தாது மணல் குவாரிகளை திறக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்திற்கு தென்மண்டல கனிம தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி
கனிம தொழிலாளர் நல சங்க தலைவர் அறிக்கை
தென்மண்டல கனிம தொழிலாளர் நல சங்க தலைவர் திரு. ஆர்.பாலகிருஷ்ணன் தாதுமணல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவை வரவேற்று அறிக்கை கொடுத்துள்ளார். அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது –
இரண்டு வருடங்களுக்கு முன்பு தாது மணல் குவாரிகளை ஆய்வு செய்வதற்காக சுரங்க பணிகளை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு இரண்டு அரசாணைகளை பிறப்பித்தது. இதனால் இத்தொழிலை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்த தொழில் நடக்கும் சுமார் 25 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் இந்த தொழிலை உடனடியாக தொடங்க அனுமதிக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள். எங்கள் கனிம தொழிலாளர் நல சங்கத்தின் சார்பிலும் இதே கோரிக்கை அரசுக்கு வைக்கப் பட்டது. இதற்கிடையில் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டது தவறு என்பதையும் அதே போல் ஆய்வுக்கு நியமிக்கப் பட்டுள்ள அதிகாரி திரு.ககன்தீப் சிங் பேடி தன்னோடு முன் விரோதம் கொண்டவர் என்பதையும் குறிப்பிட்டு சில நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தன. மேண்மை தங்கிய சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட வழக்கை விசாரித்து சமீபத்தில் வழங்கிய தீர்ப்பில் இக்கனிமங்கள் 1-வது அட்டவணையில் உள்ள கனிமங்கள். குத்தகை வழங்குவதற்கும், குத்தகையை நிறுத்துவதற்கும் மத்திய அரசின் அங்கீகாரம் தேவை. ஆனால் மாநில அரசு மத்திய அரசின் அங்கீகாரம் இல்லாமல் குத்தகையை நிறுத்தி வைத்துள்ளது. எனவே இந்த ஆணை ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பளித்தது. மேலும் முன்விரோதம் உள்ள இந்த அலுவலர் ஆய்வு செய்தால் நியாயமாக இருக்காது என்பதை குறிப்பிட்டு ஓய்வு பெற்ற ஒரு வடநாட்டு நீதிபதியை ஆய்வு செய்ய நியமித்துள்ளார்கள். இது வரவேற்கப்பட வேண்டியதே. சமீப காலம் வரை ஓய்வு பெற்ற நீதிபதி மூலமே விசாரணை நடத்த வேண்டும் என கோரிய பலரும் தற்போது இதனை எதிர்க்கிறார்கள். இதுவே இவர்கள் உள்நோக்கத்தோடு தான் அறிக்கைகள் விடுகிறார்கள் என்பதை நிரூபிக்கும்.
சாலையில் விபத்து நடப்பதால் சாலையில் போக்குவரத்தை நிறுத்துவதில்லை. அரசு மருத்துவனையில் சிகிச்சை பெறும் நபர்கள் இறந்து விடுவதால் மேற்கண்ட மருத்துவமனை மூடப்படுவதில்லை. மத்திய அமைச்சர் பதவியில் இருக்கும் போது லஞ்சம் பெற்றார் என சிபிஐ-யால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த வழக்கு முடியும் வரை தேர்தலில் நிற்க கூடாது என யாரும் சொல்லவில்லை. ஆனால் 50000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஒரு தொழிலில் என்ன காரணத்திற்காக இவ்வாறு முரண்பட்ட நிலையை எடுக்கிறார்கள். ஏற்கனவே முன் விரோதம் உள்ள ஒரு அதிகாரி மூலம் தவறான அறிக்கை பெறுவது தான் இவர்களது நோக்கமா?
சென்னை உயர்நீதிமன்றம் தவறுக்கு துணை போகாமல் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்துள்ளது. மேலும் ஓய்வு பெற்ற வடநாட்டு நீதிபதி 3 மாத காலத்திற்குள் ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க வேண்டும் என்றும் அதன் மீது தமிழக அரசு 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிட்டு உள்ளது. எனவே தவறு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள். மாறாக இந்த தொழிலை நம்பி இருக்கும் 50000 குடும்பங்கள் வாழ்வில் ஒளி வீசும். இந்த தீர்ப்பை தொழிலாளர் சமுதாயம் தலை வணங்கி வரவேற்கிறது.
**************************
ஐயா தயவு செய்து இதனை தங்கள் பத்திரிக்கை ஃ தொலைகாட்சியில் வெளியிட அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
ஆர். பாலகிருஷ்ணன்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Southern Regional Mines and Mineral based workers Welfare Association invite the High Court Judgment regarding the Mineral Sand Inspection
Southern Regional Mines and Mineral based workers Welfare Association President Mr.R.Balakrishnan welcome the High Court Judgment regarding the Mineral Sand Inspection
In his press release he told the following.
Two years ago, the Govt., passed two G.Os., to stop the mineral sand mining operation to facilitate the inspection by Gagandeep Singh Bedi Commission. Hence more than 50000 employees who are depending on this industry were affected. We submit memorandum to Govt., to open the mines. Total 25 Panchayat President who were adversely affected due to the mining operation stoppage also requested the government to reopen the mines. Meantime, some mining companies approach the High Court, with a claim that the ban on Beach Mineral mining is illegal and the inspecting officer Mr.Gagandeep Singh Bedi has personal enmity with them. The Honourable High Court after detail enquiry, while passing the judgment, mentioned that since these all are first schedule minerals, hence for grant of mining lease and for stoppage of mining operation, prior approval of Central Government has to be obtained by the State Government. Whereas, in this case, both G.Os are passed, the State did not obtained prior approval from Central Government. Hence the Honourable High Court set-aside above said G.Os. It further directed that since the inspecting officer is enmity with two companies, the apprehension of the companies about the inspecting officer is justified and hence the Honourable High Court appointed a Retd. High Court Judge from North India.
This is in line with the request made by various political parties, who insist the mineral sand complaint to be enquired by a Retd. High Court Judge.
The road traffic is not stopped due to the road accident in Highways. The Govt., Hospital will not shut down due to the death in the Hospital. Some persons who facing corrupting charges by CBI are not prevented from contesting the election until the corruption charges are dropped or acquitted. Whereas, the beach mineral industry which involved more than 50000 families, a different stand has been taken. How one person can get justice from a biased officer??
The Honourable Madras High Court confirm the law of Rule. It further directed that the North Indian Judge should complete the inspection and submit report within 3 months to State Government and the State Govt., should take action on the above said report within 3 months. Hence those who are involved illegal mining will be penalized. Meantime, the 50000 families, who are depending on this mineral sand industry will be saved. Hence our employees welcome the judgment.
*******
Sir, please publish this in your newspaper / television.
Thanking you
Yours truly
R. Balakrishnan
President