மொத்த வருவாயில் 63.97 சதவீதத்தை அரசுக்கு வரியாக செலுத்தும் கனிம தொழில் – இந்திய சுரங்க தொழில் கூட்டமைப்பின் அறிக்கை

ஒரே ஒரு தாது மணல் தொழிற்சாலை நிறுத்தத்தால் மட்டும் தொழிலாளர்களுக்கு 40 கோடி ரூபாய் இழப்பீடு என்பதை மத்திய தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் அரசு நிறுவனம் தெரிவித்து இருந்ததை கடந்த வாரம் பார்த்தோம். அப்படியானால் பத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் நஷ்டம் எவ்வளவு என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளலாம்.

தற்போது மேலும் ஒரு உண்மை இந்திய சுரங்க தொழில் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசிடம் சமர்பிக்கப் பட்டுள்ளது. அதாவது ஒரு சுரங்கம் இயங்கும் பட்சத்தில் அதன் மொத்த விற்று முதலில் 63.97 சதவீதம் இந்திய அரசிற்கு பல்வேறு வரி வகையில் செலுத்தப் படுகிறது. இதேபோல் இதர நாடுகளில் நமீபியாவில் மட்டுமே 44 சதவீதமும் ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்த தொகை 39 சதவீதம் மட்டுமே.

இவ்வாறு அரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி கொடுத்த தாது மணல் தொழில் சில தனிப்பட்ட உள்நோக்கத்தோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? இத்தனை ஆயிரம் கோடி ரூபாயை ஆண்டுதோறும் அரசுக்கு உழைத்து கொடுத்த கனிம தொழிலாளர்கள் மீது அரசு கருணை காட்ட மறுப்பது நியாயமா?

தொழில் பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தொழில் இல்லாத காலத்திற்கு இழப்பீடு வழங்கப் படுகிறது. வறட்சி புயல் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட விவசாயிக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் அரசு உத்தரவால் பாதிக்கப் பட்ட கனிம தொழிலாளர்களுக்கு இழப்பீடு இல்லை. ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஆண்டு ஒன்றுக்கு 2.5 லட்சம் வைத்து அரசு இழப்பீடு வழங்க வேண்டாமா? நம் தொழிலாளர்கள் சார்பில் இந்திய அரசிடம் முறையிட்டதற்கு மண்டல இணை தொழிலாளர் நல ஆணையர் (மத்திய அரசு) விசாரணை நடத்தி தொழிலாளர்கள் பாதிக்கப்படும் இந்த தமிழக அரசின் உத்தரவு சட்டவிரோதமானது. அதனை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளார்கள். அவர்கள் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது சம்பந்தமாகவும் டெல்லியில் தலைமை தொழிலாளர் நல ஆணையர் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து முடிவு செய்யலாம் எனவும் அறிக்கை சமர்பித்துள்ளார்கள். எனவே விரைவில் தொழிலாளர்களுக்கு நல்ல முடிவு கிடைப்பதற்கு இறைவனை வேண்டுவோம்.

royalty note FIMI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *