தாது மணல் குவாரிகள் மீதுள்ள புகார் உண்மைக்கு மாறாக மிகைப்படுத்தி கூறப்பட்டது. முகநூலில் வெற்றிவேல் என்பவர் ஆதார பூர்வமாக தகவல்.

ஐயா, கருணாநிதி அவர்களே உங்கள் மகள் சம்பந்தப்பட்ட வழக்கு என்ற உடன் இவ்வளவு விரிவாக பேசி ஆதாரங்களாக புள்ளி விபரங்களை கொடுக்கிறீர்களே, கடந்த 25 வருடங்களாக இந்தியாவில் உள்ள அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் சேர்த்து இது வரை ஏற்றுமதி செய்த தாது மணல்களின் மதிப்பே 30 ஆயிரம் கோடி தான் என்பது வணிகத்துறை, சுங்கத்துறை, இந்திய ரிசர்வ் வங்கி போன்ற அனைத்து அரசு அலுவலக ஆவணங்களிலும் துலங்கும். ஆனால் உங்கள் மருமகனுக்கு தொழிலை கொடுக்க மறுத்ததால் உங்கள் சொல் படி ஜெயலலிதா மீது குற்ற வழக்கு தொடர உத்தரவிட்ட உங்கள் கையாள் சுந்தரம் ஐஎஎஸ் மூலம் ஒரு தனியார் நிறுவனம் 10 வருடத்தில் 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தாது மணலை ஏற்றுமதி செய்துள்ளது என குறிப்பிட்டு உங்கள் குடும்ப தொலைகாட்சிகளில் அதை திரும்ப திரும்ப வெளியிட்டு 50,000 பணியாளர்களின் வாழ்வாதாரத்தை முடக்கினீர்களே! இது என்ன நியாயம்?

இப்போது ஊருக்கே தெரியும். சிபிஐ உங்கள் குடும்ப கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அவர்கள் சொல் படி தான் இயங்குகிறார்கள். எனவே அடிப்பது போல் அடிக்கிறேன். அழுவது போல் அழு என நீங்கள் விடுதலைக்கு ஏற்பாடு செய்தாகிவிட்டது என்பதும் எல்லோருக்கும் தெரியும். என்ன செய்வது? அதிமுக-வை பொறுத்த வரை அதன் தலைமை எட்டாகனி. எனவே உங்களை கேட்பதற்கே ஆள் இல்லை. மேலும் உங்கள் சொல் படி பொய் வழக்கு போட்ட அதிகாரிகள் தான் இப்போது அதிமுகவில் உளவு பிரிவிலேயே அதிகாரிகளாக இருக்கிறார்கள். நீங்கள் சொல்வதை தான் அவர்கள் அரசுக்கு சொல்வார்கள். வாழ்க உங்கள் அரசாட்சி..

Link : http://goo.gl/jNtjJr 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *