எடுக்கும் என நம்புவோம். தமிழக அரசை கலந்து பேசாமல் தமிழகத்தின் கருத்தை குறிப்பிட்டு கேட்காமல் தமிழகத்தில் உள்ள சுமார் 64 சுரங்க குத்தகைகளை மத்திய அரசு ரத்து செய்தது தவறு. அந்த ரத்து உத்தரவை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசு சுரங்கத்துறைக்கு கடிதம் எழுத வேண்டும். மேற்கண்ட 64 சுரங்க குத்தகைகளும் 50,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியதோடு ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் அளவிற்கு தாது மணல் சுரங்கம் செய்து ஏற்றுமதி செய்யும். இதில் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி. 10 சதவீதம் மத்திய அரசுக்கு மட்டும் சொந்தமான ஏற்றுமதி வரி. எனவே ஆண்டுக்கு 1400 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி இழப்பீடும், 500 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு ஏற்றுமதி வரி இழப்பீடும் மற்றும் மாநில அரசுக்கான 3 சதவீத ராயல்டி மற்றும் அதன் மீதான வரி வகையில் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் மாநில அரசுக்கு நட்டம்.

50000 தொழிலாளர்களும் குறைந்த பட்சம் ரூபாய் 10000-த்தில் இருந்து அதிக பட்சம் ரூபாய் 30,000 வரை சம்பளம் பெறுபவர்கள். இந்த 50000 தொழிலாளர்களும் அவர்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை குடும்ப வாழ்வாதாரத்திற்கு தேவையான உணவு பொருட்கள், துணி, கல்வி செலவு போன்ற செலவுகளுக்கு செலவிடுவதன் மூலமும், ஆண்டுக்கு சுமார் 400 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி கிடைக்கும். இதனை வைத்து உபதொழில் மூலம் மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாயும் மற்றும் இதன் மூலம் வேலை வாய்ப்பு பெறுபவர்களும் இதில் பாதிக்கப் பட்டு விட்டார்கள். எனவே மாநில அரசின் இந்த நிதி சுமை மோசமாவதற்கு முந்தைய மாநில அரசு மட்டும் அல்ல. தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கையும் ஒரு காரணி.

எனவே ஒட்டு மொத்தமாக 50000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தமிழக அரசின் நிதி நிலையை சரி செய்யவும், சரியான அலுவலர்களை மாநில அரசு உரிய இடத்தில் நியமித்து இந்த தொழிலை மீண்டும் மறு உருவாக்கம் செய்ய வேண்டியது அவசியம்.

மத்திய அரசின் தவறான உத்தரவால் 1994-ல் இருந்து இந்தியாவில் தாது மணல் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது 3-வது இடத்திற்கு சென்று விட்டது. உலக அளவில் தாது மணல் உற்பத்தியில் முதல் இடம் வகித்த இந்தியா தற்போது 5-வது இடத்திற்கு சென்று விட்டது. இது எல்லாம் திறமை இல்லாத அதிகாரிகளை முக்கியமான பணியிடங்களில் பணி அமர்த்தியது தான் காரணம் என்றால் அதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. அதிர்ஷ்ட வசமாக தமிழ்நாட்டிற்கு பிரதிபலன் எதிர்பாராத ஒரு நிதி அமைச்சர் கிடைத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இம்மாதிரியான நிதி நெருக்கடியில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் நல்ல நிதியமைச்சரை நியமிக்க வேண்டும் என்பதை தெரிந்து நியமித்து உள்ளார். எனவே தாதுமணல் தொழிலாளர்களின் எதிர் காலத்தை நிதியமைச்சர் கவனத்தில் கொள்வார் என நம்புவோம்.

Implementing ‘MAKE IN INDIA’ Scheme in Rare Earths Production will make India No.1 among the world

In January and February alone, China exported 3,500 tons of Rare Earth Elements. Japan imports 32 percent of its demand and the United States imports 38 percent from China. Similarly, Korea, Russia, Taiwan, Thailand and Indonesia also import Rare Earth Element from China.

China exports at least Rs. 1,500 crore worth of these Rare Earth Elements annually to other countries.

In India, since only Government Company IREL alone engaged in Production of Rare Earths, it could not compete with China, and w.e.f. 2004 IREL have stopped the Rare Earths Production. They have produced only 5 tonnes in 3 years. India, which has 35 per cent of the world’s Rare Earths Reserves, will implement the Make in India Programme to increase Rear Earth Production in order to Earn Foreign Exchange and meantime to become self-sufficient in Nuclear Fuel. This will make India No.1 Rare Earth Producer and Exporter among the world.

Will the Prime Minister implement the Make in India Programme in Rare Earths Production?

Source : http://investorintel.com/technology-metals-intel/chinese-rare-earths-exports-dramatically-decrease-while-global-demand-for-rare-earth-products-increase/