ரேர் எர்த் உற்பத்தியில் மேக் இன் இந்தியா திட்டத்தை மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் செயல்படுத்த வேண்டும்

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் சைனா 3500 டன் ரேர் எர்த் மினரல்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஜப்பான் அதன் தேவையில் 32 சதவீதத்தையும், அமெரிக்கா 38 சதவீதத்தையும் சைனாவில் இருந்து இறக்குமதி செய்கின்றன. இதே போல் கொரியா, ரஷ்யா, தைவான், தாய்லாந்து, இந்தோனிசியா நாடுகளும் சைனாவில் இருந்து ரேர் எர்த் கனிமங்களை இறக்குமதி செய்கின்றன.

ஆண்டுதோறும் சைனா சுமார் 1500 கோடிக்கு குறையாமல் இந்த ரேர் எர்த் கனிமங்களை இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்தியாவில் இந்திய அரசு நிறுவனம் மட்டுமே இதில் இருப்பதால் சைனாவோடு போட்டி போட முடியாமல் 2004 முதல் உற்பத்தியை நிறுத்தி விட்டார்கள். கடந்த 3 ஆண்டுகளில் வெறும் 5 டன் மட்டும் உற்பத்தி செய்துள்ளார்கள். உலக கையிருப்பில் 35 சதவீதத்தை கொண்டுள்ள இந்தியா இதில் மேக் இன் இந்தியா திட்டத்தை அமுல் படுத்தி ரேர் எர்த் உற்பத்தியை கூட்டினால் அந்நிய செலவாணி கிடைப்பதோடு அணு உலைக்கான எரிபொருளிலும் தன்னிறைவு அடையும்.

பிரதமர் அவர்கள் இதில் மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்துவார்களா?

Source : http://investorintel.com/technology-metals-intel/chinese-rare-earths-exports-dramatically-decrease-while-global-demand-for-rare-earth-products-increase/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *