தினமணி செய்திக்கு ஆட்சேபணை

———- Forwarded message ———-
From: Southern Mineral Workers Association <sworkersassociation@gmail.com>
Date: 2016-01-08 13:19 GMT+05:30
Subject: தினமணி செய்திக்கு ஆட்சேபணை
To: partha@dinamani.com, webdinamani@dinamani.com, webdinamani@gmail.com, dinamanimds@dinamani.com,jayshree@newindianexpress.com

அன்புடையீர்,

07.01.2016 தங்களது தினமணி பத்திரிக்கையில் “சட்டவிரோதமாக இயங்கி வரும் தாது மணல் நிறுவனம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரி மனு – மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு” என ஒரு செய்தி வெளியாகி உள்ளது. உண்மையில் இந்த செய்தி ஒரு விளம்பர நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப் பட்டு ரிப்போர்ட்டர்களுக்கு பட்டுவாடா செய்யப் பட்டது. இதனை நான் நிரூபிக்க தயாராக உள்ளேன். வைகுண்டராஜன் சுற்றுச்சூழல் அனுமதி லஞ்சம் கொடுத்து பெற்றதாக கூறி எனவே சிபிஐ வழக்கு தொடர வேண்டும் என அவரது தொழில் போட்டியாளர் தயாதேவதாஸ் மனு செய்திருந்தார். உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. தள்ளுபடி உத்தரவிலேயே இருவருக்கும் உள்ள தொழில் போட்டி மற்றும் மற்ற விபரங்களை குறிப்பிட்டு சிபிஐ-யும் விசாரணையில் புகாருக்கு முகாந்திரம் இல்லை என குறிப்பிட்டதையும் குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்கள். அந்த உத்தரவை எந்த பத்திரிக்கைகளும் பிரசுரிக்கவில்லை. காரணம் அதற்கு தயாதேவதாசிடம் இருந்து பணம் கிடைக்கவில்லை. ஆனால் அதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தவறான தலைப்போடு அவர் எழுதி கொடுத்து ரிப்போர்ட்டர்களுக்கு பணத்தோடு பட்டுவாடா செய்த செய்தியை தாங்கள் வெளியிட்டு உள்ளீர்கள்.
தினமணி போன்ற ஒரு தரமான பத்திரிக்கையில் இந்த செய்தி வெளிவந்தது வருத்தம் அளிக்கிறது. தினகரன் பத்திரிக்கை எப்போதும் மலம் அள்ளி வீசும். அவர்கள் போடலாம். இந்து தமிழ் பத்திரிக்கை பணம் கொடுத்தால் செய்தி வெளியிடும். அவர்கள் போடலாம். தரமான தினமணியில் இது ஒரு செய்தியா? எத்தனை மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப் படுகின்றன? எத்தனைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது. இவ்வாறு ஒரு நோட்டீஸ் அனுப்பியதை தவறான தலைப்போடு வெளியிடுவது பத்திரிக்கை தர்மமா? தயவு செய்து இது பற்றி ஒரு விசாரணை நடத்துங்கள். எனது இந்த எதிர்ப்பையும் தங்களது பத்திரிக்கையில் வெளியிடுங்கள். வருங்காலத்தில் இம்மாதிரி ரிப்போர்ட்டர்கள் பணம் வாங்கி கொண்டு தரும் செய்திகளை தவிருங்கள்.
இப்படிக்கு
ஆர். பாலகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *