தமிழகத்தை முந்துகிறது கேரளா

அகில இந்திய அளவில் தாது மணல் உற்பத்தியில் தமிழகம் தான் முதலிடம் பெற்றது. தமிழகத்தில் 50,000 நபர்களுக்கு மேல் நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு தரும் தாது மணல் தொழிலை நிறுத்தி வைத்துள்ளார்கள். ஆனால் அண்டை மாநிலமான கேரளா மத்திய அரசின் Geological Survey Department  -க்கு அழுத்தம் கொடுத்து கேரளாவில் உள்ள தாது மணல் இருப்பு விபரங்களை ஆய்வு செய்து அறிக்கை தர வற்புறுத்தி அனுமதியும் பெற்றது. இதில் முக்கியம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை முன்னேற்ற ஆய்வு கூட்டமும் நடத்தி வருகிறது. தமிழக அரசு பல ஆண்டு காலமாக ஆற்றுமணல் மட்டும் போதும் தங்கள் வருவாய்க்கு என வாழா இருந்ததன் விளைவு 50,000 தொழிலாளர்கள் பணி இழப்பு, மாநில அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரி இழப்பு சுமார் 780 கோடி ரூபாய். இந்த விபரங்களை மாண்புமிகு தமிழக முதல்வரிடமும் நிதித்துறை அமைச்சரிடமும் திட்டமிட்டு மறைத்த அதிகாரிகள் பற்றி என்ன சொல்ல..!

தாதுமணல் தொழிலை ஊடகங்கள் தான் கெடுத்து வருகிறது என கேரளா சபாநாயகர் பேசிய செய்தியும் தற்போது சிந்திக்க வேண்டியதே.. இணைப்பு கீழே.

Link : http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/kerala-assembly-speaker-bats-for-mineral-beach-sand-mining-lng-pipeline/articleshow/57289159.cms

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *