Hindu Reply and our reply to Hindu

அன்புடையீர்,

தங்களது உடனடி பதிலுக்கு நன்றி.

பார்க்க வேண்டிய இடம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் இருக்கும் போது உங்கள் சென்னை அலுவலகத்திற்கு வந்து என்ன பிரயோஜனம்.

போபர்ஸ் ஊழலை வெளிகொண்டு வந்தாக மார்தட்டும் தாங்கள் இந்த இனத்தில் வழிக்கு விழுந்து பொய் செய்தி எழுத யாரிடம் எவ்வளவு பணம் பெற்றீர்கள்?.

நான் சரியான ஆள் தான். உங்கள் நிர்வாக ஆசிரியரையும் உங்கள் இந்து இயக்குனர்களையும் உங்களோடு உடன் அழைத்து வந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரைகளையும் ஒரு அடி இடம் கூட விடாமல் அவர்கள் முன்னிலையில் பார்த்து விடியோ எடுத்து நீங்கள் காசு வாங்கி கொண்டு உண்மைக்கு புறம்பான இந்த செய்திகளை சில ஊழல் அதிகாரிகள் துணையோடு எழுதுகிறீர்கள் என்பதை நிரூபிக்கிறேன்.

என்று தாங்கள் வர தயார்? தங்கள் இயக்குனர்களிடம் கேளுங்கள்.

பத்திரிக்கை தர்மமே தெரியாத தாங்கள் “வணக்கம் வைகுண்டராஜன்” என எழுதி இருக்கிறீர்களே? வைகுண்டராஜனிடம் கேட்டீர்களா? மின் அஞ்சல் அனுப்பினீர்களா? பதிவு அஞ்சலில் விளக்கம் கேட்டீர்களா?

உங்கள் பதில் என்னவாக இருக்கும். தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற பதிலாக இருக்கும். அப்படியானால் மஞ்சள் பத்திரிக்கைக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

என்னை சரியான ஆளா என கேட்கிறீர்கள்? ஒரு கடற்கரை ஊர் பெயர் எழுதவில்லை? தெரு பெயர் எழுதவில்லை. கற்பனையாக ஏதேதோ பிதற்றி இருக்கிறீர்கள்.  இந்து பத்திரிக்கையின் தரம் இவ்வளவா தாழ்ந்து விட்டது. உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஜோடிக்கப்பட்ட ஆவணங்கள் தவிர நீங்கள் காசுக்காக உண்மைக்கு புறம்பாக எழுதுகிறீர்கள். இப்போதும் அருதியிட்டு கூறுகிறேன்.

பத்திரிக்கை தவறான செய்தி வெளியிட்டால் எங்கு புகார் செய்ய வேண்டும் என்ற விலாசத்தையும் முகவரியையும் தெரியப்படுத்துங்கள்.

உள்நோக்கத்தோடு தாங்கள் இந்த பொய் செய்தியை எழுதி இருக்கிறீர்கள் என்பதை நான் அங்கு நிருபிக்கிறேன். உங்கள் ஆதாரத்தை அந்த ஆணையமே பார்க்கட்டும்.

சில ரொட்டி துண்டுகளுக்காக இப்படி திறமையை விற்பது நிச்சயமாக விபச்சாரம் என்ற பட்டத்தில் வராது. ஆனால் இதற்கு ஒரு நல்ல பெயரை தாங்களே சூட்டுங்கள். இப்போதும் கூறுகிறேன். எப்போது எங்கு வைத்து பார்வையிட வேண்டும் என்பதை தெரியப்படுத்துங்கள்.  பெயர் பெற்றதாக கூறப்படும் உங்கள் பத்திரிக்கை இயக்குனர்கள் முன்னிலையில் தங்கள் 3 நாள் செய்தியும் உள்நோக்கத்தோடு உண்மைக்கு புறம்பாக பிரசுரிக்கப் பட்டது என்பதை 3 மாவட்ட கடற்கரைகளையும் ஒரு அடி இடம் கூட விடாமல் காண்பித்து வீடியோ எடுத்து நிரூபிக்கிறேன் அல்லது தாங்கள் இவ்வாறு செய்தி வெளியிடும் போது பின்குறிப்பு என குறியிட்டு இது காசு வாங்கி கொண்டு வெளியிடப்படும் செய்தி என்பதை குறிப்பிடுங்கள்.

தங்கள் இயக்குனர், ஆசிரியர்கள் யார் யார் வருகிறார்கள்? என்று வருகிறார்கள்? எங்கு வருகிறார்கள்? எங்கு பார்வையிடலாம் என்பதை தெரியப்படுத்துங்கள். அப்போது நான் ஆதாரங்களை சமர்பிக்கிறேன்.

இப்படிக்கு

ஆர். பாலகிருஷ்ணன்

Samas <samas@thehindutamil.co.in> Thu, Aug 21, 2014 at 2:15 PM
To: “sworkersassociation@gmail.com” <sworkersassociation@gmail.com>

அன்புள்ள திரு. ஆர்.பாலகிருஷ்ணன், வணக்கம்.

 

நீங்கள் எனக்கும், எங்கள் பத்திரிகையின் ஆசிரியருக்கும் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த வெவ்வேறு நண்பர்களின் மின்னஞ்சல்களுக்கும் அனுப்பிய கடிதம் எனக்கும் எங்கள் ஆசிரியருக்கும் வந்தடைந்தது.

 

ஊர் அறிந்த ஒரு கொள்ளையை மறைத்து துளியும் வெட்கம் இன்றி வக்காலத்து எடுத்து ஒரு மின்னஞ்சல் அனுப்புவதோடு, உங்கள் மனசாட்சியைக் கொன்று அதன் மீது ஏறி நின்று உண்மையைப் பேசும் ஒரு செய்தியாளன் மீதும், தன்னுடைய துணிச்சலான இதழியலுக்காக 135 ஆண்டுகளாகக் கொண்டாடப்படும் ஒரு பத்திரிகையின் மீதும் அவதூறை உமிழ்ந்திருக்கிறீர்கள். பணம் வாங்கிக்கொண்டு எழுதுவதாகவும் இப்படிதான் எங்கள் பத்திரிகையை வளர்த்திருக்கிறோம் என்றும் எழுதியிருக்கிறீர்கள்.

 

உண்மையில், இந்தத் தொடர் கடலோடிகளின் வாழ்க்கையை, துயரத்தை, பிரச்சினைகள் எழுதும் தொடர். இன்னும் அவர்களுடைய ஆயிரமாயிரம் பிரச்சினைகளைத் தொட வேண்டியுள்ள சூழலில், மணல் கொள்ளை போன்ற ஒரு விவகாரத்துக்கு இவ்வளவு இடம் அளித்தால் போதும் என்று குறைந்த விஷயங்களையும் ஊர் அறிந்த செய்திகள் – படங்களையும் மட்டுமே மூன்று அத்தியாயங்களாக்கி வெளியிட்டிருக்கிறோம். ஆனால், நூறு அத்தியாயங்கள் எழுதும் அளவுக்கு விஷயங்களும் படங்களும் ஆவணங்களும் எங்கள் கையில் இருக்கின்றன. லெட்டர்பேடு ஆட்கள், போஸ்டர் ஆட்கள், இணையத்தில் சமூக வலைதளங்களில் கும்பலாக உட்கார்ந்து பிரச்சாரம் செய்யும் ஆட்கள், செல்பேசி வழியே மிரட்டும் ஆட்கள் யாவரையும் அறிந்திருக்கிறோம் (இணையக் கும்பல்கூட ஆதாரபூர்வமாக எங்கள் அலுவலகக் கணினி பிரிவில் சிக்கியிருக்கிறது). தொடர்ந்து எழுதலாமா?

 

ராஜீவ் காந்தி போன்ற ஒரு மனிதரின் சக்திக்கே அஞ்சாமல், போபர்ஸ் ஊழலை வெளிக்கொண்டுவந்த நிறுவனம் இது பாலகிருஷ்ணன். ஒரு விஷயம் எழுதும்போது, எவ்வளவு ஆதாரங்களைக் கையில் வைத்திருப்போம்? யாருடன் நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று புரிகிறதா?

 

நீங்கள் சரியான நபராக இருக்கும்பட்சத்தில் நேரில் அலுவலகம்  வாருங்கள். விவிமினரல்ஸ் சார்பில் நீங்கள் பேச வருவதாக அவர்களுடைய கடிதத்துடன். நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. விடியோ, ஆடியோ ஆதாரங்கள். ஆவணங்கள், வாக்குமூலங்கள். நாங்கள் கேள்வி கேட்கிறோம், நீங்கள் பதில் சொல்லுங்கள். பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம். தயாரா?

தங்கள்…
சமஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *