Copy of objection mail send to Dr.Ramadoss and marked to all Medias by Mr.Niyas Ahamad

From: Niyas Ahmed <niyasah01@gmail.com>
Date: 2015-11-27 12:10 GMT+05:30
Subject: மருத்துவர் ராமதாஸ் நேற்று தாது மணல் சம்பந்தமாக சிபிஐ விசாரணை வேண்டும் என போட்டி கம்பெனியிடம் பணம் வாங்கி கொண்டு கொடுத்த அறிக்கை சம்பந்தமாக – ஆட்சேபணை
To: founder PATTALI MAKKAL KACTHI THAILAPURAM THOTTAM <founderpmk@gmail.com>
Cc: All medias

ஐயா,
மருத்துவர் ராமதாஸ் நேற்று தாது மணல் சம்பந்தமாக சிபிஐ விசாரணை வேண்டும் என போட்டி கம்பெனியிடம் பணம் வாங்கி கொண்டு கொடுத்த அறிக்கை சம்பந்தமாக எனது இந்த ஆட்சேபணையை வெளியிடுகிறேன். தயவு செய்து இதனை தங்கள் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சிகளில் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.
“மாற்றம்”; “முன்னேற்றம்” “அன்புமணி” என தமிழகம் முழுவதும் கழுதைகள் உண்பதற்கு இந்தூர் மருத்துவ கல்லூரியில் ஊழல் செய்து கொள்ளை அடித்த பணத்தை வைத்து மருத்துவர் ராமதாஸ் குடும்பம் ஏராளமான போஸ்டர் ஒட்டி உள்ளது. கழுதைகளுக்கு இது நல்ல இரையாக இருந்தது.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் பதவிக்காகவும் பணத்திற்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.  இவர்களிடம் ஒரு நேர்மையையோ அல்லது ஒரு பாரம்பரியத்தையோ எதிர் பார்க்க முடியாது. தூக்கத்திலும் ராமதாஸ் கனவு காண்பது ராமதாஸ் மகன் அன்புமணி மீது உள்ள சிபிஐ வழக்கு தள்ளுபடி ஆக வேண்டும் அல்லது எல்லோர் மீது இரண்டுக்கு மேற்பட்ட சிபிஐ வழக்குகள் வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் மீது உள்ள சிபிஐ வழக்கை விட அன்புமணி மீது குறைவான வழக்கு உள்ளது என பேசலாம் என நினைக்கிறார். ஆனால் மகன் அன்புமணியோ, ஒருவரிடம் பணம் இருக்கிறது என தெரிந்தால், அன்பாக கேட்டு, மிரட்டி, பலவந்தபடுத்தி வழி இல்லை என்றால் கொலை செய்தாவது பணத்தை கைப்பற்ற வேண்டும் என்பதில் குறியாக உள்ளவர். தகப்பனும் மகனுக்கு உதவி செய்வார் தானே!!
ஒரே கம்பெனி எல்லா தொலைகாட்சி நிறுவனங்களுக்கும் பணம் கொடுத்து டெலிஷாப்பிங் விளம்பர படுத்த வைப்பது போல் விவி மினரல் நிறுவனத்திற்கு எதிரான போட்டி கம்பெனியான 39 லட்சம் தாதுமணலை கொள்ளை அடித்து கொழுத்த தயாதேவதாஸ்க்கும் முன்னாள் மத்திய அமைச்சருக்கும் உரிமை உள்ள இந்தியன் கார்னட் சாண்ட் கம்பெனி நிறுவனத்தினர் இவ்வாறு கொள்ளைக்கு துணை போகும் ராமதாஸ் போன்ற அரசியல்வாதிகளுக்கும், எலும்பு துண்டுகளுக்கு வாலாட்டுவது போல் பணத்திற்காக தங்களது திறமையை விற்கும் ஊடகவியலாளர்களையும் கையில் வைத்துக் கொண்டு இந்த பொய் பிரச்சாரத்தை திட்டமிட்டு செய்து வருகிறார்கள். மருத்துவர் ராமதாஸ்க்கு  பணத்திற்கு பணமும் கிடைக்கிறது. அன்புமணி மீது உள்ள சிபிஐ வழக்கை விட பெரிய குற்றச்சாட்டு என்பதால் அவரது மகன் அன்புமணி மீது உள்ள களங்கமும் குறையும். இந்த களங்கம் குறைந்தால் தான் அடுத்த கூட்டணியில் பாமக-வை யாராவது சேர்ப்பார்கள்.
விவி-யை தாக்கி பேச வேண்டாம் என்றால் விவி-யில் இருந்து ரூபாய் 100 கோடி கொடுத்தால் நாம் விட்டு விடலாம் என திட்டமிட்டு பணம் வாங்கி கொண்டு இவ்வாறு பேசி வருகிறார்.  மாதம் ரூபாய் 5 கோடி கேட்டு விவி நிறுவனத்திற்கு விட்ட தூதை ஏற்கனவே பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. (குமுதம் ரிப்போர்ட்டர் நாள் 29.09.2015) ஆனால் விவி நிறுவனத்தில் இருந்து இவரது அன்பான மிரட்டலுக்கு பணியவில்லை. எனவே இவர் பசுமை தாயகத்தின் மூலம் விவி-யை மிரட்டுவதற்கு உயர்நீதிமன்றத்தில் மனு எண் 4/2014 தாக்கல் செய்தார். சென்னை உயர்நீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி தலைமையில் ஆன அமர்வு அந்த மனுவை 25.11.2014 அன்று தள்ளுபடி செய்தது. எனவே மாதம் இரண்டு கோடி ரூபாய் வாங்கி கொண்டு மருத்துவர் ராமதாஸ் விவி-க்கு எதிராக பேசி வருகிறார்.
விவி-யை தாக்கி பேசுவதால் தயாதேவதாஸ்க்கு என்ன லாபம் என கேட்கலாம். விவி கம்பெனியை இவ்வாறு தாக்கி நிறுத்தி விட்டால் விவி-யின் வாடிக்கையாளர்கள் சரக்கிற்காக தயாதேவதாஸ் கம்பெனிக்கு தான் போக வேண்டும் என்பது இயற்கை தானே?
மேலும் தற்போது அந்த போட்டி கம்பெனியான முன்னாள் மத்திய அமைச்சருக்கு சொந்தமான கம்பெனி சுமார் 39 லட்சம் டன்னுக்கு மேல் சட்டபுறம்பாக சுரங்கம் செய்து அகப்பட்டு நீதிமன்ற உத்தரவு படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது (தயவு செய்து பார்க்க. http://www.beachminerals.org/large-scale-illegal-mining-major-violations-tamilnadu-govt-determine-mining-lease-granted-southern-enterprises-belongs-dayadevadas-claim-president-federation-o/ ) . இதனை எதிர்த்து தயாதேவதாஸ் தாக்கல் செய்த உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது ( http://www.beachminerals.org/39-lakhs-m-ton-illegal-minor-southern-enterprises-special-leave-petition-dismissed-honourable-supreme-court-02-02-2015-vide-slp-cc-nos-740-7412015/  ).
எனவே தன் மீது அரசு எடுத்த நடவடிக்கையை விழல் ஆக்க அவர்கள்  ராமதாஸ் மாதிரி கொள்ளைக்கார அரசியல்வாதிகளுக்கு பெரும் பணம் செலவழித்து சேற்றை வாரி வீசுகிறார்கள். ராமதாசும் அன்புமணியும் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள். இது ஒரு பொய்க்கால் குதிரை. இவர்கள் பணம் வாங்கி கொண்டு கூறும் தாது மணல் குற்றச்சாட்டுகளுக்கு தாது மணல் தொழிலாளர்கள் முகநூலிலேயே பதில் கொடுத்தார்கள். ஆதாரங்களை பதிவு செய்தார்கள். அதே போல் ராமதாஸ் அன்புமணி மீது உள்ள தவறுகளை ஆதார பூர்வமாக பதிவிட்டார்கள். இதற்கு மருத்துவர்களின் அடிவருடிகளில் சிலரை வைத்து ஆபாசமாகவும், அசிங்கமாகவும் பதில் பதிந்து அன்பான மிரட்டல் கொடுத்தார்கள். அந்த அன்பான மிரட்டலையும் பொருட்படுத்தாமல் கொள்ளைக்கார மருத்துவர்களின் முகமூடியை கிழித்தே தீருவது என கனிம தொழிலாளர்கள் குடும்பத்தினர் ஒன்று திரண்டு ஒவ்வொருவரும் பதில் பதிந்தார்கள். இவர்களது யோக்கியதையை மக்கள் தெரியட்டும் என அப்படியே விட்டு விட்டு மருத்துவர்கள்  மீது உள்ள குறைபாடுகளை மட்டும் விரிவாக பட்டியலிட்டார்கள்.
நானும் மருத்துவர் ராமதாசுக்கு நேரடியாகவே சவால் விட்டு அவர் மற்றும் அன்புமணியில் முகநூலில் அவர்களது அபாண்டமான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை பதிவிடுங்கள். அந்த ஆதாரங்கள் எல்லாம் பொய் என்பதையும் இவை அனைத்தும் தொழிற்போட்டியாளர்களிடம் ராமதாஸ் பணம் பெற்றுக் கொண்டு கூறப்படும் பொய் குற்றச்சாட்டு என்பதை நான் ஆதாரபூர்வமாகவும் ஆவண பூர்வமாகவும் நிரூபிக்கிறேன் என பதிவிட்டேன்.  கொள்ளை அடிக்கவும் காசு அடிக்கவும் அரசியல் நடத்தும் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதாரங்களை பதிவிடுவதற்கு பதிலாக அல்லது எனது பதிவிற்கு பதிலிடுவதற்கு பதிலாக எனது பதிவையும் கருத்துக்களையும் நீக்கியதோடு என்னையும் பிளாக் செய்து விட்டார்கள். ராமதாஸ், அன்புமணி மடியில் கனம் இல்லை என்றால் என்னை ஏன் பிளாக் செய்ய வேண்டும்? ராமதாஸ் வகையறாவை முகநூலில் போற்றி பதிவதற்கு என்றே மொத்தம் 175 முகநூல் கணக்குகளை வைத்து இரண்டு நபர்களை நிரந்தரமாக பணி அமர்த்தி இவர்களை போற்றுவதற்கும் வாழ்க என பதிவதற்கும் ஏற்பாடு செய்துள்ளார்கள். இவர்களுக்கு எதிராக ஏதேனும் கருத்து பதியப்பட்டால் அரைமணி நேரத்தில் கருத்தும் காணாமல் போய் விடும். பதிந்தவர்களின் பெயரும் பிளாக் செய்யப் பட்டு விடும்.
அரைமணி நேரத்தில் மாற்று கருத்தை அழித்து பெயரை பிளாக் செய்பவர் பதவிக்கு வந்தால் எதிர் கருத்து கூறுபவரையே அழித்து விடுவார் அல்லவா? இவரா ஒரு நேர்மையான அரசியல்வாதி? இவரா ஒரு ஜனநாயகவாதி? ஒருவர் கேட்கும் கேள்விக்கு பதில் கூற முடியவில்லை என்றால் சும்மா விட வேண்டும். அதற்காக அது மக்களுக்கு போய் சேர கூடாது என பிளாக் செய்பவர் ஒரு நல்ல ஜனநாயகவாதியா? மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணியால் பிளாக் செய்யப்பட்டவர்களின் பட்டியல்
1) நியாஸ் அகமது (நான்)
2) வெற்றிவேல்
3) ராஜாராமன்
4) ஹாசினி கவுதம்
இவ்வாறு இவர்களால் பிளாக் செய்யப்பட்டவர்களின் பட்டியல் 250-ஐ தாண்டும். ஆனால் 50000 கனிம தொழிலாளர் குடும்பத்தில் இருந்தும் மருத்துவர் ராமதாஸ் தவறுக்கு வருந்தி தவறை திருத்தும் வரை இம்மாதிரி தொடர்ந்து அவர்களது தவறை பட்டியல் இட்டே வருவது என முடிவு செய்து உள்ளார்கள்.
இவர் உண்மையிலேயே சரியான ஜனநாயகவாதி என்றால் மாற்றுக் கருத்துக்களை அழிக்காமல் இருக்கட்டும். உண்மையிலேயே நேர்மையானவர் என்றால் மாற்றுகருத்தில் கேட்கும் கேள்விக்கு பதில் கூறட்டும்.
மதுவை ஒழிப்பேன். அதற்கு போராடுவேன் என்பவர்கள் முதலில் அன்புமணியை மது குடிக்காமல் இருக்க சொல்லுங்கள். மது குடிப்பவர்களுக்கு கட்சி பதவி கிடையாது என கூறச் சொல்லுங்கள். மது குடிப்பவர்களின் வாக்கு எங்களுக்கு வேண்டாம் என கூறச் சொல்லுங்கள். மது விலக்கு பற்றி மருத்துவர் ராமதாஸ் பேச ஆரம்பித்த பிறகு மது விற்பனை நாளுக்கு நாள் கூடிக் கொண்டு தான் இருக்கிறதே தவிர குறையவில்லை. எனவே மக்கள் ஒட்டகூத்தன் பாட்டுக்கு இரட்டை தாள்ப்பாள் என்ற அவ்வையின் சொல் போல ராமதாஸ் சொன்னால் அதை கேட்க மாட்டோம் என மக்கள் அவர் கருத்தை எடுத்தெறிகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
அதே போல் எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த ஊர்களில் ராமதாஸ் கூட்டம் போடுகிறாரோ கூட்டத்திற்கு முந்தைய நாள், கூட்டம் போடும் நாள்இ அடுத்த நாள் ஆக 3 நாட்களும் மது விற்பனை இரண்டு மடங்கு கூடுகிறது. காரணம் கூட்டத்திற்கு அழைப்பதற்காக இவர்கள் ஏராளமான மது வாங்கி வினியோகிப்பது. அதே போல் கூட்டத்திற்கு இந்தூர் மருத்துவ கல்லூரி கொள்ளையில் பெற்ற ரூபாயில் ஏராளமாக ரூபாய் கொடுப்பது.
ராமதாஸ் முதலில் 5 சத்தியங்கள் செய்திருந்தார். அதில் ஒன்று நானோ எனது குடும்பத்தினரோ எந்த பதவிக்கும் வர மாட்டோம் என்பது. வெளிப்படையான நடவடிக்கை என்பது. இந்த சத்தியங்களை மீறினால் முச்சந்தியில் வைத்து செருப்பால் அடிக்கலாம் என பேசினார். தன் தாய் மீது அடித்த சத்தியத்தையே மீறிய இவர்கள் பணத்திற்காகவும், பதவிக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
எந்த சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோருகிறாரோ அதே சிபிஐ இவர் மகன் மீது வழக்கு தொடர்ந்து உள்ளதே சிபிஐ விசாரணை நேர்மையாக இருக்கும். எனவே மகனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என ஏன் இவர் அறிக்கை விடவில்லை? சிபிஐ வழக்கு போட்டுள்ளதால் அன்புமணி தேர்தலில் நிற்க மாட்டான் என ஏன் சொல்லவில்லை? சிபிஐ ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால் அன்புமணியை பதவியை ராஜினாமா செய்ய ஏன் சொல்லவில்லை? சிபிஐ வழக்கு முடியும் வரை பாராளுமன்ற உறுப்பினராக செயல்படக் கூடாது என ஏன் சொல்லவில்லை?  நேர்மையான சிபிஐ வழக்கு பதிவு செய்து விட்டது. எனவே அன்புமணியை கட்சியை விட்டு நீக்குகிறேன் என ஏன் சொல்லவில்லை? இவரா ஊழலை ஒழிக்க போகிறார்.? இவரா மதுவை ஒழிக்க போகிறார்?
தனக்கு மாமூல் தரவில்லை என்பதற்காக 50000 தொழிலாளர் சம்பந்தப்பட்ட தாது மணல் தொழில் மீது மாதம் 2 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு அபாண்ட பழி சுமத்தியர்  ஆட்சிக்கு வந்தால் எப்படி தொழிற்சாலைகளை இயங்க விடுவார்?
உண்மையிலேயே இவர் ஊழலை ஒழிப்பவர் என்றால் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட அன்புமணிக்கு பதிலாக அன்புமணியை விட அதிகம் படித்த ஐஏஎஸ் அதிகாரியாக முன்பு பணியாற்றி நிர்வாக திறன் பெற்ற அன்புமணி போல மத்திய அமைச்சராக இருந்தும் அனுபவம் பெற்ற திரு.வேலு அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அல்லது 10 வருடங்களுக்கும் மேலாக கட்சி தலைவர் பதவி வகித்தும் கூட இது வரை எந்த புகாரிலும் எந்த பிரச்சனையிலும் பெயர் கெடாத ஜி.கே.மணி அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அல்லது ரயில்வே அமைச்சராக பணியாற்றும் போது தமிழகத்திற்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து தென்மாவட்டங்களுக்கு ஏராளமான புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்திய திரு.ஏ.கே மூர்த்தி அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். இப்படி செய்தால் இவர் ஒரு யோக்கியமான அரசியல்வாதி. முன்பு செய்த சத்தியத்தை தகப்பனும் மகனும் தொடர்ந்து காப்பாற்றுகிறார்கள் என மக்களும் பேசுவார்கள்.
தற்போது தாது மணல் சம்பந்தமாக ஆஷிஷ்குமார் அறிக்கை, ககன்தீப் சிங் பேடி அறிக்கை என பேசுகிறார். உண்மையில் ஆஷிஷ்குமார் உள்நோக்கத்தோடு பொய்யாக அறிக்கை தயாரித்தார் என்பதற்கு ஆதாரங்களோடு குற்ற வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது http://www.beachminerals.org/complaint-ashish-kumar-ias-making-false-report-v-v-mineral-part/ இணைப்பில் பார்க்கலாம். இவ்வாறு உள்நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டதை வாங்கிய பணத்திற்காக மீடியாக்களுக்கு கூறுகிறார். அதே போல் ககன்தீப் சிங் பேடிக்கும், விவி மினரல் நிறுவனத்திற்கும் இடையே உள்ள முன்விரோதம் ஆவண பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு உயர்நீதிமன்றமும் ககன்தீப் சிங் பேடிக்கு பதிலாக வடநாட்டில் உள்ள ஒரு நீதிபதியை விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை மறுத்து ககன்தீப் சிங் பேடி தான் வேண்டும் என கேட்பதில் இருந்து விவி-க்கு பகை உள்ள ஒரு அதிகாரியை வைத்து விவி-க்கு எதிராக எழுதி வாங்க வேண்டும் என திட்டமிட்டு இருப்பது தெரியவில்லையா?
தோரியம் ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறுகிறார். தோரியம் பிரிப்பதற்கான தொழில் நுட்பமே இந்தியாவில் எங்கும் இல்லை என்பதும் தோரியம் ஏற்றுமதி செய்யப்பட முடியாது என்பது அணுசக்தி துறை தெளிவாக கூறி உள்ளது. அதுபோல் தூத்துக்குடி துறைமுக சபையில் உள்ள சுங்க துறை அதிகாரிகளும் ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களில் தோரியம் போன்ற எந்த பொருளும் நாளது தேதி வரை ஏற்றுமதி செய்யப்படவில்லை என்பது ஒவ்வொரு பொருளையும் சிறப்பான இயந்திரம் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் அறிந்து கொள்ளப்பட்டது என கூறி உள்ள விபரம் http://www.beachminerals.org/tuticorin-port-trust-has-scanner-to-find-out-radioactive-materials-uranium-thorium-monazite-or-other-unwanted-materials-used-for-export-until-now-no-such-materials-found-in-the-export-cargo-tutico/ இணைப்பில் உள்ளது. அதே போல் மோனசைட் நேரடியாகவோ இதர கனிமங்களோடு சேர்ந்தோ ஏற்றுமதி செய்யப்பட முடியாது என்ற விபரம் http://www.beachminerals.org/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/     இணைப்பில் உள்ளது.
தற்போது உள்ள மழை வெள்ள சேதத்திற்கு ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப் பட்டு இருப்பது தான் காரணம். பொத்தேரி, வல்லாஞ்சேரி முதலிய ஏரிகள் அனைத்தும் இவருக்கு மாதமாமூல் கட்டும் எஸ்.ஆர்.எம். பச்சமுத்துவால் ஆக்கிரமிக்கப் பட்டு உள்ளது. அவர்கள் எந்தவித அனுமதியும் இன்றி அடுக்குமாடி குடியிருப்பு என கட்டிடம் கட்ட அனுமதி பெற்று கல்லூரி நடத்தி வருகிறார்கள். இந்த விதிமீறல்கள் அனைத்தும் பதிவு அஞ்சலில் ராமதாஸ், அன்புமணி, ஜிகே மணி ஆகியோருக்கு எழுதப்பட்டது. ஆனால் இதை பயன்படுத்தி மாத மாமூலை பச்சமுத்துவிடம் ராமதாஸ் கூட்டினாரே தவிர இந்த கல்வி கொள்ளை பற்றி வாய் திறக்கவில்லை. எஸ்.ஆர்.எம். கல்லூரியில் விதிமீறல் இல்லை என ராமதாஸ் மற்றும் அன்புமணி அறிக்கை விட தயாரா? மேற்கண்ட கல்லூரியின் விதிமீறல்கள் தங்களுக்கு பதிவு அஞ்சலில் அனுப்பபடவில்லை என அவர்கள் மறுக்க தயாரா? எஸ்.ஆர்.எம். பச்சமுத்துவின் கல்வி கொள்ளை பற்றி வாய் திறக்காமல் இருக்க பச்சமுத்து மாதாமாதம் கொடுக்கும் ரூபாய் 5 கோடி தான் காரணமா? அல்லது வேறு காரணமா? ராமதாஸ் மற்றும் அன்புமணி அறிக்கை வெளியிடட்டும். மேலதிக விபரங்களுக்கு www.pmaed.orgஎன்ற இணையத்தை பார்க்கவும். கல்வி கொள்ளைக்கு அரசியல் கொள்ளையர்களான ராமதாஸ் மற்றும் அன்புமணி துணை போவது தெரியும்.
சமீபகாலத்தில் அன்புமணி ராமதாஸ் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பம் ஆகி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அது தற்கொலை தான் என்றும், அந்த பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணம் அந்த பெண்ணின் முறைமாமன் என்றும் வெளியே ஒரு செய்தி அன்புமணி மற்றும் ராமதாசால் பரப்பப் பட்டது. சாதாரண பாமர மக்களும் கேட்கிறார்கள். காதலை எதிர்ப்பதாக கூறும் ராமதாஸ், அந்த பெண்ணின் முறைமாமன் திருமணம் ஆகாமலேயே அந்த பெண்ணோடு வந்து தங்கி செல்ல அனுமதித்து இருப்பாரா என்று? இதற்கு மருத்துவர் ராமதாசின் விளக்கம் என்ன?
இன்னொரு சாரார் பேசுகிறார்கள். அன்புமணி வீட்டில் வேலை செய்த பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணம் அன்புமணி தான் என்றும், தன்னை திருமணம் செய்ய அந்த பெண் வற்புறுத்தியதால் அவள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு தற்கொலை என வழக்கு திரிக்கப்பட்டுள்ளது என கூறுகிறார்கள். அரசியலில் நேர்மை, வெளிப்படை தன்மை என வன்னிய சமூக மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கும் ராமதாஸ், ஏன் இந்த பெண்ணின் மரணம் பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என கேட்கவில்லை?. முதலில் அவர் கேட்க வேண்டியது அன்புமணி ராமதாஸ் வீட்டில் வேலை செய்த பெண் மரணம் அடைந்தது தற்கொலை செய்தாளா அல்லது கொலை செய்யப்பட்டாளா? அந்த பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணம் அன்புமணியா? அல்லது உண்மையிலேயே அந்த பெண்ணின் முறைமாமனா? இது பற்றி சிபிஐ விசாரணை வேண்டும் என ஏன் ராமதாஸ் கேட்கவில்லை. இதற்கு சிபிஐ விசாரணை கேட்டால் அன்புமணி ராமதாஸ் மாட்டி விடுவார் என்ற அச்சமா? தாது மணல் மட்டும் அல்ல. அன்புமணி வீட்டில் வேலை செய்த பெண்ணின் மரணம் பற்றியும், உரிய அனுமதி இன்றி ஏரிகளை ஆக்கிரமித்து கல்வி கொள்ளை நடத்தும் எஸ்.ஆர்.எம். நிறுவனம் பற்றியும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை விட்டால் உண்மையிலேயே இவர் நேர்மையானவர் என நம்பலாம். ராமதாசோ அல்லது அன்புமணியோ இதற்கு தயாரா?
அதே போல் www.beachminerals.org இணையத்தை பார்க்கவும். இதில் இவர் தாது மணல் பற்றி கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதே போல் இவருக்கு இப்படி பொய் குற்றச்சாட்டு கூற பணம் கொடுக்கும் நிறுவனம் தான் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டு பிடிபட்டு உள்ளது என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.
அதேபோல் ராமதாஸ் மற்றும் அன்புமணி போன்ற அரசியல் கொள்ளையர்கள் தான் பணத்திற்காக இந்த பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள் என்பது http://niyasah01.blogspot.in/ இணைப்பில் உள்ளது. அதனையும் அனைவரும் பார்த்துக் கொள்ளலாம்.
மாற்று கருத்தையே சகிக்க முடியாத மருத்துவர்கள் குடும்பம் ஆட்சிக்கு வந்தால் ஆப்பிரிக்கா நாடுகளில் போராட்டம் நடத்திய 48 ஆசிரியர்கள் காணாமல் போனது போலவும் அதே போல் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் காணாமல் போனது போலும் வன்னியர்கள் அல்லாதோர் காணாமல் போய் விடுவார்கள். அவர்கள் இந்த உலகத்தை விட்டே போனார்களா என்பது குடும்பதாருக்கு கூட தெரியாமல் போய் விடும். ரயில்வே தண்டவாளத்தில் கூட பிணம் கிடைக்காத நிலை வந்து விடும். எனவே இம்மாதிரி ஒரு அராஜக ஆட்சி தமிழகத்தில் வந்து விட கூடாது. எதிர் கட்சியாக இருக்கும் போதே தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பெறுபவர்கள் ஆளும் கட்சி ஆனால் என்ன நடக்கும். யோசித்து பாருங்கள். இது தாது மணல் தொழிலுக்கு மட்டும் தானே என நினைக்க வேண்டாம்.  மாமூல் கொடுக்காத அனைத்து தொழில்களுக்கும் இதே நிலை வந்து விடும். ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் ஆளை கடித்தது என்ற பழமொழி உண்டு. அதே போல் இது எல்லோரையும் கடித்து விடும்.
முதலில் அன்புமணியை முதல்வராக ஏற்பவர்களோடு கூட்டணி என்றார்கள். அதில் வியாபாரம் ஆகாததால் கூட்டணிக்காக விட்டுக் கொடுக்க தயார் என்கிறார்கள். அனைவருக்கும் தெரியும். ராமதாஸ் குடும்பம் இனப்பெருக்கத்திற்கு இந்தியா வந்து இனப்பெருக்கும் முடிந்து ஆஸ்திரேலியா பறந்து செல்லும் பறவைகள் போன்றவர்கள் தான் ராமதாசும், அன்புமணியும். எனவே தேர்தல் நேரத்தில் எந்த கூட்டணிக்கு ஜெயிக்க வாய்ப்பு உண்டோ அந்த கூட்டணியில் சேர்ந்து ஜெயிப்பார்கள். பிறகு எங்கு பணம் மற்றும் பதவி வருமோ அந்த கூட்டணியில் சேர்ந்து கொள்வார்கள் என்று. எனவே இன்னும் சில நாளில் இவர்கள் எதை வேண்டுமானாலும் விட்டு கொடுப்பார்கள். ராமதாஸ் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டிய பார்த்தீனியம் போன்ற விஷ செடி. எனவே இந்த விஷ செடியை ஒழித்தால் மட்டுமே தமிழகம் சுபிட்சம் பெரும். தொழிலாளர்களும் தொழில் அதிபர்களும் நிம்மதியாக தொழில் செய்ய முடியும்.
எனவே பார்த்தீனியம் போன்ற மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தினரை அரசியலை விட்டே விலக்கி பாட்டாளி மக்கள் கட்சியை அன்புமணியை விட அதிகம் படித்த நிர்வாக அனுபவம் பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வேலு அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மனசாட்சி உள்ள ஒவ்வொரு பாமக தொண்டனும் முடிவு செய்து அதனை பொது மக்களிடமும் இதர பாமக –வினரிடமும் பரப்ப வேண்டும்.
இப்படிக்கு
நியாஸ் அகமது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *