இந்திய அரசு, சுரங்க அமைச்சகம் மற்றும் பெடரேசன் ஆப் இந்தியன் மினரல் இன்டஸ்ட்ரிஸ், ஜனவரி 2025 இல் “சுரங்கத்தில் மாநில சிறந்த நடைமுறைகள் குறித்த அறிக்கை” ஒன்றை வெளியிட்டது.
மேற்கூறிய வெளியீட்டைப் படிக்கும்போது, தமிழ்நாடு மாநிலத்தைப் பொறுத்தவரை கனிம தொழிலுக்கு சில கடுமையான சிக்கல்கள் உள்ளன. உணவு, துணி மற்றும் மரப் பொருட்கள் தவிர மற்ற அனைத்தும் சுரங்கத்தின் மூலம் மட்டுமே என்பது அனைவருக்கும் தெரியும். மேற்கண்ட வெளியீட்டில் பின்வருபவை குறிப்பிடப்பட்டுள்ளன.
1) மாநில வாரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுரங்க பங்களிப்பு, நமது அண்டை மாநிலங்களான
ஆந்திரா 2.43%
தெலுங்கானா 1.93%
கர்நாடகா 0.97%
தமிழ்நாடு 0.27%.
தமிழ்நாட்டில் மதிப்புமிக்க கனிமங்கள் அதிக அளவில் இருந்தாலும், மேற்கூறிய பதிவின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நமது மாநில பங்களிப்பு மிகக் குறைவு.
2) இந்தியா உட்பட நாடுகளின் சுரங்க ஆய்வு பட்ஜெட் 206 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் கடைசி இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் அர்ஜென்டினா 427, பெரு 586, மெக்சிகோ 607, சிலி 832, அமெரிக்கா 1820, கனடா 2440 மற்றும் ஆஸ்திரேலியா 2760 மில்லியன் அமெரிக்க டாலர்களை கனிம இருப்பு கண்டுபிடிப்பிற்கு செலவிடுகின்றன. எனவே ஆய்வு அடிப்படையில் இந்தியா மிகவும் மோசமாக அதாவது கடைசி இடத்தில் உள்ளது.
3) சுரங்க உரிமைகளுக்கான சராசரி ஒப்புதல் நேரமும் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் கொலம்பியா 1 மாதத்திற்குள், போட்ஸ்வானா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா, பிரேசில் 2 மாதங்களுக்குள், சிலி, 7 மாதங்கள், ரஷ்யா 12 மாதங்கள், தென்னாப்பிரிக்கா 12 மாதங்களுக்கு மேல் அதே நேரத்தில் இந்தியா சராசரியாக 26 முதல் 36 மாதங்கள், அதாவது 2 முதல் 3 ஆண்டுகள். 90% க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
4) கனிமங்களின் மூலம் அரசுக்கு வசூலிக்கும் வரி இனத்தில் இந்தியாவே அதிக அளவு வரி வசூலிக்கிறது. வரி விகிதத்தைப் பொறுத்தவரை DMF, ராயல்டி மற்றும் பிற வரிகள் உட்பட தோராயமாக 50% வரி விகிதத்தில் இந்தியா மிக உயர்ந்த வரி விகிதமாகும். இந்தோனேசியா (மேற்கு பாபுவா) 46%, நமேபியா 45%, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா 40% மற்றும் இந்தோனேசியா (சுலவேசி), சிலி 38%, கனடா (கியூபெக்) 34% மற்றும் மங்கோலியா 31%.
மேற்கண்ட அறிக்கை “தங்க முட்டையிடும் வாத்து” போன்ற கனிமத் தொழிலை இந்தியா எவ்வாறு அழிக்கிறது என்பதை கண்டு கொள்ளலாம். 50% வரி மட்டுமல்ல, அதிக வேலைவாய்ப்பு உருவாக்கும் தொழிலாகவும் கனிம தொழில் உள்ளது. ஆனால் அனுமதி வழங்கும் காலத்தை பொறுத்த வரை உலகத்திலேயே அதிகமான காலதாமதத்தை இந்தியா தான் உருவாக்குகிறது என்பதை இந்திய அரசின் சுரங்ககுத்தகை வெளிகொணர்ந்துள்ளது.
தொடர்புடைய பக்கங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.