தற்போது தாது மணல் தொழிலாளர்கள் மிகப் பெரும் பிரச்சனையை சந்தித்து வேலை வாய்ப்பை இழந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். கடந்த வாரம் திருவனந்தபுரம் ரயில்வே நிலையம் அருகில் உள்ள அருளகம் ஹோட்டலுக்கு சாப்பிட செல்லும் போது ஒரு கனிம தொழிலாளி அங்கு சர்வராக பணி புரிந்து வருகிறார். தாது மணல் தொழில் இல்லாததால் தான் பட்ட கஷ்டத்தை கூறி தன் குழந்தைகளின் படிப்பிற்காக குடும்பத்தை விட்டு பிரிந்து இங்கு கஷ்டபடுவதாக கண்ணீர் விட்டார்.
அந்த சோக நினைவோடு இங்கு வந்து பழைய செய்தி தாள்களை பார்த்தால் சுமார் 20 வருடங்களுக்கு முன்பும் தொழிலாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அப்போதைய அமைச்சரிடம் பணி பாதுகாப்பு கோரி ஊர்வலமாக சென்று மனு கொடுத்துள்ளார்கள். அப்போதைய ஒற்றுமை தான் தொழிலாளர் வர்க்கத்தை காப்பாற்றி உள்ளது.
இந்த செய்தியோடு உள்ள படத்தை இதில் பதிவிடுவதன் நோக்கம் நாமும் தற்போதும் இவ்வாறு தொழிலாளர்கள் அனைவரும் ஒற்றுமையோடு ஒரு நடவடிக்கை தொடங்க வேண்டியது அவசியம் என்பதை சக தொழிலாளர் நண்பர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான். சக தொழிலாளர்களுக்கு இதனை உணர்த்துங்கள் நண்பர்களே!!