பல வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ள தாது மணல் தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு குரல் கொடுத்தார்கள். தாதுமணல் தொழிற்சாலையை விரைவில் திறக்க வேண்டும் என இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இன்பதுரையும் சட்டமன்றத்தில் பேசினார். அரசின் நடவடிக்கையில் வேகம் இல்லாத நிலையில் திருநெல்வேலி தெட்ஷணமாற நாடார் சங்க தலைவர் இதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி பத்திரிக்கைகளையும் தொலைகாட்சிகளையும் அழைத்து ஒரு பேட்டியும் கொடுத்துள்ளார். இது தினமலர் பத்திரிக்கையில் தெளிவாக விரிவாக போடப்பட்டுள்ளது. தொலைகாட்சியிலும் ஒளிபரப்பாகி உள்ளது. இப்பிரச்சனைக்காக குரல் கொடுத்த அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்களுக்கும் இதனை மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஒளிபரப்பிய மற்றும் செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கும் தென்மண்டல கனிம தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.