ஸ்டாலினுக்கு ஓர் கடிதம்

ஸ்டாலின் அவர்களே,

கனிம வள நிறுவனங்களை பற்றி இரண்டொரு நாட்களுக்கு முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தீர்களே!! நினைவிருக்கிறதா? அதில் மோனசைட் என்ற தாது பொருள் அணுவை பிளக்க உதவும் என்றும் அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வி.வி.மினரல் நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் தாது மணல் கொள்ளையால் அரசுக்கு ஒரு லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் இதை அள்ளுவதால் அங்கு வாழும் மக்களுக்கு பலவிதமான நோய்கள் வருகின்றன என்றும் கூறி உள்ளீர்களே!!! எங்களுக்கு உள்ள சந்தேகங்கள் என்னவென்றால்..

1) ஏற்றுமதி அனுமதி வழங்குவது மாநில அரசின் கையில் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். அப்படி இருக்க மாநில அரசை எப்படி இந்த விஷயத்தில் சேர்த்தீர்கள்?

2) இந்த தொழிலால் அங்கு உள்ள மக்கள் நோய்களுக்கு ஆளாவார்கள் என்றால் அரசு ஏற்றும் நடத்தும் இந்தியன் ரேர் எர்த் நிறுவனம், மணவாளக்குறிச்சி அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளதே. அதனை நீங்கள் எதிர்க்கவில்லையே.? மணவாளக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் மணல் அள்ளுவதை ஆதரித்து குரல் கொடுத்துள்ளாரே….உங்களுக்கு விரோதம் இந்த தொழிலா அல்லது இந்த தொழில் செய்பவரா?

3) மோனசைட் கனிமத்தை வைத்து அணுவை பிளக்க முடியும் என்று நீங்கள் எங்கு படித்தீர்கள்? நான் பெரியார் பள்ளியில் படித்தேன் அண்ணாவிடம் படித்தேன் கலைஞரிடம் படித்தேன் என்று சொல்லும் நீங்கள் 10-ம் வகுப்பு வேதியியல் பாடத்தை படித்து இருந்தால் தெரிந்து இருக்கும்

4) மத்திய அணுசக்தி துறை தரும் தகவல்படி ஒரு வருடத்திற்கு 1500 கோடி அளவுக்கு இந்த தொழிலில் ஏற்றுமதி நடக்கிறது என்று கூறுகிறது. உங்கள் கணக்கு சரி ஆக வேண்டும் என்றால் இந்த தொழில் சுமார் 70 வருடமாவது நடந்து இருக்க வேண்டும்.

இப்படிக்கு
கனிம தொழிலாளர்கள்

1 thought on “ஸ்டாலினுக்கு ஓர் கடிதம்

  1. raja

    not only stalin, most of the politicians, most of the people are commenting on this industry without any basic knowledge about it

    cruz

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *