தமிழக அரசின் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து தொழிலாளர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் திருமணம் கல்வி உதவி தொகை மற்றும் மூக்கு கண்ணாடி வாங்குதல், அடக்க செலவு, போன்ற பல்வேறு இனங்களுக்கு உதவி தொகைகள் வழங்கப் பட்டு வருகின்றன. இவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தான் பெற்று வழங்க வேண்டும். அவ்வாறு காலதாமதம் இல்லாமல் தொழிலாளர்களுக்கான உதவி தொகைகளை பெற்று வழங்குவதில் விவி மினரல் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. 2013-ம் வருடம் மொத்தம் ஒன்பது நபர்களுக்கு இவ்வாறு திருமணம், மூக்கு கண்ணாடி வாங்குதல் போன்ற பல்வேறு இனங்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து தொகை பெற்று பட்டுவாடா செய்தது. 2014-ல் இதே போல் 18 நபர்களுக்கும், 2015-ல் 12 நபர்களுக்கும் இவ்வாறு தொகை பெற்று பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அரசின் நல திட்ட உதவிகளை காலதாமதம் இன்றி பெற்று வழங்கும் விவி மினரல் நிறுவனத்தின் நிர்வாகத்தினருக்கு கனிம தொழிலாளர் நல சங்கம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
தொழிலாளர்களுக்கான உதவிகளை உடனுக்குடன் பெற்று வழங்குவதில் விவி மினரல் நிறுவனம் முன்னிலை
Leave a reply