தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு புற்றுநோய் இருப்பதாக அதிர்ச்சி தகவல்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு இருப்பதாக தமிழக சட்டமன்ற பொதுநிறுவனங்கள் குழு தெரிவித்துள்ளது.

குன்னூர், கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான அரசு தேயிலை தோட்டம் உள்ளது. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவரும் நிலையில், இவர்களில் பெரும்பாலானோருக்கு புற்று நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்றவை உள்ளதாக தகவல் பரவியது.

இந்நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்த தமிழக சட்டமன்ற பொதுநிறுவனங்கள் குழு, தேயிலைக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ரசாயன உரங்களால் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இரு நாட்களாக தொழிலாளர்களை சந்தித்து ஆய்வு மேற்கொண்ட இந்தக் குழு, நவீன மருத்துவமனையை தொடங்க அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

Thanks : http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/4/8/2017/shocking-news-revealed-tea-estate-labours-are-suffering-cancer

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *