இந்திய பொருளாதாரத்தை வீணடிக்கும் மத்திய அரசின் இந்தியன் ரேர் எர்த் நிறுவனம்

மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் திறமையற்ற செயல்பாடு பாரீர்!!!!

மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்திற்கு ரேர் எர்த் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு கேரளா மாநிலம் ஆல்வாயில் தொழிற்சாலை உள்ளது. இது ஆண்டுக்கு 5500 டன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

இன்னிலையில் திரு.கே.என்.பாலகோபால் என்னும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜ்யசபாவில் இந்தியன் ரேர் எர்த் நிறுவனம் கடந்த 5 வருடங்களாக எவ்வளவு ரேர் எர்த் உற்பத்தி செய்துள்ளது? எவ்வளவு விற்பனை செய்துள்ளது என ஒரு கேள்வியை கேட்;டார். அதற்கு பிரதமர் அலுவலகத்தில் உள்ள அணுசக்திதுறை துணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங் கடந்த 12.03.2015 அன்று ஒரு பதிலை வழங்கினார். அதில் 5 வருடங்களில் இந்தியன் ரேர் எர்த் நிறுவனம் 310 டன் ரேர் எர்த்தை உற்பத்தி செய்தது என்றும்; 285 டன்னை இந்தியாவில் விற்பனை செய்தது என்றும் பதில் வழங்கி உள்ளார். இது குறியிடாத கேள்வி எண் 1601-க்கு பதிலாக வழங்கப்பட்டதில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும்.

இந்திய அரசின் செயல்பாடு பாராட்டப்பட வேண்டும் தானே!!!

Source : http://www.dae.nic.in/writereaddata/parl/budget2015/rsus1601.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *