கடந்த 01.02.2015 அன்று சந்தியா ரவிசங்கர் என்னும் கொள்ளை கூட்டத்தில் உள்ள ஒரு உறுப்பினரான ஒரு ரிப்போர்ட்டரால் தாது மணலுக்கு எதிராக திட்டமிட்டு ஒரு பொய் செய்தி பரப்பப் பட்டது. அதில் ரூபாய் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் என அதிபயங்கரமான தலைப்பு கொடுக்கப் பட்டது.
இந்த சந்தியா ரவிசங்கர் தான் 2013-ம் வருடம் திரு.தயாதேவதாஸ் மற்றும் அவர்களுக்கு வேண்டிய நபர்களிடம் ஒரு பேட்டியை எடுத்து ஏதோ தமிழ்நாடே அழிந்து விட்டது போல் தொலைகாட்சியில் செய்தி வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தான் இது பற்றி யூடியூபில் தெரியவந்து ஆட்சேபணை கொடுக்கப் பட்டுள்ளது. இவர் இவர் ஒரு எதிர்கட்சியின் தலைமைக்கு மிகவும் வேண்டியவர் என்பதும் அதற்கு உதவவும், இவரது நண்பியான சுந்தரம் ஐஏஸ் மகளான ராதிகாவிற்கு உதவவும் (ராதிகாவின் தந்தையான சுந்தரம் ஐஏஎஸ் மற்றும் அவரோடு சில ஓய்வு பெற்ற அதிகாரிகள் அனைவரும் இம்மாதிரி பொய் செய்தி பரப்புவதற்கு என்றே ஒரு நிறுவனத்தில் பணியாற்றி அந்த நிறுவன உரிமையாளரின் இயக்கத்தில் நடித்தும் ஆடியும் வருவதை http://www.beachminerals.org/video-home/ இணைப்பில் வீடியோவில் பார்க்கலாம்). திரு.தயாதேவதாசிடம் பெரும் தொகை பெற்றதற்கு பிரதிகாரமாகவும், வி.வி.மினரல் அவர்களது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் இவரது கணவருக்கு நல்ல வேலை கொடுக்கவில்லை என்பதால் அதற்கு பழிவாங்கவும் கடந்த பிப்ரவரி அன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். ஆனால் உண்மையில் இவரோடு சேர்த்து சில பத்திரிக்கை நிருபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வி.வி.மினரலுக்கு எதிராகவும் தாது மணலுக்கு எதிராகவும் மறைமுகமாகவும் நேரடியாகவும் செய்தி வெளியிடுவதற்கு பெரும் தொகை ஏற்கனவே கொடுக்கப் பட்டு அவ்வப்போது அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக ஏற்கனவே கடந்த ஆகஸ்;டு அன்று ஒரு புகார் மனு ஒரு தமிழ் பத்திரிக்கைக்கு எழுதப்பட்டது. அதிலேயே திருமதி சந்தியா இவ்வாறு பொய் செய்தி வெளியிட உள்ள விபரம் தெரியப்படுத்தப் பட்டு இந்த இணையதளத்தில் பதிவும் செய்யப் பட்டுள்ளது.
நாம் பதிவு செய்தது போலவே வாங்கிய காசுக்கு வஞ்சனை இல்லாமல் திருமதி சந்தியா எண்ணி பார்க்க முடியாத அளவில் அதிபயங்கரமான குற்றச்சாட்டுகளோடு ஆனால் எந்த ஆதாரத்தையும் வெளியிடாமல் ஒரு பொய் செய்தியை வெளியிட்டார். இதனால் தமிழக அரசு மீது குறை கண்டுபிடிக்க முடியாத சில கட்சிகள் ஒரு லட்சம் கோடி ஊழல். எனவே சிபிஐ விசாரணை வேண்டும் என உள்ளேயும் வெளியேயும் ஆர்பரித்தார்கள்.
கனிம தொழிலாளர் நலனுக்காக அமைக்கப்பட்ட நமது சங்கம் இது பற்றி உடனடியாக சம்பந்தப்பட்ட பத்திரிக்கைக்கு புகார் மனு எழுதியது. அது https://southernmines.co.in/blog/objection-to-economic-times/ இணைப்பில் இதே இணையதளத்தில் உள்ளது.
வி.வி.மினரல் நிறுவனமும் இது சம்பந்தமாக சட்டபூர்வ நடவடிக்கை எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கைக்கு எதிராக மேற்கொண்டது.
இறுதியில் எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை இந்த தவறை உணர்ந்து “The Error is Regretted” என ஒரு செய்தி கடந்த மே 24 எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் 2-வது பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இது நமது சங்கத்தின் தீவிர முயற்சிக்கு கிடைத்த ஒரு வெற்றி.
சில நண்பர்கள் பத்திரிக்கையின் விற்பனையை கூட்டுவதற்காக இம்மாதிரி மூன்றாம் தர பொய் செய்தி வெளியிடுவதையும், திரு.சந்தியா இவ்வாறு காசுக்காக செய்;தி வெளியிட்டுள்ளார் என்றும் இனிமேலும் அவர் பத்திரிக்கையில் நீடிக்கலாமா என்றும் இம்மாதிரி பொய் செய்தி வெளியிடும் பத்திரிக்கைகள் மீது அரசே கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கும் முகமாக சட்டத்தை திருத்த வேண்டும் என்றும் பல்வேறு பதிவுகள் செய்துள்ளார்கள். அவர்களது கோபத்தையும் வேகத்தையும் நாம் அங்கீகரித்தே ஆக வேண்டும்.
இவர்கள் பத்திரிக்கை விற்பனைக்காக 3 பக்க செய்தியாக ஒரு பொய் செய்தியை இட்டு கட்டி வெளியிட்டு விட்டு இதனால் ஏற்பட்ட இழப்பீட்டை கருத்திலேயே கொள்ளாமல் இறுதியில் அவர்கள் மீது நடவடிக்கை வந்ததால் தவறுக்கு வருந்துகிறோம் என்று ஒரு வரி செய்தியாக வெளியிட்டு அதில் மேற்கண்ட செய்தியில் உள்ள சில இனங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் மேலும் இந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்பதே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு பொது நல மனுவின் அடிப்படையில் உள்ளது தான் என்றும் அதனை சரிபார்க்கவில்லை என்றும் தெரியப்படுத்தி மன்னிப்பு கேட்டு; விட்டார்கள். இதன் அடிப்படையில் வாய் திறந்த எந்த அரசியல்வாதியாவது அதற்கு மன்னிப்பு கேட்பார்களா??
பொது நல மனு என்பது ரூபாய் 5000 செலவு செய்யும் யார் வேண்டும் என்றாலும் தாக்கல் செய்யலாம். சர்வதேச தரத்தில் உள்ள நிறுவனத்தை 5000 ரூபாய் செலவு செய்து இம்மாதிரி 3-ம் தர பத்திரிக்கையாளர்களுக்கு சில ரொட்டி துண்டுகளை வீசி மிகைப்படுத்தி செய்தியை வெளியிட்டதால் பாதிக்கப்படுவது அந்த நிறுவனத்தோடு மட்டும்; அல்லாமல் அதில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் தான்.
எனவே இனியாவது மேற்கண்ட பத்திரிக்கை நிர்வாகம் இம்மாதிரி சரியாக பரிசீலிக்காமல் பொய் செய்தி வெளியிட காரணமாக இருந்த சந்தியாவையும் அவரது கணவரும் மேற்கண்ட பத்திரிக்கையின் சென்னை பதிப்பு பொறுப்பாளரான ரவிசங்கரையும் கண்டிக்குமா???
நேர்மையான பத்திரிக்கை என்றால் அவர்கள் இருவரையும் கண்டித்த விபரத்தையும் பத்திரிக்கையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் அல்லவா???