அந்நிய நிறுவனங்கள் மட்டும் இன்றி இந்திய தொழில் போட்டியாளர்களும் சேர்ந்து தாது மணல் தொழிலுக்கு எதிராக பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டதோடு நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு வரும் போது நீதித்துறையை அச்சப்படுத்த அல்லது எதிராக திருப்ப சில ஊடகங்களை பயன்படுத்தி செய்தி வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். அவ்வாறு ரேர் எர்த் தயாரிக்க மட்டுமே உபயோகப்படும் மோனசைட்டில் இருந்து கிடைக்கும் தோரியத்தில் இருந்து அணுகுண்டு தயாரிக்கப்படுகிறது என்று ஒரு அபாண்டமான பொய்யை காசுக்கு வேசி தனம் செய்யும் விகடன் குரூப் தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம் இன்று உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வர இருப்பதும் தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்ததும் தான். அதற்கு நமது சங்கத்தின் சார்பில் ஒரு மறுப்பு மின் அஞ்சல் அனுப்பப் பட்டது. காசு வாங்கி கொண்டு பொய் செய்தி வெளியிடும் விகடன் நிச்சயம் நமது மறுப்பை வெளியிட மாட்டார்கள். எனவே உறுப்பினர்களின் தகவலுக்காக அந்த மின் அஞ்சல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பெறுநர்
ஆசிரியர்
ஜீனியர் விகடன்,
சென்னை
ஐயா
“தாது மணல் கடத்தல் அணு ஆயத ஆபத்து – அதிர வைக்கும் ஆவணங்கள்” என்ற தலைப்பில் 04.07.2018- என கடந்த சனிகிழமை தாங்கள் வெளியிட்டுள்ள செய்தி மிகைப்படுத்தி கூறப்பட்ட உண்மைக்கு மாறானது ஆகும்.
உண்மையில் உலகின் எந்த மூலையிலும் மோனசைட் அணுகுண்டு உற்பத்திக்கோ, அணுமின்நிலைய உற்பத்திக்கோ பயன்படுத்தப்படுவதில்லை. இதில் இருந்து கிடைக்கும் தோரியம் கதிர்வீச்சு உள்ளதே தவிர பிளவுபடும் பொருள் (களைளடைந) அல்ல. எனவே அதனை எந்த காரணத்திற்கும் உபயோகிக்க முடியாது. நாளது தேதியில் உலகின் எந்த நாட்டிலும் இந்த மோனசைட்டில் இருந்து கிடைக்கும் தோரியம் அணுமின் நிலையத்திற்கோ அல்லது அணுகுண்டு செய்யவோ உபயோகப்படவில்லை. இந்தியாவில் மட்டும் தான் இதனை அணுமின் நிலையத்திற்கு இரண்டாம் உப பொருளாக மாற்றி உபயோகிக்கலாமா என ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. 2080 வாக்கில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது அனைத்தும் உங்களுக்கு தெரிந்தாலும் கூட வளர்ப்பு நாயை கல்லால் அடித்தால் ஐயோ பாவம் வாயில்லா பிராணியை தாக்குகிறார்கள் என கூறுவதை தவிர்ப்பதற்காக வெறிநாய் என்ற பெயரில் தாக்குவது போல் தாங்கள் இந்த அபாண்டமான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை கூறி உள்ளீர்கள். இது பத்திரிக்கை தர்மத்திற்கு நியாயம் அல்ல. உண்மையில் உலகத்தில் எந்த நாட்டிலும் இவ்வாறு உபயோகத்தில் இல்லை என்பதும் வெளிநாடுகளிலேயே மோனசைட் இலகுவாக கிடைக்கிறது என்பதும் இந்தியாவில் இருந்து தோரியம் கடத்தல் என பத்திரிக்கைளில் எழுதுவது என்பது உண்மைக்கு மாறானது என்பதையும் பாராளுமன்றத்திலேயே வினா எண் 1872-க்கு பதிலாக 9.3.2016 அன்று தெரியப்படுத்தி உள்ளார்கள். தாங்களும் அதனை இந்திய அரசு இணையதளத்தில் பார்க்கலாம்.
மேலும் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் நாட்டின் தரைவழி எல்லை பாதைகள் ஆகிய அனைத்திலும் கதிரியக்க பொருட்கள் போக்குவரத்தை கண்டுபிடிக்கும் மின்னணு சாதனத்தை பொருத்தி அவற்றை சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களோடு ஒருங்கிணைத்து வைத்துள்ளதாகவும் எனவே தோரியம் கடத்தப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதையும் பாராளுமன்றத்தில் அமைச்சர் வினா எண் 896 நாள் 20.12.2017-ல் தெரிவித்துள்ளார். அதனையும் தாங்கள் இந்திய அரசு இணையதளத்தில் பார்க்கலாம். எனவே தங்களது செய்தி உள்நோக்கத்தோடு எழுதப்பட்டது.
கடந்த 1995-ம் வருடத்தில் இருந்தே விக்டர் ராஜமாணிக்கம் அவரது முதலாளி தயாதேவதாஸ் ஆகியோர் பல்வேறு பெயர்களில் பல்வேறு புகார்களை எழுதியதோடு மட்டும் இன்றி ஏராளமான ரிட் மனுக்களையும் தாக்கல்; செய்து இருந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் ஒரு பத்திரிக்கையில் ஒரு நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவதற்கு அதில் உள்ள ரிப்போர்ட்டருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து ரூபாய் 5000 செலுத்தி ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்து அதில் அபாண்ட குற்றச்சாட்டுகளை கூறினால் தரமற்ற அல்லது விளம்பரம் கிடைக்காத பத்திரிக்கைகள் சூடான செய்தி என முக்கியத்துவம் கொடுத்து போடுவார்கள். சம்மந்தப்பட்ட நபர்களும் ஒரு பத்திரிக்கையில் கால்பக்க விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் சுமார் 2 லட்சம் கொடுக்க வேண்டும். மாறாக 5000 ரூபாய் பொது நல வழக்கிலும் சில குறிப்பிட்ட ரிப்போர்ட்டர்களுக்கு செய்த சிறிய செலவிலும் மக்களிடமும் அதிகாரிகள் மட்டத்திலும் ஒரு கோபத்தை ஏற்படுத்தலாம் என இம்மாதிரி செய்து வருவது 1995- முதலே நடந்து வருகிறது.
பொதுவாக தாது மணல் தொழில் ஏற்றுமதி என்பதால் உள்ளுர் பத்திரிக்கைகளுக்கு விளம்பரம் கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. ஆனால் தங்களுக்கு விளம்பரம் என்ற பெயரில் மாமூல் வரவில்லை என்பதால் சில பத்திரிக்கைகள் அவ்வப்போது இதனை தாக்கி எழுதுவது வழக்கம். அதே போல் இதற்கென்றே சில ஊடகவியலாளர்களை பணம் கொடுத்து கையில் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதும் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு வரும் போது நீதித்துறையின் மனதில் ஒரு அச்சத்தை ஏற்படுத்த அல்லது ஒரு விலகி ஓடும் எண்ணத்தை ஏற்படுத்த இவ்வாறு எழுதுவது வழக்கம். இதற்கென்றே தயாதேவதாஸ் மட்டும் இன்றி இந்திய தாது மணல் உற்பத்தியாளர்களிடம் தங்கள் வியாபாரத்தை இழந்த அன்னிய நிறுவனங்களும் பெரும் தொகை செலவு செய்கிறார்கள். அதன் வெளிப்பாடே இந்த புகார் மற்றும் பொது நல வழக்கு எல்லாம்.
தங்கள் கட்டுரையில் முதலில் கூறி இருக்கும் விக்டர் ராஜமாணிக்கம் திரு.தயாதேவதாசால் பல்வேறு வகைகளில் சட்டவிரோதமாக பலன் அடைந்தவர். இந்த கூட்டத்தில் சில ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும் உண்டு. இவர்கள் வாங்கும் பணத்திற்காக தவறுதலாக பிரச்சாரம் செய்வார்கள். இது பற்றிய விபரங்களை தாங்கள்
http://www.beachminerals.org/video-home/ வீடியோவில் பார்க்கலாம்.
திரு.வி.சுரேஷ் என்பவர் இப்போது அல்ல, 2005 முதலே தாது மணல் தொழிலுக்கு எதிரானவர். ஏற்கனவே இந்த தொழிலை நிறுத்த வேண்டும் என மனித உரிமை ஆணைய அமைப்பு (Pருஊடு) என்ற அமைப்பு சார்பில் ஒரு உறுப்பினராக இருந்து அறிக்கை கொடுத்தவர். தாது மணல் நிறுவனங்களுக்கு எதிராக ஏற்கனவே நடந்த ஒரு பொது நல வழக்கில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுந்தரம் சார்பில் ஆஜர் ஆனவர். வழக்கறிஞர் சட்டப்படி இந்த விபரங்களை அவரே நீதிமன்றத்தில் சொல்லி இந்த வழக்கில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக அவரும் சொல்லவில்லை. நீதிமன்றமும் இதனை கவனிக்கவில்லை. திரு.சுரேஷ் கொடுத்த அறிக்கை என்பது இந்த தாது மணல் தொழிலையும், ஆற்று மணல் போல் சுவாகா செய்ய வேண்டும் என நினைத்து செயல்பட்ட நிழல் உலக அரசின் உறவினரான திரு.கருணாகரன் என்பவர் கொடுத்த ஒரு தலை பட்சமான அறிக்கையின் அடிப்படையிலும், ஏற்கனவே விவி மினரல் நிறுவனத்தோடு சேரன்மகாதேவி சார் ஆட்சியராக இருக்கும் போதே முன்பகை உள்ள திரு.ககன்தீப்சிங் பேடி என்பவர் கொடுத்த ஒரு தலைபட்சமான அறிக்கையின் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டது. கருணாகரன் சட்டவிரோதமாக தான் செயல்பட்டார். சட்டப்படி விசாரணை தேதியை தெரிவிக்காமல் ஒரு தலைபட்சமாக உத்தரவு பிறப்பித்தார். மேலும் அவருக்கு அதிகாரமே பகிர்ந்தளிக்கப்படவில்லை என அரசு தெரிவித்த ஆதாரம் உட்பட அனைத்து ஆதாரங்களும்
www.beachminerals.org என்ற இணையதளத்தில் உள்ளது. அதனை தாங்கள் பார்க்கலாம்.
எந்த நிலையிலும் ஏற்றுமதி தடை செய்யப்படவில்லை. மாறாக சுரங்க பணி செய்வது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே குவாரி செய்த கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்பட எந்த தடையும் கிடையாது. ஏற்றுமதி மாநில அரசின் கட்டுப்பாட்டில் வராது என்பது உங்களுக்கு தெரிந்தாலும் கூட உள்நோக்கத்தோடு தாங்கள் இதனை எழுதி உள்ளீர்கள்.
திரு.சாகு குழுவின் அறிக்கையிலும் வேண்டும் என்றே சில இனங்களை மறைத்து திரித்து கூறி உள்ளார். அதாவது உங்கள் நிர்வாக பத்திரிக்கைக்கு வளர்ச்சிக்காக, செய்திக்காக எப்படி சகாயம் விசாரணையை நடத்தி இறுதியில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என அறிக்கை செய்தாரோ அதே போல் பத்திரிக்கைளில் செய்திகளுக்காக சில இனங்களை திரித்துள்ளார்.
அதாவது அரசு நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தில் தான் ஏற்றுமதிக்கு என வைக்கப்பட்டுள்ள கார்னட், இல்மனைட் கனிமங்களில் மோனசைட் 0.25 சதவீதத்திற்கு கூடுதலாக இருந்தது என்பதை தெரிவிக்காமல் பொதுப்படையாக சில நிறுவனங்கள் என தெரிவித்துள்ளார். அதே போல் சில தனியார் நிறுவனங்களில் செமி பிராசஸ்டு கனிமங்களில் உள்ள மோனசைட்டை அதிகப்படுத்தி காட்ட வேண்டும் என்றும் அவற்றை பிராசஸ்டு கனிமங்களில் அதிகம் இருக்கிறது என வேண்டும் என்றே காட்டினார். இவை அனைத்தையும் தயார் செய்வது திருநெல்வேலியில் உள்ள தங்கமுனியசாமி என்னும் ஒரு துணை இயக்குனர் தான்.
நாளது தேதியில் அனைத்து துறைமுகங்களிலும் ஸ்கேனர் வசதி பொறுத்தப்பட்டு விட்டதால் 0.25 சதவீதம் என்ற லிமிட் எதுவும் அமுலில் இல்லை. இதனை அணுசக்தி துறை மற்றும் அணு கனிம இயக்குனரகம் உறுதி செய்துள்ளது.
உண்மையில் மாவட்ட ஆட்சியர் கருணாகரன் அறிக்கையும், ககன்தீப் சிங் பேடி அறிக்கையும் சாகுகமிட்டி ஆய்வறிக்கையும் சட்ட விதிகளில் கூறியபடியும் இந்திய அரசு வகுத்துள்ள நெறிமுறை படியும், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறை படியும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பு அனுப்பி அவர்களது முன்னிலையில் அளவீடு மேற்கொண்டு தயாரிக்கப் பட்டது அல்ல. ஒரு தலை பட்சமாக ஆற்றுமணலை போல் தாதுமணலையும் சுவாகா செய்வதற்காக தயாரிக்கப் பட்டது. ஆற்று மணலும் முன்பு இது போல் ஒரு அறிக்கை வாங்கி தான் அரசு நடத்துவோம் என எடுத்தார்கள். இப்போது அங்கு நடப்பது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக தயாரிக்கப் பட்ட ஒரு தலைபட்சமான அறிக்கை. அதே நேரத்தில் மத்திய அரசு அதிகாரிகளும் மத்திய மாநில அரசு அதிகாரிகளும் பல்வேறு முறை கூட்டு புலத்தணிக்கை, ஆய்வு, பரிசீலனை மேற்கொண்டு எந்த தவறும் இல்லை என்பதை பலமுறை அறிக்கை செய்துள்ளார்கள். அவையும் மேற்கண்ட இணைய தளத்தில் இருக்கும். பார்க்கலாம்.
மேலும் விவி மினரல் நிறுவன பணியாளர்கள் தனியாக
http://vvmemp.blogspot.in என்ற இணையதளம் வைத்துள்ளார்கள். அதிலும் இம்மாதிரி ஏராளமான அறிக்கைகள், உண்மைகள் பதிவிடப்பட்டுள்ளன. அதனையும் பார்க்கலாம்.
சாகுகமிட்டியின் தவறுகள் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் சுட்டிக்காட்டப்படும். நிறுவனங்களுக்கு எதிராக எழுதுவதற்கு மட்டுமே பணம் பெற்ற விகடன் போன்ற பத்திரிக்கைகள் நிச்சயம் அதனை எழுதாது. இருப்பினும் இது ஏராளமான தொழிலாளர் வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்பதால் இந்த உண்மைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தாது மணல் தொழில் நிறுத்தத்தால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 780 கோடி ரூபாய் இழப்பீடு. மத்திய அரசுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் அந்நிய செலவானி இழப்பீடு. நேரடி மறைமுக வேலைவாய்ப்பு பெரும் சுமார் 50000 தொழிலாளர்கள் இதில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். எனவே தயவு செய்து மனசாட்சியோடு உண்மையை மட்டும் எழுதுங்கள். இன்று வழக்கு விசாரணைக்கு வருவதற்காக இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டீர்கள். வழக்கமாக வழக்கு விசாரணைக்கு சில தினங்களுக்கு முன்பு திருமதி சந்தியா ரவிசங்கர் என்பவர் தான் இவ்வாறு செய்தி வெளியிடுவார். கடந்த விசாரணையோடே தங்களை செய்தி வெளியிட எல்லாம் செய்து விட்டோம் என ஒரு தரப்பினர் கொக்கரித்தனர். ஆனால் இந்த முறை அது வந்துள்ளது. நாங்கள் தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும். உலகை காக்க வந்த ஏசு பிரானையே 30 வெள்ளி காசுக்காக காட்டி கொடுக்க ஆட்கள் இருக்கும் போது பணத்திற்காக எழுதுவதற்கு பத்திரிக்கை நண்பர்களா இருக்க மாட்டார்கள்? தயவு செய்து எங்கள் மனவேதனையை தங்கள் பத்திரிக்கையில் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
ஆர்.பாலகிருஷ்ணன்