சுரங்க பணியில் கனிம சலுகை விதி 37 படி அரசின் முன் ஒப்பளிப்பு இன்றி ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்க படக் கூடாது என்பதை அரசு தொழிற்துறை துணை செயலர் கடித எண் 22345/D.1/81-2 நாள் 05.05.1981 படி தெரியப்படுத்தி இதனை அனைவரும் கடைபிடிக்க அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் நகல் இட்டுள்ளார்கள். எனவே கனிம தொழிலாளர்கள் எங்கேனும் சட்ட விதிக்கு முரணாக ஒப்பந்த தொழிலாளர் மூலம் பணி செய்யப் பட்டால் அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து கனிம தொழிலாளரின் பணி வாய்ப்பை உறுதி செய்ய ஆவண செய்யலாம்.
சுரங்க குத்தகைதாரர்கள் அரசின் முன் ஒப்புதல் இன்றி ஒப்பந்த பணியாளர்களை சுரங்க பணிக்கு நியமிக்க முடியாது.
Leave a reply