லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தது.

தாது மணல் பிரச்சனையில் ஐந்து ஆண்டுகள் கழித்து மோடி அரசின் நடவடிக்கை

தாது மணல் பிரச்சனையில் சில சமூக விரோதிகள் பணம் பறிப்பதற்காக பொய் புகார்களை தொடர்ந்து எழுதி வருகிறார்கள். ஊழலில் திழைத்த சில அதிகாரிகளும் ரொட்டி துண்டுக்கு ஆசைப்படும் சில பத்திரிக்கையாளர்களும் இதற்கு பக்கவாத்தியம் வாசிக்கிறார்கள். இந்த அநாகரிகமான செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பிரதமர் DAE Minutes-minஅலுவலகத்தில் முறையீடு செய்ததன் பேரில் அப்போதைய பிரதமர் அணுசக்தி துறையில் இது பற்றி கலந்து ஆலோசிக்க அறிவுரை வழங்கினார். அதன்படி 2013-ம் வருடமே உயர் அதிகாரிகள், தாது மணல் உற்பத்தியாளர்கள் அடங்கிய கூட்டம் அணுசக்தி துறையில் நடந்தது. அப்போது அனைத்து துறைமுகங்களிலும் தாது மணல் ஏற்றுமதியில் அணு கனிமங்கள் உள்ளதா என்பதை கண்டறிய அலுவலர்களையும், உபகரணங்களையும் அமர்த்தவும், அதற்கு தேவையான இடம், வாடகை செலவு முதலியவற்றை தாது மணல் உற்பத்தியாளர்களே ஏற்றுக் கொள்வதாகவும் முறையிடப் பட்டது. (பத்தி 6(iii))

இது பற்றி அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் மீண்டும் அரசிடம் இது பற்றி வலியுறுத்தியதன் அடிப்படையில் தனியார் தாது மணல் ஏற்றுமதி மீது கூறப்படும் பொய் குற்றச்சாட்டுகளை முழுவதும் துடைத்தெரிய வகை செய்ய வேண்டும் என்று சில குறிப்பிட்ட கனிமங்களை அதாவது இரும்பு தாது, நிலக்கரி போன்ற கனிமங்களை தனியார் குவாரி செய்தாலும் அரசு நிறுவனத்தின் மூலம் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் என்பது போல் இந்த தாது மணல் கனிமங்களையும் அரசு மூலமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என ஆணை பிறப்பித்து இனி இது போல் பொய்யான குற்றச்சாட்டுகளை வராமல் இருக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு பரவலாக அனைத்து உற்பத்தியாளர்கள் மட்டும் அல்ல தொழிலாளர்களுமே வரவேற்பு தெரிவிக்கிறோம்.

 

DAE Minutes-min

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *