தாது மணல் தொழிலுக்கு எதிராக வேண்டும் என்றே தவறாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது பொது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக சில நிழல் உலக மணல் மாபியாக்களால் அரசின் ஆதரவோடு செய்யப்படுகிறது. தமிழக அரசு ஒரு லோடு மணலை ரூபாய் 700 என நாங்கள் விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டு அரசுக்கு 89 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது என மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளது. ஆனால் உண்மையில் நடப்பது பொதுப்பணித்துறை என்ற பெயரில் முன்பு சசிகலாவின் உறவினரான திவாகரன் மற்றும் அவரது கூட்டத்தால் ஆற்று மணல் சூறையாடப்பட்டது. தற்போது இது போல் நிழல் உலக அரசு தாதாக்களால் ஆற்று மணல் சூறையாடப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு 200 நாட்கள் மட்டும் ஆற்று மணல் எடுக்கப்பட்டால் குறைந்த பட்சம் வருடத்திற்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் ஆற்றில் இருந்து சுரண்டப்படுகிறது. அப்படியானால் வருடம் முழுவதும் ஆற்று மணல் எடுக்கப்படும் போது வருடத்திற்கு 40000 கோடி ரூபாய் சுரண்டப்படுகிறது அல்லவா? இது வெளியே தெரியாமல் இருக்க சில ஊடகங்களுக்கு மாமூல் கொடுத்து பொது மக்கள் இதனை பற்றி விழிப்புணர்வு அடையாமல் இருப்பதற்காக பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்களின் கவனத்தை திசை திருப்ப அரசு அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் தான் தாது மணல் கொள்ளை என்பது. இதோ ஆற்று மணலில் எவ்வளவு கொள்ளை என்பதற்கான பட்டியல் கீழே கொடுக்கப்படுகிறது.
Tag Archives: illegal mining
தனியார் தாதுமணல் சுரங்க பகுதியில் பாதிப்பு இல்லை.
தனியார் தாது மணல் சுரங்க பகுதி மற்றும் தொழிற்சாலை உள்ள பகுதிகளில் விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுவதால் எந்த நோயும் கிடையாது. மாறாக மத்திய அரசு நடத்தும் தாது மணல் தொழிற்சாலையால் நோய் பாதிப்பு என பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகிறது. இதில் இருந்து விதிமுறைகளை யார் சரியாக கடைபிடித்து குவாரி செய்கிறார்கள் என்பது தெரியவில்லையா?
தாது மணலில் அணு கனிமம் – கதிரியக்கம் என்ற அபாண்ட குற்றச்சாட்டு- உண்மை நிலை
அன்னிய சக்திகள் இந்திய தாது மணல் உற்பத்தியாளர்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் சதி திட்டம் செய்து அவர்களுக்கு எதிராக அபாண்டமான குற்றச்சாட்டுகளை பெரும் செலவு செய்து கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். விளைவு இதனால் இந்திய அரசுக்கு பெறுத்த நட்டம். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு, தாது மணல் கனிமங்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டும், கடலில் இழுத்து செல்லப்பட்டும் வீணாகின்றன. மேலும் கடல் உள்ளே இழுத்து செல்லப்படும் கனிமங்கள் பக்கத்து நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் ஆபத்தும் உள்ளது. இதனால் இந்தியாவின் கடல் வளம் இந்திய மீனவர்களுக்கு மீன் படி உரிமையை மறுக்கும் இலங்கையால் அனுபவிக்கப்படுகிறது.
அதிகாரிகளையும் நீதித்துறையையும் மிரட்டுவதற்கு மிகப் பெரிய குற்றச்சாட்டான கதிரிக்கம் என்ற ஒரு பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் கதிரியக்கத்திற்கும் தாது மணல் குவாரி அல்லது சுத்தப்படுத்துதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தாது மணல் குவாரி செய்யும் போது அரை சதவீதத்திற்கும் குறைவாக மோனசைட் என்னும் ஒரு கனிமம் கிடைக்கும். இந்த மோனசைட் சாதாரண மணலிலும், கல்லிலும், கிரானைட் உட்பட பூமியின் எல்லா பகுதியிலும் இயற்கையாகவே கிடைக்கும். அதுவும் சாதாரண மணல் மற்றும், கல், கிரானைட் பாறை முதலியவற்றில் கிடைப்பவை தாது மணலில் கிடைப்பதை விட கூடுதலான அளவு. இதனால் எந்த பாதிப்பும் யாருக்கும் கிடையாது. இதனால் பாதிக்கப் பட்டதாக கூறுவது எல்லாம் இட்டு கட்டிய கதை. உலகிலேயே அதிகமான மோனசைட் கிடைக்கும் இடம் மணவாளக்குறிச்சி. அங்கு இந்திய அரசு நிறுவனம் தான் குவாரி செய்து வருகிறது. அந்த பஞ்சாயத்து முழுவதும் மீனவர்கள் நிறைந்த பஞ்சாயத்து. மீனவ சமுதாய பெண் ஒருவர் தான் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இந்த உலகிலேயே அதிக மோனசைட் உள்ள மணவாளக்குறிச்சியில் தான் மோனசைட்டையும் குவாரி செய்து பிரித்து எடுக்கிறார்கள். அங்கு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கடந்த 50 வருடங்களாக தலைமுறை தலைமுறையாக அங்கு வசதியாக வாழ்ந்து வருவதாகவும் கூறுவதை கேட்கலாம் ( )
இத்தொழிலில்; ஈடுபட்டுள்ள எந்த தொழிலாளியோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களோ அல்லது இந்த தொழிற்சாலைகளை ஒட்டி உள்ள மக்களோ கதிர்வீச்சு நோய் எதிலும் பாதிக்கப்படவில்லை. மாறாக இதனை மிகைப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த ஊரில் ஒருவருக்கு இந்த நோய், இந்த ஊரில் ஒருவருக்கு அந்த நோய் என இட்டு கட்டி எழுதுவார்கள். எந்த ஊரில் தான் யாருக்கு நோய் இல்லை. உலகம் முழுவதும் கேன்சர் உள்ளது. உலகம் முழுவதும் சிறுநீரக பாதிப்பு உள்ளது. இது சிறுவயதில் பள்ளிக்கு செல்வதற்கு தலைவலி, வயிற்று வலி என்ற ஆசிரியரால் கண்டுபிடிக்க முடியாத காரணத்தை கூறி பள்ளியை ஏமாற்றுவது போன்றது. இருப்பினும் தொழிளாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கதிரியக்கம் என்ற பொய் பிரச்சாரம் பற்றி தெரிய வேண்டும் என்பதற்காக இருதயம் என்னும் மீனவ சமுதாயத்தை சேர்ந்த விஞ்ஞானி “நான் இந்தியன்” என்ற பெயரில் கதிரிக்கம் பற்றி பதிவு செய்துள்ளவைகளை கீழே பதிவிட்டுள்ளோம்.
கதிரியக்கம் என்றால் என்ன – ஒரு அறிவியல் பார்வை
(நன்றி : http://en.wikipedia.org/wiki/Sievert )