வழக்கம் போல் “தி இந்து தமிழ்” பத்திரிக்கை பணத்தை வாங்கி கொண்டு தாது மணல் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வரும் போது பொய் செய்தி வெளியிடுவது போல் 15.12.2015 அன்று உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையை திசை திருப்புவதற்காக “நம்பி கெட்டது நம்பியாறு” என தலைப்பிட்டு சில உண்மையான செய்திகளையும், பல பொய் செய்திகளையும், குறிப்பாக தாது மணல் கொள்ளை என்ற பொய் செய்தியையும் அந்த செய்தியில் இணைத்து வெளியிட்டு இருந்தது. அதற்கு ஒரு மறுப்பு மின் அஞ்சல் இன்று அனுப்பப் பட்டு, அவர்களிடம் கட்டுரையாளர் பற்றிய விபரம் கேட்கப்பட்டுள்ளது. அது கிடைக்கப் பெற்ற உடன் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த மின் அஞ்சலை வழக்கம் போல் இந்து தமிழ் பத்திரிக்கையினர் இருட்டடிப்பு செய்து விடுவார்கள். நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் தகவலுக்காக இந்து தமிழ் பத்திரிக்கைக்கு அனுப்பிய மின் அஞ்சல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அலுவலகத்தில் பணியாற்றும் சங்க உறுப்பினர்களில் சிலர் இந்து தமிழ் பத்திரிக்கை விளம்பரம் கேட்டு கொடுக்காததால் தான் இவ்வாறு எழுதி உள்ளார்கள். விளம்பரம் கொடுக்கும் எஸ்ஆர்எம் பச்சமுத்து பற்றி எதுவும் எழுதுதில்லை என கூறினார்கள். அதில் பகுதி தான் உண்மையே தவிர தாது மணலுக்கு எதிராக எழுதுவதற்கு என்றே “தி இந்து தமிழ்” பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் சிலர் தொடர்ந்து பணம் பெற்று வருகிறார்கள் என்பது பல்வேறு நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்த கட்டுரையும் அதை உறுதி படுத்துகிறது.
—-
From: Southern Mineral Workers Association <sworkersassociation@gmail.com>
Date: 2015-12-16 9:49 GMT+05:30
Subject: “நம்பி கெட்டது நம்பியாறு” என்ற தலைப்பில் 15.12.2015-ல் “இந்து” தமிழ் பத்திரிக்கையில் வந்த செய்திக்கு எதிர்ப்பு
To: flcomments@thehindu.co.in, flletters@thehindu.co.in, flnsub@thehindu.co.in, inetads@thehindu.co.in, nravi@thehindu.co.in,malinip@thehindu.co.in, malinip.thehindu@gmail.com, nram@thehindu.co.in, THE HINDU 6 <ramakrishnan67@gmail.com>, THE HINDU 7 <photo@thehindu.co.in>, The Hindu <press.release@kslmedia.in>, The Hindu Tamil <santhanakrishnan.k@thehindu.co.in>, THE HINDU 5 <reporting.thehindu@gmail.com>, Buisness Line 1 <balaji.ar@thehindu.co.in>, The Hindu 1 <srrmail@gmail.com>, THE HINDU <ganskri@gmail.com>, janarthananp75@gmail.com
பெறுநர் நாள் : 16.12.2015
எடிட்டர்,
இந்து தமிழ் பத்திரிக்கை,
கஸ்தூரி பில்டிங்,
859/860அண்ணா சாலை,
சென்னை.
அன்புடையீர்,
பொருள் : “நம்பி கெட்டது நம்பியாறு” என்ற தலைப்பில் 15.12.2015-ல் “இந்து” தமிழ் பத்திரிக்கையில் வந்த செய்திக்கு எதிர்ப்பு
நம்பியாற்றை பற்றி எழுதும் போது தாது மணல் கொள்ளை என்று உண்மைக்கு புறம்பான ஒரு வாசகம் உள்நோக்கத்தோடு சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நான் தங்களுக்கு எழுதி இருக்கிறேன். தங்கள் பத்திரிக்கை ஆசிரியர் பணம் வாங்கி கொண்டு அவ்வப்போது விவி மினரல் வைகுண்டராஜனுக்கு எதிராக எழுதி வருகிறார் என்பதையும் குறிப்பாக நீதிமன்றங்களில் விவி மினரல் தொடர்புடைய வழக்குகள் வரும் போது நீதித்துறையை எதிராக செய்வதற்காக இவ்வாறு திட்டமிட்டு உங்கள் பத்திரிக்கையில் பொய் செய்தி வெளியிடப்படுகிறது என்பதையும் நான் திரு.சமஸ் என்பவர் பெயரில் “வணக்கம் வைகுண்டராஜன்” என்ற தலைப்பிட்டு மலத்தை அள்ளி வீசி செய்தி வெளியிடும் போது எனது எதிர்ப்பாக தெரியப்படுத்தி இருந்தேன். அதன் பிறகு தொடர்ந்து எழுதுவதை விட்டு அவ்வப்போது வாங்கிய காசுக்கு சில தாக்குதல்களை எழுதி வந்தீர்கள். நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விவி மினரல் தொடர்புடைய ஒரு வழக்கு வந்ததால் நேரடியாக எழுதாமல் தாதுமணல் கொள்ளை என குறிப்பிட்டு எழுதி உள்ளீர்கள். இதற்கு எனது கடுமையான ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் உள்நோக்கத்தோடு இம்மாதிரி எழுதி வருகிறீர்கள் என்பதையும் இதற்கென தாங்கள் பணம் பெற்று வருகிறீர்கள் என்பதையும் தங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளது பொய் என்பதையும் நான் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் உங்களை அழைத்து சென்று நிரூபிக்க தயராக உள்ளேன். காலம் காலமாக மழைக்காலத்தில் மட்டும் வெள்ள நீர் ஓடும். நம்பியாற்றில் ஏதோ எப்போதும் வெள்ளநீர் ஓடியது போலும் தற்போது பல்வேறு காரணங்களால் நின்று விட்டது போலும் குறிப்பிட்டு விட்டு நீங்கள் வாங்கிய காசுக்கு எழுத வேண்டிய தாது மணல் கொள்ளை என்ற வாசகத்தை சரியாக சேர்த்து விட்டீர்கள். தயாதேவதாசும் உங்களுக்கு தந்த பணம் போக நிர்வாகத்தை திருப்தி படுத்த நேற்று மட்டும் 3000 பத்திரிக்கை மொத்தமாக கிரையம் வாங்கி இருப்பார்.
உண்மையில் கொள்ளை நடத்துவது இந்து தமிழ் பத்திரிக்கை தான். அதுவும் மிரட்டி பணம் பறிப்பது. உங்கள் இந்து தமிழ் பத்திரிக்கையின் செய்தியாளர் திரு. பி.ஜனார்த்தனன் கடந்த மாதம் விவி மினரல் சென்னை அலுவலகத்திற்கு போய் விளம்பரம் வேண்டும் என்று அன்பான மிரட்டல் கொடுத்தார். அதற்கான வீடியோ இணைப்புகளை தாங்கள் பார்வையிட வேண்டுமா? உங்கள் அன்பான மிரட்டலுக்கு அஞ்சி உங்களுக்கு லட்சங்களில் விளம்பரங்கள் வராததால் நீங்கள் இதனை எழுதி இருக்கிறீர்கள் என சென்னை அலுவலக ஊழியர்கள் கூறினார்கள். ஆனால் அதுவம் ஒரு காரணமாக இருக்கும். மாறாக விவி –க்கு எதிராக எழுதுவதற்கு என உங்கள் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் சில நபர்களுக்கு மொத்தமாக மாத சம்பளம் தனியாக கொடுக்கப்பட்டு வருவதால் இவ்வாறு எழுதப்பட்டு உள்ளது.
நான் இந்த கட்டுரையாளர் மீது சட்ட நடவடிக்கை தொடர விரும்புகிறேன். எனவே தயவு செய்து கட்டுரையாளர் பற்றிய விபரங்களையும் விலாசத்தையும் தெரியப்படுத்துங்கள். எனது இந்த ஆட்சேபணையையும் தயவு செய்து வெளியிடுங்கள்.
அன்புடன்
ஆர். பாலகிருஷ்ணன்