Tag Archives: industries

ஓர் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 50000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளார்கள். அரசியல் காரணங்களால் தமிழகத்தின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி கடந்த ஓர் ஆண்டில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. சட்டமன்றத்தில் கொள்கை விளக்க குறிப்பில் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பொறியாளர்களும், 3 லட்சம் பட்டதாரிகளும், 1.5 லட்சம் வெளிநாட்டில் படிக்கும் பட்டதாரிகளும் சுமார் 2 லட்சத்திற்கு மேல் பிளஸ் டு முடிப்பவர்களும் என சுமார் 8 லட்சம் நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் அரசு ஆற்று மணல் கொள்ளையை மக்கள் அதிகம் பேசாமல் இருக்கவும், ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பவும் செயற்கையாக தாதுமணல் கொள்ளை என்ற செய்தியை சில தவறான அதிகாரிகள் மூலம் பரப்பி பொது மக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பி தமிழகத்தில் உள்ள ஆறுகள் சூறையாடப்படுகின்றன. இந்த சூறையாடலை மறைப்பதற்காக சட்டப்படி சரியாக அனைத்து அனுமதியோடு நடக்கும் தாது மணல் தொழிலுக்கு எதிராக பொய் பிரச்சாரம் மேற்கொண்டு இந்த தொழில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதனால் நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு பெறும் சுமார் 50000 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நடுத்தெருவிற்கு வந்துள்ளார்கள். இதே நிலை தான் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில்களுக்குமே. சட்டமன்றத்திலேயே சுமார் 50000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்பதையும் 5 லட்சம் மக்கள் வேலை இழந்துள்ளார்கள் என்பதையும் கொள்கை விளக்க குறிப்பிலேயே அரசு குறிப்பிட்டுள்ளது. 50000 தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தான் மின்வெட்டு இல்லை என்பது போல் ஒரு மாயத்தோற்றம் உருவாகிறது. வேலை இல்லாத இளைஞர்கள் சமூகத்தின் அச்சுறத்தலாக விளங்குவார்கள்.

எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருக்கும் போது நெல்லை மாவட்டத்தில் நீதிபதி ராமமூர்த்தி விசாரணை கமிசனை நியமித்தார்கள். இது சங்கனாங்குளம் சம்பவம் பற்றி விசாரிக்க அமைக்கப் பட்டது. ராமமூர்த்தி விசாரணை கமிசன் கொடுத்த அறிக்கையின் முக்கியமான அம்சம் இளைஞர்கள் வேலை இல்லாததால் தவறான வழிகளுக்கு செல்கிறார்கள். எனவே தென் மாவட்டங்களில் தொழில்களை பெருக்கி வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என அறிக்கை செய்தார். எம்.ஜி.ஆர் அரசும் அதனை ஒப்புக் கொண்டு அரசாணை பிறப்பித்து 15.10.1982-ல் அரசிதழிலும் வெளியிட்டது. மழை மறைவு பிரதேசமான திருநெல்வேலியின் தென் பகுதியில் முன்பு பீடி சுற்றும் தொழில் இருந்தது. தற்போது பீடி சுற்றும் தொழில் முற்றிலுமாக அருகி விட்டது. கே.டி.கோசல்ராம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போதும்இ குமரி அனந்தன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதும்இ நெல்லை மாவட்ட கடற்கரை பகுதிகளில் தாது மணல் அதிக அளவில் இருப்பதை கண்டறிந்து இதன் மூலம் இப்பகுதியில் வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும் என அறிக்கை விட்டார்கள். சட்டமன்றம்இ நாடாளுமன்றத்திலும் பேசினார்கள். அதன் பயனாக கன்னியாகுமரிஇ திருநெல்வேலிஇ தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொழில் அதிபர்கள் இந்த தொழிலில் இறங்கினார்கள். இதன் மூலம் அரசுக்கு ஏராளமான அந்நிய செலவானி கிடைத்தது. மழை மறைவு பிரதேசமான இந்த பகுதியில் ஏராளமான நபர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்தது. வாஜ்பாய் அவர்கள் பாரத பிரதமராக இருக்கும் போது 1998-ல் இதில் உரிமம் பெறுவதை மீண்டும் இலகுவாக்கி இந்த தொழில் வளர்ச்சி அடைய உதவி செய்தார். இதனால் 1998-க்கு முன்பு வரை ஆண்டுக்கு 35 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த கனிமங்கள் 2014-ல் ஆண்டுக்கு ரூபாய் 2500 கோடிக்கு அனைத்து நிறுவனங்களும் சேர்ந்து ஏற்றுமதி செய்தன. எனவே இதில் சுமார் 400 கோடி ரூபாய் தொழிலாளர்களுக்கு சம்பளமாக வினியோகிக்கப் பட்டு இருக்கும். அந்த தொழிலாளர்கள் அவர்களுக்கு தேவையான பொருட்களை இந்த 400 கோடிக்கும் வாங்குவதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 120 கோடி ரூபாய் மாநில அரசுக்கு வருவாயாக வந்திருக்கும். நிறுவனங்கள் சுமார் 2000 கோடி ரூபாய் இயந்திர உதிரி பாகங்களஇ; பேக்கிங் மெட்டீரியல் போன்ற பொருட்களாக கொள்முதல் செய்வதன் மூலம் ஆண்டிற்கு சுமார் 560 கோடி ரூபாய் மாநில அரசுக்கு வரியாக வந்திருக்கும். மேலும் 50000 தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பெறுவதால் அவர்களது வாழ்க்கை தரம்இ கல்வி, பொது சுகாதாரம் அனைத்தும் மேம்பட்டு இருக்கும். ஆண்டுக்கு சுமார் 2500 கோடி ரூபாய் அந்நிய செலவாணியும் அரசுக்கு கிடைத்திருக்கும். எனவே தாது மணல் தொழிலை நிறுத்தி வைத்துள்ளதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டுக்கு 680 கோடி ரூபாய் நட்டம். 50000 தொழிலாளர்கள் பணி இழப்பு.

எனவே தொழிலாளர்களின் கோரிக்கை எல்லாம் தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக எந்த தொழிற்சாலையையும் நிறுத்த வேண்டும் என எண்ணாதீர்கள். தொழிற்சாலைகள் இல்லை என்றால் சமுதாய வளர்ச்சி இல்லை. பொருளாதார முன்னேற்றம் இல்லை. வருங்கால சந்ததியினருக்கு, பொருளாதார முன்னேற்றம், கல்வி அறிவு, சமுதாய பாதுகாப்பு, நாகரீகம் போன்ற அனைத்திற்கும் தொழில்களே அடிப்படை பிரதானம். எனவே இந்த குறைகளை உடனடியாக தொழிலாளர்கள் சங்க பிரதிநிதியோடும் தொழிற்சாலை அதிபர்களோடும் கலந்து பேசி நிவர்த்தி செய்யுங்கள் என்பது தான்.

Source :http://www.thehindu.com/news/national/tamil-nadu/what-revival-close-to-50000-units-shut-shop-in-past-year/article24107824.ece?utm_source=tamil-nadu&utm_medium=sticky_footer

Number of workers employed too falls by more than 5 lakh