Subject: விவி குழுமம் பற்றிய பொய்யான தகவல்களை வெளியிட்டதற்கு ஆட்சேபணை
ஐயா,
15.11.2019 குமுதம் ரிப்போர்ட்டரில் விவி குழுமம் மற்றும் அதன் உரிமையாளர் வைகுண்டராஜனை பற்றி உள்நோக்கத்துடன் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுள்ளீர்கள். அதற்கு எங்களது ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்கிறோம்.
“இலுமணைட் தாதுதான் அணு ஆயுதங்கள் தயாரிக்கத் தேவைப்படும் முக்கிய மூலப்பொருளாகும். எனவே தனியார்களுக்குக் கிடைக்கும் இலுமணைட் தாதுக்களை அரசுக்குச் சொந்தமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்பது முன்பு இருந்த நடைமுறை. ஆனால் அதை யாரும் கண்டு கொள்ளாமல் வகைதொகையில்லாமல் கொள்ளையடித்து வந்தனர்”.
மேற்கூறிய வதந்திகளைப் பரப்பும் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கை மீது, இந்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம.; கடந்த வாரம் இந்திய அரசு அயோத்தி தீர்ப்பின் போது சமூக வலைதளங்களில் தவறான வதந்தி பரப்புபவர்கள் என சுமார் 37 பேர்களை கைது செய்தது. இந்திய அரசின் துணிவான நடவடிக்கையின் பயனாக அனைத்து சமூக வலைதளங்களும் இந்திய அரசுக்கு ஒத்துழைத்து, உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்தியா உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி சம்பந்தப்பட்ட தீர்ப்பை, எந்த விதமான மதக்கலவரங்களும் இல்லாமல் மிக திறமையான முறையில் கையாண்டது.
இலுமணைட் என்பது என்ன?
TiO2 FeO Fe2O3 TiO2 FeO Fe2O3 – இதுவே இலுமணைட் தாதுவின் வேதியியல் மூலக்கூறாகும். இதில் Ti என்பது டைட்டானியத்தைக் குறிக்கும் வேதியியல் குறியீடு ஆகும். Fe என்பது இரும்பைக் குறிக்கும் வேதியியல் குறியீடு ஆகும்.
இப்படி இலுமணைட் என்பது டைட்டானியமும், இரும்பும் சேர்ந்த கலவையாகும் இலுமனைட்டில் TiO2 – 45 to 55% தோராயமான விகிதாச்சரமும் FeOFe2O3 – 40 to 45% FeOFe2O3 – 40 to 45% தோராயமான விகிதாச்சாரமும் கலந்து உள்ளது. இப்படி இந்த டைட்டானியத்தில் இருந்து இரும்பை பிரிக்கும் முறை தான் வி.வி.டைட்டானியம் பிக்மென்ட்ஸ் ஆலையில் நடைபெற்று வருகிறது.
டைட்டானியம் என்பது இரும்பின் மாற்று தாதுவேயன்றி, அணு உற்பத்திக்கு எவ்விதத்திலும் பயன்படும் தாது ஆகாது. குறைந்த எடையில் நிறைய சக்தி – இதுவே டைட்டானியத்தின முக்கியத்துவம். மற்றும், இரும்பைப்போல் துருப்பிடிக்காது. மேலும் இலுமணைட் கறுப்பான நிறத்தில் இருந்தாலும், டைட்டானியமாக உருப்பெறும் பொழுது வெள்ளை நிறமாக மாறிவிடுகிறது. இக்குணத்தினால் டைட்டானியத்தை பேப்பர், பெயிண்ட், ரப்பர் போன்ற பொருள்கள் தயாரிப்பதற்கு, வெள்ளை பிக்மெண்டாக உபயோகப்படுத்துகிறார்கள்.
மேலும் முன்பு இருந்த நடைமுறைப் பற்றி பேசும் குமுதம் ரிப்போர்ட்டர், அதற்குப்பின் பின்பற்ற வேண்டிய நடைமுறை பற்றி குமுதம் ரிப்போர்ட்டர் பேச மறுப்பது, அதன் அறியாமையா? அல்லது அறியாதது மாதிரி நடிக்கும் அறிவு ஜீவியா?
கவர்மெண்ட் கம்பெனி காளைமாடு மாதிரி. குமுதம் ரிப்போர்ட்டருக்கு பால் கறக்க முடியாது. அதே வேளையில் தனியார் கம்பெனி பசுமாடு மாதிரி. நன்றாக பால் கறக்க முடியும்.
1998 மினரல் பாலிசி மூலமும், பின்பு அதைப்பின்பற்றி வந்த DAE அறிக்கை S.O. 61(E) S.O. 61(E) மூலமும், இலுமணைட் உற்பத்தியும், ஏற்றுமதியும் தனியாருக்கும் வழி வகுக்கப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில், இலுமணைட் என்பது வெறும் வியாபார நோக்கில் பயன்படும் ஒரு தாதுவேயன்றி, அணு உற்பத்திக்கு எந்த வகையில் துணை போவது இல்லை.
இப்படி, தேவைப்பட்டால் குதிரையை, கழுதையாக்க சித்தரிக்க திராணியுள்ள ஜனரஞ்சக வெகு பத்திரிக்கை, தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புவதை நிறுத்தி மறுப்பு வெளியிடவேண்டும். பழுத்த மரத்தில் தான் கல்லடிபடும். இதன்படி குமுதம் ரிப்போர்ட்டர் டீம் கல்லெறிந்து பார்க்கிறது. மேற்கொண்ட காரணங்களினால், குமுதம் ரிப்போர்ட்டர் பரப்பும் வதந்திகளை கண்டிப்பாக மறுக்கிறோம்.
மேலும் எங்களின் இந்த மறுப்பினை தவறாமல் உங்கள் பத்திரிக்கையில் பிரசுரிக்குமாறு தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்
ஆர்.பாலகிருஷ்ணன்