ஆந்திராவிலும் தமிழ்நாட்டை போலவே பலமாதங்களாக தாது மணல் தொழில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதனால் வேலை இழந்த தொழிலாளர்கள் அரசு அதிகாரிகளுக்கும் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பல்வேறு கோரிக்கைகளை அனுப்பினார்கள். எந்த நிலையிலும் உதவி வராத நிலையில் தற்போது தேர்தலுக்கு வாக்கு கேட்டு வரும் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினரையும், மாவட்ட அமைச்சரையும் நேரடியாகவே கேள்வி கேட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள். அந்த செய்தி பத்திரிக்கையில் வந்தவை. சகதொழிலாளி அனுப்பி உள்ளார். அது தொழிலாளர் நண்பர்களின் தகவலுக்காக கீழே கொடுக்கப் பட்டுள்ளது. நமது சங்க தொழிலாளர்களும் இந்த தொழிலுக்கு நேரடியாக ஆதரவு அளித்து உறுதி செய்து தரும் வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என முடிவு செய்தால் என்ன?
ஆந்திராவில் தாது மணல் தொழிலாளர்கள் எதிர்ப்பை எம்.பி., எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களிடம் பதிவு செய்தார்கள்.
Leave a reply