இறுதியில் மத்திய மாநில அரசுகளும் கடலோர கனிமங்கள் மதிப்பு கூட்டி வரும் ஒரு இனம் என்பதையும் வேலை வாய்ப்பை பெருக்கும் கூடுதல் உபதொழில்களை பெருக்கும் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளன. தொழில் பெருகினால் நாடு வளம் பெரும். ஆனால் நில ஆர்ஜிதம் செய்து உரிமம் பெறும் வரை அரசு தொழிலாக இருக்கும். அதன் பிறகு வடநாட்டில் உள்ள ஒரு குஜராத் கம்பெனிக்கு தாரை வார்க்கப் படும் என இங்குள்ள அரசு அலுவலர்கள் முணுமுணுப்பது உண்மை அல்ல என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நிரூபிக்க வேண்டும்.