நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு இரண்டாவது காரணம் ரேடான் என்னும் கதிர்வீச்சு உள்ள வாயு. இது கல், மண் முதலியவற்றில் இருப்பதால் கட்டிடங்களிலும் வருகிறது. குறிப்பாக கட்டிடத்தின் அடிப்பகுதியில் மிக அதிகம் வருகிறது. இவற்றை குறைப்பதற்கு சர்வதேச அணுசக்தி முகமை உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு ஆலோசனைகளை சொல்லி வருகிறது. ஆஸ்திரியா போன்ற நாடுகளில் வீடுகளில் உள்ள ரேடானை அளவீடு செய்வதற்கும் குறைப்பதற்கும் அரசே உதவி செய்கிறது. இதே போன்ற நிலையை இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் அரசு ஏற்படுத்தினால் தொழில்கள், தொழிற்சாலைகள் மீது கதிர்வீச்சு, புற்றுநோய் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு என்று திட்டமிட்டு செய்யப்படும் பொய் பிரச்சாரம் நீங்குமே.. அரசுகள் இதனை செய்யலாமே!!!
ரேடான் என்னும் கதிர்வீச்சு வீடு, கட்டிடங்கள், கல், மண் எல்லாவற்றிலும் உண்டு
Leave a reply