வெள்ள நிவாரண பணியில் விவி மினரல் நிறுவனம் மற்றும் தாது மணல் தொழிலாளர்களின் பங்களிப்பு

சமீபத்தில் சென்னை மற்றும் கடலூரை கலக்கிய வெள்ளத்தில் ஏராளமான நபர்கள் பாதிக்கப் பட்டது தெரிந்ததே. ஏராளமான தன்னார்வ அமைப்புகள் நிவாரண பணியில் முழு வீச்சாக ஈடுபட்டார்கள். அரசும் முழு வீச்சில் வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்டது.

பொதுமக்கள் அனைவரும் இந்த பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வந்த நிலையில் சில குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் மட்டுமே நிவாரண பணியில் ஈடுபட்டன. அவ்வாறு ஈடுபட்டதில் நாங்கள் பணியாற்றும் விவி மினரல் நிறுவனமும் சிறந்த பங்களிப்பை கொடுத்தது. ஒரு பேருந்து, நான்கு மினி பேருந்து, 8 டெம்போ, 5 ஆட்டோ ஆகியவற்றோடு 50 கனிம தொழிலாளர்கள் நெல்லை மாவட்டத்தில் இருந்து சமையலுக்கு உள்ள அனைத்து வகையான பொருட்களோடு பாதிக்கப்பட்ட நபர்கள் கவுரவமாக நடத்தப் பட வேண்டும் என்பதற்காகவும், மீண்டும் கழிவுகள் சேரக் கூடாது என்பதற்காகவும் உணவருந்தி மீண்டும் மக்கள் உபயோகிப்பதற்கு வசதியாக மக்கள் சாப்பிடுவதற்கு 1000 சில்வர் தட்;டுகள், 1000 டம்ளர்கள் மற்றும் தேவையான அளவு மினரல் வாட்டர் கேன்கள் ஆகியவற்றோடு தாம்பரம், முடிச்சூர், மணிமங்கலம் மற்றும் அதிகமான பாதிப்பு உள்ள அனைத்து இடங்களிலும் முகாம் அமைத்து மக்களுக்கு உணவு பரிமாறினார்கள். இது போக 1500 நபர்களுக்கு போர்வை, வேஷ்டி, சேலை ஆகியவையும் மற்றும் தேவையான நபர்களுக்கு மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, தீப்பட்டி, லுங்கி போன்ற அன்றாட தேவைக்கு உள்ள பொருட்களும் வினியோகிக்கப் பட்டது.

இதில் கனிம தொழிலாளர்களாகிய எங்களுக்கு மனநிறைவு அளித்த விசயம் அமெரிக்காவில் அரிக்கேன் புயல் தாக்கிய போது அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்ட நபர்களின் உடமைகளை சூறையாடியும், கொள்ளையடித்தும் வந்தாக மீடியாவில் வந்தது.

ஆனால் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் சுற்று வட்டாரங்கள் இயற்கை இடரில் பாதிக்கப் பட்ட போது பகைமை மறந்து ஜாதி, இனம், மத வேறுபாடுகளை மறந்து அனைத்து மக்களும் உதவி கரம் நீட்டினார்கள். மானுடம் வாழ்கிறது.

சில பகுதிகளுக்கு நாங்கள் சென்று உணவு கொடுக்கும் போது எங்களுக்கு ஏற்கனவே முஸ்லீம் சகோதரர்கள் தேவையான உணவு வழங்கி விட்டார்கள். வேறு இடத்திற்கு இதனை வினியோகியுங்கள் என அன்பாக கூறினார்கள். சில பகுதிகளில் அதிமுக-வின் முதல் சபாநாயகர் திரு. முனுஆதி பெயரில் உள்ள ஆதி பொறியியல் கல்லூரியில் இருந்து உணவு வழங்கி உள்ளார்கள். இதனை வேறு இடத்தில் வினியோகியுங்கள் என கூறினார்கள். இவ்வாறு பாதிக்கப் பட்ட மற்றவர்களும் பசியோடு இருக்க கூடாது என அந்த சூழ்நிலையிலும் மக்கள் பதில் கூறியது இது தான் தமிழ் பண்பாடோ என வியக்க வைத்தது. நாங்களும் 50 நபர்களும் இரவு பகல் பாராமல் பணியாற்றியும் கூட எங்களுக்கு அசதியோ, களைப்போ தெரியவில்லை. மிகுந்த மனநிறைவை தந்தது.

photo 1

pic 2 pic 3 pic 4

1 thought on “வெள்ள நிவாரண பணியில் விவி மினரல் நிறுவனம் மற்றும் தாது மணல் தொழிலாளர்களின் பங்களிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *