தமிழக அரசின் வெள்ளை அறிக்கை

தமிழக அரசு மாநிலத்தின் நிதி நிலைமை பற்றி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த வெள்ளை அறிக்கையில் கண்ட கீழ்கண்ட படங்கள் முக்கியமானது. இதனை பார்த்தால் 2013 முதல் மாநிலத்தின் நிதி நிலை மோசமாகி வருவதை காணலாம். தவறான பொய்யான புகார்களால் தாது மணல் சுரங்க பணி நிறுத்தப் பட்டு ஒரே நேரத்தில் 50,000 தொழிலாளர்கள் பணி இழந்தது இதே 2013-ம் ஆண்டு தான். இதுவே மாநிலத்தின் நிதி நிலை மோசமாவதற்கு தாது மணல் சுரங்க பணி நிறுத்தம் ஒரு காரணம் என்பதை நிரூபிக்கும். அதே பட்டியலை பார்வையிட்டு வரும் போது 2019 முதல் 2021 வரை உள்ள கால கட்டத்தில் நிதி நிலை மிக மிக மோசம் அடைந்து உள்ளது. 2019-ல் தான் மத்திய அரசு தவறான அறிவுரையால் இந்தியா முழுவதும் உள்ள சுமார் 24 சதவீத சுரங்க குத்தகைகளை ஒரே நேரத்தில் ரத்து செய்து உத்தரவிட்டது. அதாவது இந்தியா முழுவதும் உள்ள 328 பெருங்கனிம சுரங்க குத்தகைகளில் 72 சுரங்க குத்தகைகளை மத்திய அரசு ரத்து செய்தது. இதில் 64 சுரங்க குத்தகைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இப்போது புரிந்து இருக்கும். தமிழகம் நிதி நிலையில் இவ்வளவு மோசம் ஆவதற்கு என்ன காரணம் என்பது. அப்போதைய தமிழக தொழிற்துறை மந்திரி தன் சொந்த பகைக்காக மாநில அரசை கலந்து பேசாமல் மத்திய அரசு சுரங்க குத்தகைகளை ரத்து செய்தது தவறு என மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை. ஆனால் தற்போதைய அரசு நிதிநிலையை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே இந்த நடவடிக்கையும் எடுக்கும் என நம்புவோம். தமிழக அரசை கலந்து பேசாமல் தமிழகத்தின் கருத்தை குறிப்பிட்டு கேட்காமல் தமிழகத்தில் உள்ள சுமார் 64 சுரங்க குத்தகைகளை மத்திய அரசு ரத்து செய்தது தவறு. அந்த ரத்து உத்தரவை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசு சுரங்கத்துறைக்கு கடிதம் எழுத வேண்டும். மேற்கண்ட 64 சுரங்க குத்தகைகளும் 50,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியதோடு ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் அளவிற்கு தாது மணல் சுரங்கம் செய்து ஏற்றுமதி செய்யும். இதில் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி. 10 சதவீதம் மத்திய அரசுக்கு மட்டும் சொந்தமான ஏற்றுமதி வரி. எனவே ஆண்டுக்கு 1400 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி இழப்பீடும், 500 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு ஏற்றுமதி வரி இழப்பீடும் மற்றும் மாநில அரசுக்கான 3 சதவீத ராயல்டி மற்றும் அதன் மீதான வரி வகையில் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் மாநில அரசுக்கு நட்டம்.

50000 தொழிலாளர்களும் குறைந்த பட்சம் ரூபாய் 10000-த்தில் இருந்து அதிக பட்சம் ரூபாய் 30,000 வரை சம்பளம் பெறுபவர்கள். இந்த 50000 தொழிலாளர்களும் அவர்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை குடும்ப வாழ்வாதாரத்திற்கு தேவையான உணவு பொருட்கள், துணி, கல்வி செலவு போன்ற செலவுகளுக்கு செலவிடுவதன் மூலமும், ஆண்டுக்கு சுமார் 400 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி கிடைக்கும். இதனை வைத்து உபதொழில் மூலம் மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாயும் மற்றும் இதன் மூலம் வேலை வாய்ப்பு பெறுபவர்களும் இதில் பாதிக்கப் பட்டு விட்டார்கள். எனவே மாநில அரசின் இந்த நிதி சுமை மோசமாவதற்கு முந்தைய மாநில அரசு மட்டும் அல்ல. தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கையும் ஒரு காரணி.

எனவே ஒட்டு மொத்தமாக 50000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தமிழக அரசின் நிதி நிலையை சரி செய்யவும், சரியான அலுவலர்களை மாநில அரசு உரிய இடத்தில் நியமித்து இந்த தொழிலை மீண்டும் மறு உருவாக்கம் செய்ய வேண்டியது அவசியம்.

மத்திய அரசின் தவறான உத்தரவால் 1994-ல் இருந்து இந்தியாவில் தாது மணல் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது 3-வது இடத்திற்கு சென்று விட்டது. உலக அளவில் தாது மணல் உற்பத்தியில் முதல் இடம் வகித்த இந்தியா தற்போது 5-வது இடத்திற்கு சென்று விட்டது. இது எல்லாம் திறமை இல்லாத அதிகாரிகளை முக்கியமான பணியிடங்களில் பணி அமர்த்தியது தான் காரணம் என்றால் அதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. அதிர்ஷ்ட வசமாக தமிழ்நாட்டிற்கு பிரதிபலன் எதிர்பாராத ஒரு நிதி அமைச்சர் கிடைத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இம்மாதிரியான நிதி நெருக்கடியில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் நல்ல நிதியமைச்சரை நியமிக்க வேண்டும் என்பதை தெரிந்து நியமித்து உள்ளார். எனவே தாதுமணல் தொழிலாளர்களின் எதிர் காலத்தை நிதியமைச்சர் கவனத்தில் கொள்வார் என நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *