Tag Archives: garnet

ஊடகதுறையில் நேர்மையை கடைபிடிக்கும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கொச்சினுக்கு வாழ்த்துக்கள்.

வழக்கம் போல் கேரளா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருவதை தெரிந்து, நீதித்துறையை எதிராக்குவதற்காக பொய் செய்திகளை வெளியிடும் கும்பல் வழக்கு விசாரணைக்கு வரும் 19-ம் தேதி கேரளா இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் விவி மினரல் நிறுவனம் கேரளாவில் இல்லீகல் மைனிங் செய்ததாக அங்குள்ள ஒரு காவல் அதிகாரி அறிக்கை செய்துள்ளார் என ஒரு தலைபட்சமாக ஒரு செய்தியை வெளியிட வைத்தார்கள். இது பற்றி தெரிந்த உடன் உண்மை நிலவரத்தை திரு. எஸ்.வைகுண்டராஜன் மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்தி அந்த அறிக்கை ஒரு தலைபட்சமானது. அதனை செயல்படுத்தக் கூடாது என கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட விபரத்தையும் அவ்வாறு பொய்யாக அறிக்கை தயாரித்து கொடுத்த திரு.உன்னிராஜன் என்ற அதிகாரி மீது குற்ற நடவடிக்கையும், துறை நடவடிக்கையும் எடுக்க ஆளுனர் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பிய விபரத்தையும் ஆளுனரின் கடிதத்தின் அடிப்படையில் கேரளா தலைமை செயலர் அந்த அதிகாரி மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உள்துறை செயலருக்கு உத்தரவு பிறப்பித்த விபரத்தையும் ஆதார ஆவணங்களோடு தெரியப்படுத்தினார். அவற்றை பரிசீலித்த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கொச்சின் 21.03.2018-லேயே இந்த விளக்கத்தை அவர்களது 6-வது பக்கத்தில் வெளியிட்டதோடு ஒரு தலைபட்சமான அறிக்கையின் அடிப்படையில் செய்தி வெளியிட்டதற்கு வருந்துகிறோம் என பெருந்தன்மையோடு குறிப்பிட்டுள்ளார்கள். ஜனநாயகத்தை காக்கும் 4-வது தூணான ஊடக துறையில் இன்னும் நேர்மையை கைவிடாமல் கடைபிடிக்கும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்துக்கள்.

Source : http://epaper.newindianexpress.com/1587027/The-New-Indian-Express-Kochi/21032018#page/6/1

 

ஒரு தாது மணல் தொழிற்சாலை நிறுத்தத்தால் மட்டும் தொழிலாளர்களின் சம்பளம் ரூபாய் 40 கோடி இழப்பு

தென்மாவட்டங்களில் பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. கூடன்குளத்திலும், இஸ்ரோவிலும் தமிழர்கள் தவிர பிற மாநிலத்தவர்களே அதிகம் வேலை பார்க்கிறார்கள். தமிழர்கள் அதிகம் வேலை பார்க்கும் தொழில் தாது மணல் தொழில் மட்டுமே. ஆற்று மணலை போல் கையகப்படுத்தி கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணத்தில் முன்பு ஆற்று மணல் மீது குற்றச்சாட்டு கூறி அரசு கொள்ளை அடிக்க எடுத்தது போல் தாது மணலுக்கு திட்டம் தீட்டப்படுகிறது. இதற்கிடையில் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாததால் மணவாளக்குறிச்சி தாது மணல் தொழிற்சாலையை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொழிற்சாலை இயங்காமல் சம்பளம் கொடுத்தால் 40 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என இந்திய அரசு நிறுவனம் மத்திய தொழிலாளர் நல வாரியத்திடம் முறையிட்டு இது பற்றி விசாரணை கடந்த 09.03.2018 அன்று டெல்லியில் நடந்தது. அதற்கு அந்த தொழிற்சாலையின் மினரல் ஒர்க்கர்ஸ் யூனியன் கொடுத்த மனுவிலும் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தாது மணல் தொழிற்சாலைகள் சட்ட விரோதமாக நிறுத்தப்பட்டுள்ளன. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தாது மணல் தொழிலாளர்கள் இந்திய அரசுக்கு அனுப்பிய மனுவை விசாரித்த இந்திய அரசு தொழிலாளர் நல ஆணையர் தாது மணல் தொழிற்சாலைகளை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே விசாரித்து இந்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்து விட்டார். அவர் தொழிற்சாலை நிறுத்தத்தால் இந்திய அரசுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் ஏற்றுமதி பாதிப்பு என்றும் தொழிலாளர்களுக்கு சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு என்றும் மாநில அரசுக்கும் சுமார் 700 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு தோறும் இழப்பீடு ஏற்படுகிறது என்றும் அறிக்கை சமர்பித்துள்ளார். ஆனால் ஆற்று மணல் போல் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் உள்ள அரசியல்வாதிகள் எப்படி கொள்ளை கூட்ட உறவினர்களை ஆணையராக நியமித்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், இறக்குமதி மணலையும் விற்க கூடாது என தடுத்தார்களோ அப்படியே இந்திய அரசு தொழிலாளர் நல ஆணையர் அறிக்கை சமர்பித்த பின்பும் கூட தொழிலாளர்களின் நலனில் எந்த அக்கரையும் செலுத்தாமல் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எல்லா தாது மணல் தொழிற்சாலைகளும் இயங்க வேண்டும். ஏராளமான தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும். இதற்கு உறுதுணையாக இருக்கும் அரசியல் கட்சிகளை தொழிலாளர் சமுதாயம் ஆதாரிக்க வேண்டும். இதனை பொது மக்களிடமும் தொழிளாளர்களிடமும் பரப்புவோம்.

 

தாது மணலில் அணு கனிமம் – கதிரியக்கம் என்ற அபாண்ட குற்றச்சாட்டு- உண்மை நிலை

அன்னிய சக்திகள் இந்திய தாது மணல் உற்பத்தியாளர்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் சதி திட்டம் செய்து அவர்களுக்கு எதிராக அபாண்டமான குற்றச்சாட்டுகளை பெரும் செலவு செய்து கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். விளைவு இதனால் இந்திய அரசுக்கு பெறுத்த நட்டம். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு, தாது மணல் கனிமங்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டும், கடலில் இழுத்து செல்லப்பட்டும் வீணாகின்றன. மேலும் கடல் உள்ளே இழுத்து செல்லப்படும் கனிமங்கள் பக்கத்து நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் ஆபத்தும் உள்ளது. இதனால் இந்தியாவின் கடல் வளம் இந்திய மீனவர்களுக்கு மீன் படி உரிமையை மறுக்கும் இலங்கையால் அனுபவிக்கப்படுகிறது.

அதிகாரிகளையும் நீதித்துறையையும் மிரட்டுவதற்கு மிகப் பெரிய குற்றச்சாட்டான கதிரிக்கம் என்ற ஒரு பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் கதிரியக்கத்திற்கும் தாது மணல் குவாரி அல்லது சுத்தப்படுத்துதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தாது மணல் குவாரி செய்யும் போது அரை சதவீதத்திற்கும் குறைவாக மோனசைட் என்னும் ஒரு கனிமம் கிடைக்கும். இந்த மோனசைட் சாதாரண மணலிலும், கல்லிலும், கிரானைட் உட்பட பூமியின் எல்லா பகுதியிலும் இயற்கையாகவே கிடைக்கும். அதுவும் சாதாரண மணல் மற்றும், கல், கிரானைட் பாறை முதலியவற்றில் கிடைப்பவை தாது மணலில் கிடைப்பதை விட கூடுதலான அளவு. இதனால் எந்த பாதிப்பும் யாருக்கும் கிடையாது. இதனால் பாதிக்கப் பட்டதாக கூறுவது எல்லாம் இட்டு கட்டிய கதை. உலகிலேயே அதிகமான மோனசைட் கிடைக்கும் இடம் மணவாளக்குறிச்சி. அங்கு இந்திய அரசு நிறுவனம் தான் குவாரி செய்து வருகிறது. அந்த பஞ்சாயத்து முழுவதும் மீனவர்கள் நிறைந்த பஞ்சாயத்து. மீனவ சமுதாய பெண் ஒருவர் தான் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இந்த உலகிலேயே அதிக மோனசைட் உள்ள மணவாளக்குறிச்சியில் தான் மோனசைட்டையும் குவாரி செய்து பிரித்து எடுக்கிறார்கள். அங்கு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கடந்த 50 வருடங்களாக தலைமுறை தலைமுறையாக அங்கு வசதியாக வாழ்ந்து வருவதாகவும் கூறுவதை கேட்கலாம் ( )

இத்தொழிலில்; ஈடுபட்டுள்ள எந்த தொழிலாளியோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களோ அல்லது இந்த தொழிற்சாலைகளை ஒட்டி உள்ள மக்களோ கதிர்வீச்சு நோய் எதிலும் பாதிக்கப்படவில்லை. மாறாக இதனை மிகைப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த ஊரில் ஒருவருக்கு இந்த நோய், இந்த ஊரில் ஒருவருக்கு அந்த நோய் என இட்டு கட்டி எழுதுவார்கள். எந்த ஊரில் தான் யாருக்கு நோய் இல்லை. உலகம் முழுவதும் கேன்சர் உள்ளது. உலகம் முழுவதும் சிறுநீரக பாதிப்பு உள்ளது. இது சிறுவயதில் பள்ளிக்கு செல்வதற்கு தலைவலி, வயிற்று வலி என்ற ஆசிரியரால் கண்டுபிடிக்க முடியாத காரணத்தை கூறி பள்ளியை ஏமாற்றுவது போன்றது. இருப்பினும் தொழிளாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கதிரியக்கம் என்ற பொய் பிரச்சாரம் பற்றி தெரிய வேண்டும் என்பதற்காக இருதயம் என்னும் மீனவ சமுதாயத்தை சேர்ந்த விஞ்ஞானி “நான் இந்தியன்” என்ற பெயரில் கதிரிக்கம் பற்றி பதிவு செய்துள்ளவைகளை கீழே பதிவிட்டுள்ளோம்.

கதிரியக்கம் என்றால் என்ன – ஒரு அறிவியல் பார்வை

கதிரியக்கம் ( Radiation )  என்ற வார்த்தையை எல்லாரும் ஒரு பயத்துடனே பார்க்கிறார்கள்.   சில தினங்களுக்கு முன்பு நான் சில நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த போது ,  எல்லாரும் கதிரியக்கம் என்ற Radiation யை குறித்து மிகவும் பயந்து பேசினார்கள்.   என்னுடைய முறை வந்தபோது நான் பொதுவாக அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்டேன் .
கதிரியக்கம் ( Radiation )  என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள் ?    அவர்கள் அளித்த பல பதில்களை பார்த்து நான் கொஞ்சம் வியந்துதான் போனேன்.  ஏன் எனில் ஒருவர் சொன்னார் Radiation என்பது விஷம்என்றார் ( அவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணி புரிகிறார்) .  இன்னும் ஒருவர் சொன்னார் Radiation என்பது ஒரு வாயு ( Gas ) , அது மக்களை கொல்லும் சக்தி படைத்தது என்று.    அன்று தீர்மானித்தேன் இந்த radiation என்ற கதிரியக்கத்தை குறித்து ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று.   புரிந்து கொள்ளுவதற்கு கொஞ்சம் கடினமான பகுதி என்றாலும் , எளிதில் விளங்ககூடிய அளவில் இந்த கட்டுரையை எழுத நான் யாசிக்கிறேன்
Radiation  அல்லது கதிரியக்கம் என்றால் என்ன ?
இயற்பியலின் படி கதிரியக்கம் என்பது ஒரு ஊடகம் அல்லது பரந்த வெளியாக செல்லும் ஆற்றல் அல்லது அலைகள் அல்லது சக்திமிகுந்த சிறு துகள்கள் என்று வரையறுக்கபடுகிறது.
இந்த கதிரியக்கம் அயனியாக்க  ( Ionizing )  மற்றும் அயனியாக்கம் அல்லாத ( Non Ionizin ) என்று இரு வகைப்படும்.
இதில் அயனியாக்க கதிரியக்கம் ( Ionizing  Radiation )  என்பதை குறித்த அச்சமே நிலவுவதால் அதை குறித்தே இந்த கட்டுரையில் எழுத அதிகம் கவனம் கொண்டுள்ளேன்.   இந்த வகையில் கீழ்க்கண்ட கதிரியக்கங்கள் வருகிறது…
1 .   ஆல்பா கதிர்கள்  ( Alpha Rays )
2     பீட்டா  கதிர்கள்  ( Beta Rays )
3     காமா கதிர்கள் ( Gamma Rays )
4     நியூட்ரான்  கதிர்கள் ( Neutraan Rays )
5     X  கதிர்கள்   ( X  Rays  )
6     காஸ்மிக் கதிர்கள் ( Cosmic Rays )
இந்த கதிர்கள் ஊடுருவி செல்லும் சக்தி படைத்ததால் மனுக்குலத்திற்கு தீங்கு விளைவிக்கவும் இவைகளால் முடியும் என்ற என் கருத்தை நண்பர்கள் ஏற்று கொண்டவுடன் என்னை பார்த்து கேட்ட கேள்வி என்ன தெரியுமா ? 
அதனால் தான் சொல்லுகிறோம் அணு மின் நிலையங்கள் வேண்டாம் என்று  .
நான் அவர்களிடம் கேட்டேன் கதிர்வீச்சின் பிறப்பிடமே அணுமின் நிலையங்கள் தான் என்று நினைக்கிறீர்களா ?
உடனே கோரசாக பதில் வந்தது ” ஆம் என்று “
இந்த கதிரியக்கங்கள் பெருமளவு இயற்கையாகவும் ,  கொஞ்சம் செயற்கையில் இருந்தும் மனிதனுக்கு கிடைக்கிறது.   என்ற என் பதிலுக்கு ஒரு சேர வியப்பும் ,  எதிர்ப்புகளும் எழும்பியதால் இன்னும் கொஞ்சம் விளக்க ஆரம்பித்தேன்.
Radiation அல்லது கதிரியக்கம் என்பது  சிவேர்ட் ( Sievert ) என்ற அலகினால் அளக்கப்படுகிறது.   அதனுடைய பழைய அளவு ரெம் ( Rem ) என்ற அலகினால் அளக்கப்பட்டது.   இந்த அலகுகளின் மாற்றம் குறித்து கீழே காணுங்கள்
1  ரெம் (Rem)                     =   0 .01   சிவேர்ட்                   =      10  மில்லி சிவேர்ட்
1 எம்ரெம் (mrem )           =   0 .01  மில்லி  சிவேர்ட்   =      10   மைக்ரோ சிவேர்ட்
1  சிவேர்ட்                         =   100  ரெம்
1  மில்லி சிவேர்ட்        =   100  mrem                              =     0.1  ரெம்
1  மைக்ரோ சிவேர்ட் =  0.1  mrem

(நன்றி :  http://en.wikipedia.org/wiki/Sievert )

மனிதன் பெறுகின்ற கதிரியக்கத்தில் பெருமளவு , அதாவது 81 % இயற்கையில் இருந்து பெறுகிறான்.   அந்த 81 சதவீதம் இப்படி பிரிக்க படுகிறது.   இயற்கையாக பூமியின் வளிமண்டலத்தில் நிறைந்துள்ள ராடான் 55 % ,   இயற்கையாக கடல் , மண்  , தாது பொருட்கள் இவற்றில் இருந்து 15  சதவீதம் மற்றும்  இயற்கையாக மனிதன் உடலுக்குள் ( Tritium  , Carbon – 14  , மற்றும் பொட்டாசியம் – 40  )  11  சதவீதம் .  இது அநேகம் பேருக்கு ஆச்சரியமாக தான் இருக்கும் என்பதி சந்தேகம் இல்லை .
மீதம் 19  சதவீத கதிரியக்கத்தை மனிதன் செயற்கை மூலமாக பெறுகிறான் .  அதாவது மருத்துவ சேவைகளினால் 15  சதவீதமும் ,  நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களினால் ( டிவி , கம்ப்யூட்டர் , மற்றும் பல )  3  சதவீதமும்  , மீதம் 1  சதவீதம்  அணு மின் நிலையங்கள்  , ஆகாய விமான பிரயாணங்கள் போன்றவற்றின் மூலம் கிடைக்கிறது என்பது நமது எண்ணங்களை எல்லாம் தவிடு பொடியாக்குகிறது அல்லவா .?
இப்பொழுது யாரோ ஒருவர் கேட்கிறார்கள் மருத்துவ துரையின் மூலமாக கதிரியக்கம் நமக்கு கிடைக்குமா ..?  எப்படி இதை நம்ப முடியும் என்று ..?   நம்புங்கள் .. சில ஆதாரங்களை தருகிறேன் ..
மார்பக எக்ஸ்ரே    (  14   x   17   இன்ச் )                  =    15  mrem
பல் எக்ஸ்ரே  ( 3  இன்ச் சுற்றளவு )                      =    300 mrem
முதுகு தண்டு எக்ஸ்ரே ( 14   x   17   இன்ச் )     =    300 mrem
thyroid uptake study                                                             =   28000  mrem
Thyroid  Oblation                                                                  =   18000000  mrem
ஒரு நாளைக்கு நீங்கள் 20  சிகரெட் புகைப்பீர்கள் ஆனால் 280 mrem  /  day கதிரியக்கத்தை நீங்கள் பெறுகிறீர்கள் என்றபொழுது அநேகரின் முகத்தில் ஈயாடவில்லை.
ஒரு முறை 30000  அடி உயரத்தில் பறக்கும் ஒருவர் , தன் ஆயுள் காலம் முழுவதும் அணுமின் நிலையத்தில் வேலைபார்க்கும் ஒரு தொழிலாளியை விட கதிரியக்கத்தை அதிகமாக பெறுகிறார் ( நன்றி  : The Upside Down , Book of Nuclear Power  , Page No : 148  , Written by . Mr  Jha )
நாம் எல்லாரும் கையில் வைத்திருக்கும் அலைபேசிகளின் கதிரியக்கமும் ,  அவற்றிக்கு பயன்படும் அலைபேசி கோபுரங்களும் கதிரியக்கத்தை தாராளமாக நமக்கு தருகின்றன ( கொஞ்சம் http://www.ciol.com/Networking/News-Reports/Mobile-tower-radiation-fear-grips-Delhi/137567/0/ படியுங்களேன் )
முடிவுரை :   இன்னும் இவைகளை குறித்து எழுத வேண்டுமெனில் ஏராளம் இருக்கிறது  ,  ஆனாலும் 99  சதவீத கதிரியக்கத்தை நாம் தாராளமாக ஏற்று கொண்டு உள்ளோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்றபோது என் நண்பர்கள் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தலைகளை அசைத்தார்கள்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆக்கப்பூர்வமான் கேள்விகளை தொடுக்கலாமே ..   நாம் விவாதிப்போம் …  நன்றி