இந்திய தாது மணல் தொழிலுக்கு எதிராக எழுத என்று பல கோடி ரூபாய் கைமாறி உள்ள நிலையில் பல்வேறு முக்கிய நிலைகளில் உள்ள நபர்களும் ஒரு சேர கூட்டணி அமைத்து இந்த தொழிலுக்கு எதிராக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஜீனியர் விகடன் பத்திரிக்கையும் அதில் ஒரு அங்கம். அவர்களுக்கு 15 முறை எழுதுவதற்கு என்று 50 லட்ச ரூபாய் சினிமா படம் எடுப்பதற்கு பைனான்ஸ் என்ற பெயரில் கொடுக்கப் பட்டதாக சில மாதங்களுக்கு முன்பே தொழிற்போட்டியாளர்களால் செய்தி கசிய விடப்பட்டது. அதனை உறுதி படுத்தும் வகையில் உலகின் எந்த மூலையிலும் அணு ஆயுதம் அல்லது அணுசக்தி மூலப்பொருளாக உபயோகப்படாத மோனசைட்டை அணு ஆயுத மூலப் பொருள் என்று ஒரு கொடும் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு உள்ளார்கள். எங்கள் காது படவே அந்த செய்தியை படித்த சில நடுநிலையாளர்கள் ஜீனியர் விகடன் இவ்வாறு பொய் செய்தி எழுதி பிழைப்பதற்கு பதிலாக நவீன விபச்சாரம் செய்யலாம் என்று விமர்சனம் செய்ததை கேட்டோம். இதுவே எங்களுக்கு நடுநிலையாளர்கள் உண்மையை தெரிந்துள்ளார்கள் என்பதை நிரூபித்தது. இருப்பினும் நாமும் அதற்கு ஆட்சேபணை அனுப்பி உள்ளோம். வழக்கம் போல் அவர்கள் இதனை வெளியிடப் போவது இல்லை. எனவே அந்த ஆட்சேபணை மின் அஞ்சல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
———————-
———- Forwarded message ———-
From: Southern Mineral Workers Association <sworkersassociation@gmail.com>
Date: 2018-07-06 12:39 GMT+05:30
Subject: Objection to JV News about Beach Mineral Industries
To: editor@vikatan.com, jv@vikatan.com, av@vikatan.com, aval@vikatan.com
Cc: All medias
பெறுநர்
ஆசிரியர்
ஜீனியர் விகடன்,
சென்னை
ஐயா,
தாது மணல் விவகாரம், அணு ஆயத மூலப் பொருள் என்ற தலைப்பிட்டு தாங்கள் எழுதிய 2-வது பாகத்திற்கும் எங்களது ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மையில் உலகின் எந்த மூலையிலும் மோனசைட் அணுகுண்டு உற்பத்திக்கோ, அணுமின்நிலைய உற்பத்திக்கோ பயன்படுத்தப்படுவதில்லை. இதில் இருந்து கிடைக்கும் தோரியம் கதிர்வீச்சு உள்ளதே தவிர பிளவுபடும் பொருள் (களைளடைந) அல்ல. எனவே அதனை எந்த காரணத்திற்கும் உபயோகிக்க முடியாது. நாளது தேதியில் உலகின் எந்த நாட்டிலும் இந்த மோனசைட்டில் இருந்து கிடைக்கும் தோரியம் அணுமின் நிலையத்திற்கோ அல்லது அணுகுண்டு செய்யவோ உபயோகப்படவில்லை என்ற விபரத்தை ஏற்கனவே கடந்த 02.07.18 அன்று தங்களுக்கு அனுப்பிய மின் அஞ்சலில் தெரிவித்து இருந்தோம்.
இருப்பினும் கூட எங்களது ஆட்சேபணையை பற்றி ஒரு வரி கூட தெரியப்படுத்தாமல் பொய்யை மெய் போல் திரித்து கூறி இரண்டாவது பாகத்தை வெளியிட்டு உள்ளது பத்திரிக்கை தர்மத்தை மீறியதும் பத்திரிக்கை சுதந்திரம் என்ற ஆயுதத்தை உங்கள் சுய லாபத்திற்கு தவறாக உபயோகிப்பதும் ஆகும். இது சம்பந்தமாக நாங்கள் எந்த அதிகாரிக்கு புகார் செய்ய வேண்டும் என்ற விபரத்தையாவது தயவு செய்து வெளியிடுங்கள். நாங்கள் புகார் செய்கிறோம்.
தாங்கள் தோரியம், யுரேனியம் என கூறி விட்டு நேரடியாக தாது மணலுக்கு வந்து விட்டீர்கள். அதே போல் தாது மணல் என குறிப்பிட்டு வழக்கம் போல் தங்களது தாக்குதல் முழுவதும் விவி மினரல் நிறுவனத்தின் மேல் தான். விவி-யை தாக்குவதற்காகவே இந்த செய்திகளை திரித்து எழுதி வருகிறீர்கள். உண்மையில் சாகு கமிட்டி அறிக்கையில் விவி நிறுவனத்திடம் உள்ள மோனசைட் இருப்பு சரியாக இருப்பதையும், தாது மணல் இருப்பு சரியாக இருப்பதையும் குறிப்பிட்டு இருந்தார். இதர சில நிறுவனங்களில் தான் கணக்கை விட கூடுதல் இருப்பு இருப்பதை குறிப்பிட்டு இருந்தார். ஆனால் விவி-க்கு எதிரானதை மட்டும் எடுக்க வேண்டும் என்பதால் தாங்கள் அமிக்கஸ் அறிக்கை என ஒன்றை குறிப்பிட்டு எடுக்கிறீர்கள். அந்த அமிக்கஸ் அறிக்கை என்பது விவி நிறுவனத்தோடு 1996 முதலே சேரன்மகாதேவி சார் ஆட்சியராக இருந்தது முதலே பகைமை கொண்டுள்ள திரு.ககன்தீப் சிங் பேடியின் ஒரு தலைபட்சமான அறிக்கையின் அடிப்படையிலும் ஆற்று மணல் தொழிலை பற்றி பேசாமல் இருக்க உங்களுக்கு சினிமா படம் எடுப்பதற்கு 5 கோடி ரூபாய் தந்த முந்தைய அரசின் நிழல் உலக அதிகார மையத்தின் உறவினர் கருணாகரனை ஆற்று மணல் போல் தாது மணலை சுவாகா செய்ய என்று திருநெல்வேலி கலெக்டராக நியமித்து ஒரு தலை பட்சமாக தயாரித்து வாங்கிய அறிக்கை. உயர்நீதிமன்றம் ககன் தீப் சிங் பேடியின் முன்விரோதத்தை ஒப்புக் கொண்டு வேறு மாநில உயர்நீதிமன்ற நீதிபதியை ஆய்வு செய்ய நியமித்தது. அப்படியானால் தங்கள் திட்டம் நிறைவேறாது என அரசு மேல்முறையீடு தாக்கல் செய்து இடைக்கால தடை பெற்றது. இதில் இருந்தே இதன் உள்நோக்கம் தெரியவில்லையா? பேடி அறிக்கையை வெளியே தெரிவிக்க கூடாது. பேடியின் நியமனம் சரியா என உயர்நீதிமன்றம் டிவிசன் பெஞ்ச் முடிவு செய்யும் வரை பேடி அறிக்கையை ஒட்டிய கவரில் பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்ட நிலையில் பேடி அறிக்கையின் அடிப்படையில் அமிக்கஸ் தயாரித்த அறிக்கை தங்களுக்கு யாரால் தரப்பட்டது. அதை அமிக்கஸ் தந்தாரா அல்லது நீதிமன்றத்தில் திருடினீர்களா? அல்லது சான்று நகல் பெற்று எடுத்தீர்களா?
எப்படியாயினும் கனிம நிறுவனங்களை வைத்தே விகடன் நிறுவனம் வளர்ந்து வருகிறது. ஜீனியர் விகடன் வளர்ச்சியாக ஒரு சட்டப்படியான தொழிலை உண்மைக்கு மாறான செய்தி மூலம் தாக்கி வருவது அதுவும் நீதிமன்றத்தின் கவனத்தை திசை திருப்ப இவ்வாறு பொய் செய்தி வெளியிடுவது நியாயமா என்பதை தயவு செய்து சிந்தியுங்கள். இந்த நிலையில் ஏழை தொழிலாளர்களான எங்களால் ஒரு பழமொழியை மட்டும் தான் நினைக்க முடியும். எளியோனை வலியோன் தாக்கினால் வலியோனை வாசல் படி தாக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. அவ்வாறு உங்களை தாக்குவதற்கு ஏதாவது ஒரு வாசற்படியை இறைவன் உருவாக்கி வைக்க வேண்டும் என்று மட்டும் தான் நாங்கள் இப்போது நினைக்க முடியும்.
எந்த நிலையிலும் பணத்திற்காக பொய் செய்தி வெளியிடும் தாங்கள் எங்கள் ஆட்சேபணையை வெளியிடப் போவதில்லை. என்ன செய்வது? தமிழகத்தில் இம்மாதிரி தரம் தாழ்ந்த பத்திரிக்கைகள் தான் பிரபலமாகின்றன.
எனவே எங்களது திருப்திக்கு தங்களுக்கு அனுப்பிய மின் அஞ்சலை எங்கள் இணைய பக்கத்தில் நாங்களே வெளியிட்டுக் கொள்கிறோம்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
ஆர். பாலகிருஷ்ணன்