Author Archives: admin

சூறையாடப்படும் ஆற்று மணல்!!! இதே நிலை நீடித்தால் தமிழகம் சுடுகாடாகி விடும்!! ஆற்று மணல் கொள்ளையை மறைக்க மற்றவர்கள் மீது திட்டமிட்டு புகார்!!

தமிழகத்திலிருந்து தொடர்வண்டி ஊடாக பிற மாநிலங்களுக்கும், மொரிசியஸ் உள்ளட்ட வெளிநாடுகளுக்கும் கடத்தப்படும் மணல் (ஒளிப்படம்)

கருவறுக்கப்படும் கொள்ளிடம் ஆறு – (காணொளி)

காவிரி, பாலாறு என தமிழகத்திலுள்ள எல்லா ஆற்றிலும் மணல் சுரண்டப்படுகிறது.

இப்படி எடுத்தால் ஆற்றிலிருந்து ஏரி குளம் குட்டைகளுக்கு கால்வாயில் எப்படி தண்ணீர் செல்லும்.

அருகில் உள்ள மாநிலங்கள் அவர்கள் ஆற்று மணலை பாதுகாப்பாக காப்பாற்றுகிறார்கள். நம் மாநில அரசோ ஆயிரக்கணக்கான லாரிகளில் கேரளாவிற்கும், கர்நாடகாவிற்கும், ஆந்திராவிற்கும், மாலத்தீவிற்கும் பிற வெளிநாடுகளுக்கும் லாரியில், ரயிலில், கப்பலில் பேராசை பிடித்த அரசியல், அதிகாரவர்க்கத்தினால் விற்று காசாக்கி கொள்ளையடிக்கப்படுகிறது.

JCB வாகனம் பயன்படுத்தக்கூடாது

ஒரு மீட்டர் மட்டுமே மணல் எடுக்கவேண்டும்

காலை முதல் மாலைவரை மட்டுமே எடுக்கவேண்டும்

என்ற நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக இயற்கை வளங்கள் வரைமுறையின்றி 40, 50 அடி ஆழம்வரை சுரண்டி அழிக்கப்படுகிறது.

எல்லா மணலும் சுரண்டப்பட்டபின் தமிழக அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகளே எழுதிவைத்துக்கொள்ளுங்கள்

அண்டை மாநிலங்களிலிருந்து ஒரு பிடி மணல்கூட உங்களுக்கு கிடைக்காது

……

ஒரு நாளைக்கு தமிழக ஆறுகளிலிருந்து எடுக்கப்படும் மணல் 90,000-யிரம் லாரி லோடுகள்.

ஒரு செ.மீ மணல் உருவாக 100 ஆண்டுகளும், ஒரு அடி மணல் உருவாவதற்கு பல நூற்றாண்டுகளும் ஆகின்றன என்கிறது அறிவியல் ஆய்வுகள்.

தமிழகத்தில் ஓடும் நதிகளில், பெரும்பாலானவற்றில் ஆற்றுமணல் வரைமுறையற்று இரக்கமில்லாமல் அள்ளப்படுகிறது. ஆறுகளில் மணல் என்பது ஏதோ வீணாகக் கிடப்பதல்ல. ஆற்றில் மணல் இருந்தால்தான் ஓடும் நதிநீரை பஞ்சுபோல பிடித்து ஈர்த்து வைத்திருக்கும். ஆற்று மணல்தான் தண்ணீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கிறது. ஆறுகளில் தண்ணீர் ஓடாதபோதுகூட மணலுக்குக் கீழே தனியாக ஒரு நீரோட்டம் ஓடிக் கொண்டிருக்கும். இதனால்தான் ஆற்றில் எங்கே கைகளால் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கிறது. இந்த மணலை முழுமையாக அகற்றினால் பழைய நிலைமைக்கு வருவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆனால், மணல் கொள்ளையர்களோ அரசு அனுமதித்த 1 மீட்டர் ஆழம் (3½ அடி) வரை என்பதை மீறி 100 அடி ஆழம் கட்டாந்தரை வரை ஆற்று மணலை கணக்கில்லாமல் அள்ளிக்குவித்து பணமாக்கி விடுகிறார்கள்

ரளத்தில் ஓடும் 45 ஆறுகளில் எந்த ஓர் ஆற்றிலும் கேரள அரசு மணல் அள்ள அனுமதிக்கவில்லை. ஆந்திரத்தில் கிருஷ்ணா, கோதாவரி போன்ற மிகப் பெரிய ஆறுகளில்கூட இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளக்கூடாது என்ற அரசின் விதி கடுமையாக உள்ளது

அரசு 3 யூனிட் கொண்ட ஒரு லாரி மணல் 945 என விலை நிர்ணயித்திருந்தாலும் அதன் உண்மையான விற்பனை விலையாக ரூ.15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை உள்ளது. இந்த விலையை தீர்மானிப்பவர்கள் மணல் கொள்ளையர்கள் மட்டுமே.

தமிழ்நாட்டில் எடுக்கப்படும் ஆற்றுமணல் அனைத்தும் தமிழகத்தின் கட்டட வேலைக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. இவர்கள் சுரண்டும் ஆற்றுமணல் அளவிற்கும், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கட்டிட வேலைகளுக்கும் மிகப்பெரும் இடைவெளி உள்ளது. தமிழகத்தில் அள்ளப்படும் ஆற்றுமணல் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் கூட கடத்தப்பட்டு வருகிறது.

கேரளத்தில் பல இடங்களில் காவிரி, அமராவதி, தாமிரபரணி ஆற்று மணல் கிடைக்குமென பெயர்ப்பலகைகள் தொங்குகிறது. மாலத்தீவு உட்பட பல வெளிநாடுகளுக்கு ஆற்று மணல் கடத்தப்படுகிறது. மாலத்தீவுக்கு கொண்டு செல்லப்படும் ஆற்று மணலின் அளவு ஆண்டிற்கு 11 லட்சம் டன்னாகும். இயற்கையின் மடியில் பாலைக் குடிப்பதற்கு பதிலாக இயற்கையின் மடியையே அறுத்து ரத்தம் குடிக்கும் இக்கொள்ளையர்களால் தமிழகத்தின் ஆற்று வளமே அழிந்துவிட்டது. ஆற்றின் நீர்மட்டமே தாழ்ந்துவிட்டது. ஆற்றில் எங்கு கைவைத்து தோண்டினாலே தண்ணீர் வரும் என்ற நிலை அழிந்தே போய்விட்டது. ஆறுகளில் ராட்சச இயந்திரங்களை வைத்து மணல் அள்ளக்கூடாது என உயர்நீதிமன்றம் 2010, 2012, 2013 ஆண்டுகளில் பல்வேறு தீர்ப்புகளை கொடுத்திருந்தாலும் அது எதுவும் மணல் கொள்ளையை தடுக்க உதவவில்லை. 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆற்று மணல் அள்ளியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

மணல்குவாரிகள் விதிமுறைகள் சில :

-காலை 7 முதல் மாலை 5 மணி வரைதான் மணல் எடுக்க வேண்டும்.

-தமிழக அரசின் சிறப்பு அனுமதி பெற்றுதான் பொக்கலைன் பயன்படுத்த வேண்டும்.

-நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுமா, மணல் அள்ள அனுமதிக்கலாமா, வேண்டாமா என பொதுப்பணித்துறை, சென்னையில் உள்ள சுற்றுச் சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.

-மணல் அள்ளுவதில் இரண்டு பொக்கலைன் எந்திரங்கள்தான் பயன்படுத்த வேண்டும்.

– வாரம் ஒரு நாள் ஞாயிறு அன்று மணல்குவாரி இயங்க கூடாது.

-ஒரு மீட்டர் ஆழம் மட்டுமே மணல் அள்ள வேண்டும்.

-ஆற்றின் கரை ஓரத்தில்தான் அள்ள வேண்டும்.

–அள்ளபடும் இடம் தெளிவாக தெரியும் வகையில் எல்லைக் கற்கள் நடப்பட்டு, கம்பிவேலி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

-இதனால் உள்ளூர் மக்களுக்கு நிலத்தடி நீர், சாலை வசதி, விவசாயம் என எந்த பாதிப்புகளும் வரக்கூடாது.

-குவாரி மணல் கொட்டி வைக்கப்படும் இடத்திற்க்கு ஊராட்சி மன்றத்திற்கு வரி செழுத்த வேண்டும்.

-குவாரி மணல் கொட்டி வைக்கப்பட்டு எடுக்கப்படுவதால் அதற்க்கு வருமானவரி துறையிடம் செகண்ட் சேல்(second sals) வரி செழுத்த வேண்டும்.

– இதை கண்காணிப்பதற்காக 2006 -இல் உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் சிறப்புக் குழு, தாசில்தார் தலைமையில் வட்ட அளவில் சிறப்புக் குழு என அமைத்து இயங்க வேண்டும் எனவும்,மாதம் ஒருமுறை இக்குழு கூடி கனிமவள முறைகேடு பற்றிய புகார்களை விசாரிக்க வேண்டும், எனவும் உத்தரவு இட்டு இருக்கிறது.

இவை அனைத்தும் சட்டமாக தாள்களில் மட்டும் உள்ளது.இதை அதிகாரிகள், அரசு யாரும், எங்கும் நடைமுறைப் படுத்துவதில்லை.

மக்கள் போராட்டங்களை நசுக்கும் கலை:

மக்கள் போராட்டங்களை நசுக்கும் கலையை மணல்கொள்ளையர்கள் தெளிவாக வரைபடம் போல் வரையறுத்து வைத்து உள்ளனர். முதலில் அப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல்கட்சி தலைவர்களையும், அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் தேவையானதைக் கொடுத்து விலைக்கு வாங்குவது. பின்பு அப்பகுதியில் பாதிப்புக்கு உள்ளாக இருக்கும் மக்களை நல்ல வேலைவாய்ப்பு என கூறி அழைத்து வேலை கொடுப்பது. பின்பு அவர்களை வேலைக்கு வர வேண்டாம் எனக் கூறிவிட்டு வீட்டில் சும்மா இருங்கள் உங்களுக்கு மாத மாதம் சம்பளம் வரும் எனக் கூறி ஜேசிபி, பொக்லைன், ஹிட்டாசி கருவிகளை வைத்து மணல் அள்ளத் தொடங்குவது. அப்பகுதியில் உள்ள மக்களிடம் எதிர்ப்பு வராமல் இருக்க ஒரு ரேஷன் அட்டைக்கு என சில மாதங்களுக்கு ஒருமுறை 5000, 10000 என பணம் கொடுப்பது. ஊரில் கோவில்கட்ட, கும்பாபிஷேகம் நடத்த, பள்ளி மராமத்து, விளையாட்டு போட்டிக்கு பணம் – பரிசுகள், ஊரில் நடக்கும் நாடகம் , தெருக்கூத்து , கலைநிகழ்சிகளுக்கு பணம் கொடுப்பது, முன்னணியில் நிற்பவர்களுக்கு பல லட்சம் பணம் என பணத்தை அருவி போல் கொட்டி அவர்களை விலைக்கு வாங்குவது என்பது நடக்கும்.

இதற்கும் மசியாமல் மக்களோ, தனிநபரோ, இயக்கமோ போராடினால் ஒவ்வொரு ஊரிலேயேயும் மக்களிடம் பிளவை உருவாக்கி சமூக பதட்டத்தை ஏற்படுத்துவது, ஊர் மோதல் ஏற்படுத்துவது, சாதி மோதல் ஏற்படுத்துவது, மாத மோதல் ஏற்படுத்துவது, மக்களையே ஒருவரை ஒருவர் தாக்க செய்வது, உள்ளூரில் விலைக்கு வாங்கிய தனது ஆதரவாளர் மூலம் தனக்கு எதிரானவர்கள் மீது பொய்வழக்குகளை தொடர்ந்து கொடுக்க வைப்பது என்பதை நடத்துவார்கள். மேலும் போராட்ட தலைவர்களை விலைக்கு வாங்க முடியாவிட்டால் அவர்களைப் பற்றி பல்வேறு பொய்யான அவதூறுகளை மக்களிடம் கட்டவிழ்த்து விடுவது அதன் மூலம் மக்களிடையே அவர்கள் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவது என்பதும்: சில நேர்மையான அதிகாரிகளுக்கு மேல் அதிகாரி மூலம் அச்சுறுத்தல், மிரட்டல், அதற்க்கும் அடிபணிய மறுத்தால் பணிமாற்றம் என்பதும் நடக்கும்.

மேலும் மணல்குவாரியை எதிர்ப்பவர்களுக்கு மறைமுக மிரட்டல், குடும்ப உறவுகள்-நட்பு வட்டம் மூலம் நெருக்கடி, குடும்ப உறவுகள்-நட்பு வட்டதிதிற்க்கு மணல் எடுக்க வாகன வாய்ப்பு, தொழில் ஏற்பாடு செய்து போராட்ட முன்னணியினரை செயலிழக்க செய்வது, அரசு பணியில் யாராவது உள்ளூரில் இருந்தால் போராட்டத்தில் தொடர்பு எனக் கூறி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்வது-இதன் மூலம் மக்களை மிரள வைப்பது, உள்ளூர் அதிகாரிகள் மூலம் மிரட்டல், பின்பு காவல்துறையினரே களத்தில் இறக்கப்படுவார்கள். சட்டத்தைக் காக்கிறேன் என்பதன் பெயரில் உன்னைப் பற்றி புகார் வந்துள்ளது எனக் கூறி மிரட்டல், காவல்துறை மூலம் பொய்வழக்கு , காவல்துறை மூலம் தாக்குதல், காவல்துறையின் பொய்வழக்கு மூலம் சிறை, சித்திரவதை, நீதிமன்ற விசாரணை என்பது தொடர்ந்து நடக்கும்.

சில நேரங்களில் மணல்குவாரியை எதிர்ப்பவர்களை கூலிப்படை வைத்து கொலை செய்வது, ஆளே இல்லாமல் செய்து விடுவது என்பதும் நடக்கும். இப்படி எண்ணற்ற சாம, பேத, தான, தண்ட முறையிலேதான் போராடும் மக்களையும், போராட்ட தலைவர்களையும், சில நேர்மையான அதிகாரிகளையும் மணல்குவாரி நடத்துபவர்களால் இப்படி கவனிக்கப்படுவார்கள்.

இதற்கு பல உதாரணங்கள் உண்டு. வருவாய்துறை தாசில்தார் காஞ்சிபுரம் வெங்கடேசன் , காவல்துறை ஏட்டு அரக்கோணம் கனகராசு , பல்வேறு சமூக சுற்றுசூழல் ஆர்வலர்கள் மானுர் தனிகாச்சலம், புதுக்கோட்டை கார்த்திக் மற்றும் ராஜேஷ், திசையன்விளை சதீஷ்குமார், திருவைகுண்டம் சாம் தேவசகாயம் போன்ற ஊர்தலைவர்கள், தோழர் நெல்லை வீரவநல்லுர் சுடலைமுத்து போன்ற அரசியல் இயக்கம் சார்ந்தவர்கள் என பலரும் மணல் கொள்ளையை தடுத்ததால் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆட்சியர் சகாயம் போன்றவர்களே மணல்கொள்ளையர்களால் காஞ்சிபுரத்தில் பணியாற்றி வந்த போது கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் தப்பித்த நிகழ்வுகளும் உண்டு.

நம்மையில்லாம் எங்கு கொண்டுபோய் நிறுத்துமோ இந்த கொள்ளைகள்..!!!!

ஆற்றுமணல் கொள்ளையை திசைதிருப்ப தாது மணல் கொள்ளை என்று திட்டமிட்ட பிரச்சாரம். இதோ ஆதாரம்

தாது மணல் தொழிலுக்கு எதிராக வேண்டும் என்றே தவறாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது பொது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக சில நிழல் உலக மணல் மாபியாக்களால் அரசின் ஆதரவோடு செய்யப்படுகிறது. தமிழக அரசு ஒரு லோடு மணலை ரூபாய் 700 என நாங்கள் விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டு அரசுக்கு 89 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது என மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளது. ஆனால் உண்மையில் நடப்பது பொதுப்பணித்துறை என்ற பெயரில் முன்பு சசிகலாவின் உறவினரான திவாகரன் மற்றும் அவரது கூட்டத்தால் ஆற்று மணல் சூறையாடப்பட்டது. தற்போது இது போல் நிழல் உலக அரசு தாதாக்களால் ஆற்று மணல் சூறையாடப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு 200 நாட்கள் மட்டும் ஆற்று மணல் எடுக்கப்பட்டால் குறைந்த பட்சம் வருடத்திற்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் ஆற்றில் இருந்து சுரண்டப்படுகிறது. அப்படியானால் வருடம் முழுவதும் ஆற்று மணல் எடுக்கப்படும் போது வருடத்திற்கு 40000 கோடி ரூபாய் சுரண்டப்படுகிறது அல்லவா? இது வெளியே தெரியாமல் இருக்க சில ஊடகங்களுக்கு மாமூல் கொடுத்து பொது மக்கள் இதனை பற்றி விழிப்புணர்வு அடையாமல் இருப்பதற்காக பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்களின் கவனத்தை திசை திருப்ப அரசு அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் தான் தாது மணல் கொள்ளை என்பது. இதோ ஆற்று மணலில் எவ்வளவு கொள்ளை என்பதற்கான பட்டியல் கீழே கொடுக்கப்படுகிறது.

Link: http://scroll.in/article/815138/tamil-nadus-political-parties-are-making-money-from-sand-worth-a-whopping-rs-20000-crore-a-year

அரசுக்கு கூடுதல் வருமானம் தரும் தாது மணல் தொழிலை அரசியல் காரணங்களுக்காக நிறுத்தி வைத்துள்ளார்கள்.

பிஜேபி அரசு பொறுப்பேற்ற உடன் கனிம சட்டங்களில் திருத்தங்கள் செய்தது. அதன்படி 2015 சட்ட திருத்தத்திற்கு முன்பு வழங்கப்பட்ட சுரங்க குத்தகைதாரர்கள் அரசுக்கு ஏற்கனவே செலுத்தும் ராயல்டி போக ராயல்டியில் 30 சதவீதம் கூடுதலாக மாவட்ட கனிம நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் 2015-க்கு பிறகு வழங்கப்பட்ட குத்தகைதாரர்கள் ராயல்டி போக 10 சதவீதம் மட்டும் கூடுதலாக மாவட்ட கனிம நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் விதிகள் செய்தார்கள். இதனை தொழிற்துறை அமைச்சர் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி அத்தியாவசிய பணிகளுக்கு அதாவது குடிநீர் வழங்கல் போன்ற பணிகளுக்கு செலவிடப்பட வேண்டும் என உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 61 சுரங்க குத்தகைகள் அனைத்தும் 2015-க்கு முன்பு வழங்கப்பட்டவை. 2013 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் மூலம் கிடைக்கும் ராயல்டியும் 30 சதவீத கூடுதல் வருமானமும் அரசுக்கு இழப்பு. இந்த தொகை குடிநீர் வழங்கல் முதலிய அத்தியாவசிய பணிகளுக்கு மக்களுக்கு செலவிடப்பட வேண்டிய தொகை அல்லவா? எனவே இதனை நிறுத்தி வைப்பது மக்களுக்கு எதிரான செயல் அல்லவா?
அரசியல் காரணங்களுக்காக நிறுத்தி வைத்துள்ளதை நீக்கினால் ஏராளமான நபர்கள் மீண்டும் வேலை பெறுவதோடு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த அரசுக்கும் 30 சதவீத கூடுதல் வருமானம் கிடைக்கும் அல்லவா?

Source : http://www.tnmine.tn.nic.in/GO/Ind-pn-2017-18.pdf

 

Goa government to file review petition against Supreme Court mining ban order

Goa government to file review petition against Supreme Court mining ban order

The five-decade-old mining industry in Goa plunged into uncertainty after the SC ban came into effect on March 16.

Published: 10th May 2018 09:48 PM  |   Last Updated: 10th May 2018 09:48 PM

PANAJI: The Goa government will file a review petition against the Supreme Court order of February this year quashing the second renewal of iron ore mining leases given to 88 companies in Goa in 2015, which brought the mining industry in the coastal state to a halt.

A note moved by the Cabinet Advisory Committee (CAC) today mentioned that Chief Minister Manohar Parrikar, who is currently undergoing medical treatment in the USA, has given his nod to file the review petition before the apex court, one of the CAC members Francis D’Souza told PTI.

In its meeting held last month, the CAC had advised the state government to file a review petition seeking amendment to the supreme court order, dated February 7.

D’Souza said the petition would be filed “as soon as possible”.

The five-decade-old mining industry in Goa plunged into uncertainty after the SC ban came into effect on March 16.

The shutdown resulted into the people dependent on mining for survival as well as other stake-holders losing their main source of livelihood.

Goa transport minister Sudin Dhavalikar had estimated revenue loss to the tune of Rs 3,500 crore per year due to closure of the mining activity.

Source : http://www.newindianexpress.com/nation/2018/may/10/goa-government-to-file-review-petition-against-supreme-court-mining-ban-order-1812985.html

ஓர் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 50000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளார்கள். அரசியல் காரணங்களால் தமிழகத்தின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி கடந்த ஓர் ஆண்டில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. சட்டமன்றத்தில் கொள்கை விளக்க குறிப்பில் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பொறியாளர்களும், 3 லட்சம் பட்டதாரிகளும், 1.5 லட்சம் வெளிநாட்டில் படிக்கும் பட்டதாரிகளும் சுமார் 2 லட்சத்திற்கு மேல் பிளஸ் டு முடிப்பவர்களும் என சுமார் 8 லட்சம் நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் அரசு ஆற்று மணல் கொள்ளையை மக்கள் அதிகம் பேசாமல் இருக்கவும், ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பவும் செயற்கையாக தாதுமணல் கொள்ளை என்ற செய்தியை சில தவறான அதிகாரிகள் மூலம் பரப்பி பொது மக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பி தமிழகத்தில் உள்ள ஆறுகள் சூறையாடப்படுகின்றன. இந்த சூறையாடலை மறைப்பதற்காக சட்டப்படி சரியாக அனைத்து அனுமதியோடு நடக்கும் தாது மணல் தொழிலுக்கு எதிராக பொய் பிரச்சாரம் மேற்கொண்டு இந்த தொழில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதனால் நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு பெறும் சுமார் 50000 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நடுத்தெருவிற்கு வந்துள்ளார்கள். இதே நிலை தான் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில்களுக்குமே. சட்டமன்றத்திலேயே சுமார் 50000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்பதையும் 5 லட்சம் மக்கள் வேலை இழந்துள்ளார்கள் என்பதையும் கொள்கை விளக்க குறிப்பிலேயே அரசு குறிப்பிட்டுள்ளது. 50000 தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தான் மின்வெட்டு இல்லை என்பது போல் ஒரு மாயத்தோற்றம் உருவாகிறது. வேலை இல்லாத இளைஞர்கள் சமூகத்தின் அச்சுறத்தலாக விளங்குவார்கள்.

எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருக்கும் போது நெல்லை மாவட்டத்தில் நீதிபதி ராமமூர்த்தி விசாரணை கமிசனை நியமித்தார்கள். இது சங்கனாங்குளம் சம்பவம் பற்றி விசாரிக்க அமைக்கப் பட்டது. ராமமூர்த்தி விசாரணை கமிசன் கொடுத்த அறிக்கையின் முக்கியமான அம்சம் இளைஞர்கள் வேலை இல்லாததால் தவறான வழிகளுக்கு செல்கிறார்கள். எனவே தென் மாவட்டங்களில் தொழில்களை பெருக்கி வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என அறிக்கை செய்தார். எம்.ஜி.ஆர் அரசும் அதனை ஒப்புக் கொண்டு அரசாணை பிறப்பித்து 15.10.1982-ல் அரசிதழிலும் வெளியிட்டது. மழை மறைவு பிரதேசமான திருநெல்வேலியின் தென் பகுதியில் முன்பு பீடி சுற்றும் தொழில் இருந்தது. தற்போது பீடி சுற்றும் தொழில் முற்றிலுமாக அருகி விட்டது. கே.டி.கோசல்ராம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போதும்இ குமரி அனந்தன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதும்இ நெல்லை மாவட்ட கடற்கரை பகுதிகளில் தாது மணல் அதிக அளவில் இருப்பதை கண்டறிந்து இதன் மூலம் இப்பகுதியில் வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும் என அறிக்கை விட்டார்கள். சட்டமன்றம்இ நாடாளுமன்றத்திலும் பேசினார்கள். அதன் பயனாக கன்னியாகுமரிஇ திருநெல்வேலிஇ தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொழில் அதிபர்கள் இந்த தொழிலில் இறங்கினார்கள். இதன் மூலம் அரசுக்கு ஏராளமான அந்நிய செலவானி கிடைத்தது. மழை மறைவு பிரதேசமான இந்த பகுதியில் ஏராளமான நபர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்தது. வாஜ்பாய் அவர்கள் பாரத பிரதமராக இருக்கும் போது 1998-ல் இதில் உரிமம் பெறுவதை மீண்டும் இலகுவாக்கி இந்த தொழில் வளர்ச்சி அடைய உதவி செய்தார். இதனால் 1998-க்கு முன்பு வரை ஆண்டுக்கு 35 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த கனிமங்கள் 2014-ல் ஆண்டுக்கு ரூபாய் 2500 கோடிக்கு அனைத்து நிறுவனங்களும் சேர்ந்து ஏற்றுமதி செய்தன. எனவே இதில் சுமார் 400 கோடி ரூபாய் தொழிலாளர்களுக்கு சம்பளமாக வினியோகிக்கப் பட்டு இருக்கும். அந்த தொழிலாளர்கள் அவர்களுக்கு தேவையான பொருட்களை இந்த 400 கோடிக்கும் வாங்குவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 120 கோடி ரூபாய் மாநில அரசுக்கு வருவாயாக வந்திருக்கும். நிறுவனங்கள் சுமார் 2000 கோடி ரூபாய் இயந்திர உதிரி பாகங்களஇ; பேக்கிங் மெட்டீரியல் போன்ற பொருட்களாக கொள்முதல் செய்வதன் மூலம் ஆண்டிற்கு சுமார் 560 கோடி ரூபாய் மாநில அரசுக்கு வரியாக வந்திருக்கும். மேலும் 50000 தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பெறுவதால் அவர்களது வாழ்க்கை தரம்இ கல்வி, பொது சுகாதாரம் அனைத்தும் மேம்பட்டு இருக்கும். ஆண்டுக்கு சுமார் 2500 கோடி ரூபாய் அந்நிய செலவாணியும் அரசுக்கு கிடைத்திருக்கும். எனவே தாது மணல் தொழிலை நிறுத்தி வைத்துள்ளதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டுக்கு 680 கோடி ரூபாய் நட்டம். 50000 தொழிலாளர்கள் பணி இழப்பு.

எனவே தொழிலாளர்களின் கோரிக்கை எல்லாம் தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக எந்த தொழிற்சாலையையும் நிறுத்த வேண்டும் என எண்ணாதீர்கள். தொழிற்சாலைகள் இல்லை என்றால் சமுதாய வளர்ச்சி இல்லை. பொருளாதார முன்னேற்றம் இல்லை. வருங்கால சந்ததியினருக்கு, பொருளாதார முன்னேற்றம், கல்வி அறிவு, சமுதாய பாதுகாப்பு, நாகரீகம் போன்ற அனைத்திற்கும் தொழில்களே அடிப்படை பிரதானம். எனவே இந்த குறைகளை உடனடியாக தொழிலாளர்கள் சங்க பிரதிநிதியோடும் தொழிற்சாலை அதிபர்களோடும் கலந்து பேசி நிவர்த்தி செய்யுங்கள் என்பது தான்.

Source :http://www.thehindu.com/news/national/tamil-nadu/what-revival-close-to-50000-units-shut-shop-in-past-year/article24107824.ece?utm_source=tamil-nadu&utm_medium=sticky_footer

Number of workers employed too falls by more than 5 lakh

ஸ்டெர்லைட் குறைபாடுகளை சரி செய்யாமல் திசை திருப்புவது நியாயமா?

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ஆனால் விவி டைட்டானியத்திற்கு எதிராக என்று ஒரு வீடியோ பரப்ப விடப்பட்டது. நாங்கள் எந்த தொழிலுக்கு எதிரானவர்கள் அல்ல. எல்லா தொழிலும் வேண்டும். தொழில் வளர்ச்சி இல்லை என்றால் நாகரீக உலகத்தில் மனித சமுதாயம் வசதியாக வாழ முடியாது. சில தொழில்களில் சில நேரங்களில் மனித கவனத்தையும் மீறி சில தவறுகள், குறைபாடுகள் நிகழலாம். அவை சரி செய்யப்பட வேண்டும். மாறாக அந்த தொழிலே முழுவதும் நிறுத்தப்பட வேண்டும் என்பது எங்களுக்கு உடன்பாடு இல்லாதது. ஏனென்றால் இதே போல் அரசியல் காரணங்களால் தாது மணல் தொழில் நிறுத்தப்பட்டு சுமார் 50000 குடும்பங்கள் பல வருடங்களாக சொல்லொன்னா துயரத்தை அனுபவித்து வருகிறோம். தற்போது விவி டைட்டானியத்தால் தான் சுற்றுச்சூழல் பாதிப்பு என ஒரு வீடியோ வெளியிடப் பட்டது. அதற்கான பகுப்பாய்வு அறிக்கைகளும் வெளியிடப் பட்டன. இதில் மிக கவனிக்க வேண்டியது ஏப்ரல் 21-ல் மாதிரி எடுத்து ஏப்ரல் 22-ல் ஆய்வு செய்து கொடுத்து ஏப்ரல் 28-ல் பகுப்பாய்வு அறிக்கை பெற்று அதனை ஜீன் 2-ல் அதாவது சுமார் ஒன்றேகால் மாதம் கழித்து வெளியிட வேண்டிய அவசியம் என்ன? அதற்கு காரணம் அந்த பகுப்பாய்வு அறிக்கை ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள்; அதாவது குரோமியம், காப்பர், ஈயம் முதலியவை அனுமதிக்கப் பட்ட அளவை விட கூடுதலாக இருப்பதால் தான் அவற்றை வெளியிடாமல் காலம் தாழ்த்தினார்கள். தற்போது கைமீறி அந்த ஆலை மூடப்பட்டதால் அருகில் உள்ள நிறுவனத்தின் மீது அபாண்டமான பழியோடு வீடியோ வெளியாகி உள்ளது.

நாட்டில் நடக்கும் ஆற்று மணல் கொள்ளையை பொது மக்களும் மற்றவர்களும் தெரியாமல் இருப்பதற்காக செயற்கையாக தாது மணல் கொள்ளை என்ற பொய் புகாரை உருவாக்கி அந்த தொழிலை நிறுத்தி உள்ள நிலையில் அதே நிறுவனத்தை நோக்கி திருப்பி விட்டால் அது எதிர்ப்பை திசை திருப்பும் என நினைத்து யாரோ இந்த செய்தியை பரப்பி விட்டார்கள். தொழில் போட்டியினாலும் அந்நிய நிறுவன போட்டியினாலும் குடும்ப பகையினாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழக தாது மணல் தொழில் இதனாலும் பாதிக்கப்படக் கூடாது. எனவே இது பற்றிய விபரங்களை ஆராய்ந்தோம். இந்திய உச்சநீதிமன்ற உத்தரவு படி 2011-ல் இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல் ஆய்வகம் (NEERI) ஏற்கனவே ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்ததன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவும் பிறப்பித்துள்ளது. 2011-ல் பிறப்பிக்கப் பட்ட அந்த உத்தரவிலேயே ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகளில் குரோமியம், காப்பர், ஈயம் போன்றவை அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிகமாக இருப்பதை உச்சநீதிமன்றமே 53-வது பக்கத்தில் தெரியப்படுத்தி உள்ளது. டைட்டானியம் என்பது இல்மனைட் தாதுவில் இருந்து சல்பிரிக் ஆசிட்டை உபயோகித்து டைட்டானியத்தை பிரிப்பது. இதில் குரோமியம் காப்பர், ஈயம் போன்றவை வரவே செய்யாது. நண்பரின் வீடியோவில் ஈயம் போன்றவை கூடுதல் இருப்பது அவரது மாதிரி பகுப்பாய்விலேயே தெரிகிறது. எனவே இந்த கழிவிற்கு காரணம் ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியது போல் ஸ்டெர்லைட் நிறுவன கழிவு தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும். மேற்கண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை https://www.elaw.org/system/files/sterlite.v.india_.pdf இணைப்பில் பார்க்கலாம். தொடர்புடைய தீர்ப்பின் பக்கம் 53 கீழே கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே பொய் புகாரால் பாதிக்கப் பட்ட ஒரு தொழிலுக்கு எதிராக திட்டமிட்டு திசை திருப்பும் நாடகம் நடப்பதால் இவற்றை பதியவும் வெளி கொணரவும் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்களது கோரிக்கை தயவு செய்து தவறுகளை திருத்துங்கள். உள்நோக்கத்தோடு ஏற்கனவே பாதிக்கப் பட்ட நிறுவனங்களை தாக்கி அழிக்க வேண்டும் என நினைக்காதீர்கள். இந்த தாது மணல் தொழில் இந்திய அரசுக்கு மட்டும் அல்ல தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் தொழில் என்பதையும் எந்த தவறுகளும் நடைபெற வில்லை என்பதையும் எங்களது இணைய தளத்திலும், http://www.beachminerals.org இணைய தளத்திலும் உள்ள பதிவுகளின் மூலம் பார்க்கலாம். அவற்றை பார்த்து எந்த சந்தேகம் என்றாலும் அதனை நிவர்த்தி செய்யவும் நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் பிளஸ் டு முடிக்கிறார்கள். சுமார் ஒன்றரை லட்சம் பொறியாளர்கள், 3 லட்சம் பட்டதாரிகள், வெளிநாட்டில் படிக்கும் பட்டதாரிகள் ஒரு லட்சம் என உருவாகிறார்கள். எனவே ஆண்டுக்கு ஆண்டு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு பதிலாக பொய் புகார்களை கூறி தொழில்களை கெடுப்பதை எங்கள் தொழிலாளர் சமுதாயம் எந்த நிலையிலும் ஊக்குவிக்காது.

 

இந்தியாவில் தொழில் செய்வது தான் எத்தனை கடினம்??

அனைத்து அனுமதிகளையும் பெற்று சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்று வந்த தாது மணல் தொழில் சில நிழல் உலக அரசால் கபளிகரம் செய்வதற்காக பொய்யான குற்றச்சாட்டுகள் ஏற்படுத்தப்பட்டு பலமுனை தாக்குதலுக்கு அதில் ஊடகங்களும் பயன்படுத்தப்பட்டன. வேண்டும் என்றே உண்மை தெரிந்து சில ஊடகங்களும், உண்மை தெரியாமல் நல்லெண்ணத்தில் சில ஊடகங்களும் இந்த தொழிலுக்கு எதிராக எழுதி வருகின்றன. எல்லாம் நீதித்துறை அச்சப்படுத்துவதற்கு ஒரு நடவடிக்கை. அரசின் வேண்டுகோள் படி அறிக்கை கொடுத்த அதிகாரிகளும் ஒரு படத்தை 64 துண்டுகளாக மாற்றி பசில் என சரி செய்ய கொடுப்பது போல் அதிகாரிகளையும் வழக்கறிஞர்களையும் குழப்புவதற்காக அறிக்கைகளை வேண்டும் என்றே சரியாக கொடுக்கவில்லை. இதில் முக்கியம் இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் ஏற்றுமதி கனிமங்களில் தான் மோனசைட் அளவுக்கு அதிகமாக இருந்தது என்ற விபரத்தை வேண்டும் என்றே அதிகாரிகள் மறைத்து விட்டு சில இனங்களில்; கூடுதல் கொடுத்து விட்டார்கள். இதன் அடிப்படையில் இந்து தமிழ் பத்திரிக்கையில் 22.5.18 ஒரு செய்தி மிகைப்படுத்தி எழுதப்பட்டு இருந்தது. அதற்கு நம் தொழிலாளர் சங்கம் சார்பாக ஒரு பதில் அனுப்பப் பட்டுள்ளது. இது இந்து நிறுவனத்தின் உயர் நிர்வாகிகள் கவனத்திற்கு வந்தால் நிச்சயம் இதில் நல்ல முடிவு எடுப்பார்கள். எனவே நமது சங்கத்தில் இருந்து இந்து பத்திரிக்கையின் இயக்குனர்களை சந்திக்க கால ஒதுக்கி தரவும் கேட்க முடிவு செய்துள்ளோம். அந்த பத்திரிக்கைக்கு அனுப்பிய பதில் அனைத்து உறுப்பினர்களும் தெரிந்;து கொள்ள கீழே வெளியிடப் பட்டுள்ளது.

***********

From: Southern Mineral Workers Association <sworkersassociation@gmail.com>
Date: 2018-05-23 10:28 GMT+05:30
Subject: Clarification regarding “குவித்து வைக்கப்பட்ட தாது மணலில் கதிர்வீச்சை கக்கும் மோனசைட்”

To: flcomments@thehindu.co.in, flletters@thehindu.co.in, flnsub@thehindu.co.in, inetads@thehindu.co.in

அன்புடையீர்,

தங்களது 22.5.18 தேதிய பத்திரிக்கையில் “குவித்து வைக்கப்பட்ட தாது மணலில் கதிர்வீச்சை கக்கும் மோனசைட்” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.  இதன் தொடர்ச்சியாக எங்கள் விளக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் மேற்கண்ட அறிக்கையை முழுவதும் படிக்காமல் இந்த கட்டுரையை எழுதி உள்ளீர்கள் என்பதையும் விருவிரு செய்தி கொடுக்க வேண்டும் என்று மிகைப்படுத்தி எழுதி உள்ளதையும் தெரிய முடிகிறது. ஒருவேளை இந்த கட்டுரைதாரரில் யாராவது திருமதி சந்தியா ரவிசங்கரின் கூட்டாளியாகவோ அல்லது பங்குதாரராகவோ இருக்கலாம். அதுவும் இந்த கட்டுரை உண்மைக்கு புறம்பாக வருவதற்கு காரணம்.
முதலில் கதிர்வீச்சை கக்கும் மோனசைட் என்பது தாது மணலில் மட்டும் கிடைப்பது அல்ல. அது ஆற்று மணலிலும் கிடைக்கும். பெரும் பகுதியாக கிடைப்பது இரும்பு தாது சுரங்கத்திலும், சுண்ணாம்பு தாது சுரங்கத்திலும் தான். ஆனால் அவற்றிற்கு பணத்திற்காக புகார் எழுதும் பொய்யர் கூட்டம் இல்லாததால் அதை பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. மாறாக குடும்ப பகை, தொழில் போட்டி, மாமூல் தரவில்லை என்ற கோபம், விளம்பரம் தரவில்லை என்ற கோபம் ஆகியவற்றிற்காக மிகைப்படுத்தி இவை எழுதப்படுகின்றன.
இது போக இதில் அன்னிய சக்திகளின் கையும் உண்டு. இந்திய உற்பத்தியாளர்களால் தங்களது ஏகபோக வாணிபம் தடை பட்டதை சகித்து கொள்ள முடியாத அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் சில கைக்கூலிகளை கையில் வைத்து தவறாக எழுதுகின்றன.
முதலாவதாக மோனசைட்டில் கிடைக்கும் தோரியம் மற்றும் யுரேனியம் பிளவு படக் கூடியது அல்ல. எனவே அவற்றை எந்த வகைக்கும் உபயோகிக்க முடியாது. உலகத்தில் எந்த நாட்டிலும் மோனசைட்டில் இருந்து கிடைக்கும் தோரியத்தை வைத்து எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்தியாவில் இதனை பிளவு பட வைக்க  முடியுமா என்பதற்கான ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. 2080-ல் இதில் வெற்றி பெறுவோம் என நம்புகிறார்கள். எப்படி கடல் நீரில் இருந்து  பெட்ரோல் தயாரிக்க ஆராய்ச்சி சென்று கொண்டு இருக்கிறதோ அது போல் இது ஒரு ஆராய்ச்சி.
இந்த மோனசைட் கனிமம் இதர கனிமங்களோடு கலந்து இருந்தால் இதர கனிமங்களுமே உபயோகத்திற்கு லாயக்கற்றதாகி விடும். உலக நாடுகளில் மோனசைட் கனிமம் கட்டுப்பாடு எதுவும் இன்றி விலை மலிவாக கிடைப்பதால் அந்நிய நாடுகள் இந்த மோனசைட்டில் இருந்து ரேர் எர்த் தயாரிப்பதற்கு இந்தியாவிடம் கொள்முதல் செய்வதை 2004-லேயே நிறுத்தி விட்டார்கள். இதனை இந்திய பாராளுமன்றத்தில் வினா எண் 420-க்கு பதிலில் மத்திய அமைச்சர் அவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.
தாங்கள் கிடங்குகளில் ஏற்றுமதிக்கு வைக்கப்பட்டுள்ள மணலில் மோனசைட் கனிமம் அதிகம் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆனால் அது இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் சரக்கு என்பதை வேண்டும் என்று மறந்தீர்களோ அல்லது தெரியாமல் விட்டீர்களோ தெரியாது. உங்கள் கவனத்திற்கு கீழ்கண்டவற்றையும் கொண்டு வர விழைகிறேன்.
மோனசைட் என்பது இயற்கையாக கிடைக்கும் ஒரு கனிமம். இதில் இத்தனை சதவீதம், அத்தனை சதவீதம் என்று எந்த கட்டுப்பாடும் கிடையாது. தங்கள் பார்வைக்கு அணுசக்தி துறையின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மோனசைட் கனிமம் ஏற்றுமதி செய்யப்படலாம் என்ற ஒரு எண்ணத்தை நீதித்துறையில் ஏற்படுத்துவதற்காக இந்த திட்டமிட்ட செய்திகள் பரப்பபடுகின்றன. உண்மையில் எல்லா துறைமுகங்களும் விமான நிலையத்தில் உள்ளது போல் லாரியோடு செல்லும் சரக்குகளை ஆய்வு செய்ய ஸ்கேனர் வசதி பொறுத்தப்பட்டுள்ளது. எனவே அவற்றின் வழியாக மோனசைட்டோ அல்லது எந்த கதிரியக்க பொருளுமோ கொண்டு செல்லவோ இறக்குமதி செய்யவோ முடியாது. நாளது தேதி வரை இவ்வாறு எந்த கதிரியக்க பொருளும் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்ற விபரத்தை நீங்கள்  http://www.beachminerals.org/tuticorin-port-trust-has-scanner-to-find-out-radioactive-materials-uranium-thorium-monazite-or-other-unwanted-materials-used-for-export-until-now-no-such-materials-found-in-the-export-cargo-tutico/  ல் காணலாம்.
தாங்கள் மற்றும் திருமதி சந்தியா ரவிசங்கர் ஆகியோர் முழுவதும் விவி மினரல் நிறுவனத்தையும் வைகுண்டராஜனையும் குறி வைத்து தாக்குவதை வழக்கமாக கொண்டவர்கள்.
தாங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பதாக கூறி உள்ளீர்கள். எது அனுமதிக்கப்பட்ட அளவு? அதற்கான அரசாணை அல்லது அறிவிக்கை எங்கே உள்ளது?
தாங்கள் திருவம்பலாபுரத்தில் மோனசைட் இருப்பு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். உண்மை. அவை இதர கனிமங்களை பிரித்த பிறகு அணுசக்தி  துறை  நிபந்தனை படி தனியாக பாதுகாத்து வைக்கப்பட்டு அணுசக்தி துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திலேயே மத்திய அமைச்சரால் பதிலாக question No. 2654  தெரியப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் அதனை தெரிவித்தால் பெரிய குற்றச்சாட்டாக பதிய முடியாது என்பதற்காக தாங்கள் அதனை விட்டிருக்கலாம்.
இப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மோனசைட் இருக்கும் பகுதிகள் எந்த தனியாருக்கும் குத்தகை வழங்கப்படுவது இல்லை. தனியாருக்கு குத்தகை வழங்கப்பட்டுள்ள பகுதிகள் அனைத்தும் குறைந்த அளவு மோனசைட் உள்ள பகுதிகள் ஆகும்.
எனவே எந்த இடத்திலும் கதிர்வீச்சை கக்கும் மோனசைட் குவித்து வைக்கப்படுவதில்லை. மாறாக பாதுகாப்பாக பாதுகாத்து வைத்துள்ளார்கள். திருவம்பலாபுரத்திலும் 23461 மெட்ரிக் டன் வைத்திருப்பதாக நிறுவனம் சொல்ல ஆனால் 23608 மெட்ரிக் டன் மோனசைட் இருப்பதாக அதிகாரிகள் கண்டுபிடித்தால் நிறுவனம் தவறு செய்யவில்லை என்று தானே அர்த்தம். அதனை நீங்கள் குறிப்பிட்டு இருக்கலாமே..
மத்திய அணுசக்தி துறை அதிகாரிகள் உங்களிடம் கூறினார்கள் என கூறி உள்ளீர்களே.. அவர்கள் இந்த மோனசைட் இருப்பு வைக்கும் போது கதிர்வீச்சு வராமல் இருக்க மேலே இரண்டு மீட்டர் கழிவு மணல் கொட்ட வேண்டும் என்ற விதி இருப்பதை அவர்களாக விட்டார்களா அல்;லது நீங்களாக விட்டீர்களா தெரியாது. அவ்வாறு உள்ள கழிவு மணலையும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராக அறிக்கையில் காட்ட வேண்டும் என்று சில அதிகாரிகளின் வற்புறுத்தலால் காட்டி இருக்கலாம். ஆனால் இது பற்றி சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்யும்.
ஒரு பொறுப்பு உள்ள பத்திரிக்கை குழுமத்தில் இருந்து வந்து உள்ள இந்து போன்ற ஒரு பத்திரிக்கை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு இனத்தை கையில் எடுத்து நீதித்துறையை அச்சுறுத்துவதற்கு இவ்வாறு செய்தி வெளியிட்டது வருந்ததக்கதே!!. இந்த செய்தியை வெளியிட இந்தியாவில் உள்ள தலைசிறந்த பத்திரிக்கை ஜாம்பவான் ஆன திரு.ராம் மற்றும் திருமதி மாலினி பார்த்தசாரதி போன்றவர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்பதும் விந்தையாக உள்ளது.
தயவு செய்து இந்த விளக்கத்தை உங்கள் பத்திரிக்கையில் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஆர்.பாலகிருஷ்ணன்
தலைவர்

தனியார் தாதுமணல் சுரங்க பகுதியில் பாதிப்பு இல்லை.

தனியார் தாது மணல் சுரங்க பகுதி மற்றும் தொழிற்சாலை உள்ள பகுதிகளில் விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுவதால் எந்த நோயும் கிடையாது. மாறாக மத்திய அரசு நடத்தும் தாது மணல் தொழிற்சாலையால் நோய் பாதிப்பு என பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகிறது. இதில் இருந்து விதிமுறைகளை யார் சரியாக கடைபிடித்து குவாரி செய்கிறார்கள் என்பது தெரியவில்லையா?

 

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை விழாவில் முதல்வர் அவர்களின் உரை.

64 வருடங்களுக்கு முன்பு 12 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டது இன்று 535 படுக்கைகளுடன் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 12,000 புதிய புற்றுநோயாளிகளுக்கும் 1,51,000 நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சையும் கொடுத்து வருகிறது.

இது தமிழக முதல்வரின் பேச்சில் உள்ள சாராம்சம்.

புற்றுநோய் ஒரு பொதுவான நோய், இது தாது மணல் தொழிலால் வருகிறது என திட்டமிட்டு பரப்பப் படும் பிரச்சாரங்கள் இதன் மூலம் உண்மையல்ல என்பதை தமிழக முதல்வரின் பேச்சு வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விட்டது. முதல்வரின் முழு விரிவான பேச்சை கீழே பார்க்கலாம்.

DIPR – P_R_No_248 – Hon’ble CM Speech – Cancer Institute function – Date 12_04_2018-min

ரேடான் என்னும் கதிர்வீச்சு வீடு, கட்டிடங்கள், கல், மண் எல்லாவற்றிலும் உண்டு

நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு இரண்டாவது காரணம் ரேடான் என்னும் கதிர்வீச்சு உள்ள வாயு. இது கல், மண் முதலியவற்றில் இருப்பதால் கட்டிடங்களிலும் வருகிறது. குறிப்பாக கட்டிடத்தின் அடிப்பகுதியில் மிக அதிகம் வருகிறது. இவற்றை குறைப்பதற்கு சர்வதேச அணுசக்தி முகமை உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு ஆலோசனைகளை சொல்லி வருகிறது. ஆஸ்திரியா போன்ற நாடுகளில் வீடுகளில் உள்ள ரேடானை அளவீடு செய்வதற்கும் குறைப்பதற்கும் அரசே உதவி செய்கிறது. இதே போன்ற நிலையை இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் அரசு ஏற்படுத்தினால் தொழில்கள், தொழிற்சாலைகள் மீது கதிர்வீச்சு, புற்றுநோய் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு என்று திட்டமிட்டு செய்யப்படும் பொய் பிரச்சாரம் நீங்குமே.. அரசுகள் இதனை செய்யலாமே!!!