உலக கையிருப்பில் ஆறில் ஒரு பங்கை வைத்துள்ள இந்தியா தன் தேவையில் 60% இறக்குமதி செய்வது வெட்ககேடு

சில தினங்களுக்கு முன்பு பாக்சைட் மைனிங் சம்பந்தமாக அகில இந்திய அளவில் நடந்த ஒரு கருத்தரங்கில் எங்கள் மைனிங் இன்ஜினியர் கலந்து கொண்டார். அதில் உள்ள இணைப்புகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. தாதுமணல் மட்டும் அல்ல எந்த ஒரு கனிமத்தையும் இந்திய சரியாக உபயோகப்படுத்தவில்லை என்பதை அந்த கருத்தரங்கு வெளிச்சம் போட்டு காட்டியது. உலக மொத்த பாக்சைட் கையிருப்பில் இந்தியா ஆறில் ஒரு பங்கை கொண்டுள்ளது. ஆனால் கடந்த நான்கு தலைமுறைகளாக புதிய பாக்சைட் மைனிங் எதுவும் இல்லை. பாக்சைட் தான் அலுமினியத்திற்கு மூலப் பொருள். இந்த அலுமினியம் பாத்திரங்கள் செய்வதற்கு மட்டும் அல்ல, கூரை தகடுகள், குறிப்பாக மின்சார வயர் தயாரிப்பதற்கு அத்தியாவசியமான பொருள். உலக கையிருப்பில் ஆறில் ஒரு பங்கை கொண்டுள்ள இந்தியா இந்திய தேவையில் 60 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது என்ற துரதிஷ்டமான உண்மையை போட்டு உடைத்தார்கள் அந்த கருத்தரங்கில். ஆஸ்திரேலியா, சிலி, பிரேசில் ஆகிய நாடுகள் தான் அலுமினிய உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. அதாவது இந்தியாவில் உள்ள சுரங்கங்களை சுற்றுச்சூழல் என்ற பெயரில் இந்திய ஊழல் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், காசுக்கு விலை போகும் ஊடகங்களையும் வைத்து முடக்கி விட்டு அதே கனிமங்களை அந்நிய நாட்டில் குவாரி செய்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்கிறார்கள். அங்கு சுற்றுச்சூழல் பாதிப்பு கிடையாதா? ஆண்டவர்களும், ஆள்பவர்களும் ஒருவரை மாற்றி குறை சொல்கிறார்களே தவிர யதார்த்தத்தை உணர்ந்து இந்தியாவின் ஆண்டு தேவை 72 மில்லியன் டன். இவற்றை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய போதிய இருப்பு உள்ளது. அரசு தலையீடு இல்லாமல் காலதாமதம் இன்றி உரிமம் வழங்கினால் இதில் இந்தியா தன்னிறைவு அடைவதோடு 24 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதை எவரும் நினைக்க தயாரில்லை. இதே நிலையில் போனால் படித்த இந்திய இளைஞர்களின் நிலை என்னவாகும்?

1 (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *