அரசுக்கு கூடுதல் வருமானம் தரும் தாது மணல் தொழிலை அரசியல் காரணங்களுக்காக நிறுத்தி வைத்துள்ளார்கள்.

பிஜேபி அரசு பொறுப்பேற்ற உடன் கனிம சட்டங்களில் திருத்தங்கள் செய்தது. அதன்படி 2015 சட்ட திருத்தத்திற்கு முன்பு வழங்கப்பட்ட சுரங்க குத்தகைதாரர்கள் அரசுக்கு ஏற்கனவே செலுத்தும் ராயல்டி போக ராயல்டியில் 30 சதவீதம் கூடுதலாக மாவட்ட கனிம நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் 2015-க்கு பிறகு வழங்கப்பட்ட குத்தகைதாரர்கள் ராயல்டி போக 10 சதவீதம் மட்டும் கூடுதலாக மாவட்ட கனிம நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் விதிகள் செய்தார்கள். இதனை தொழிற்துறை அமைச்சர் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி அத்தியாவசிய பணிகளுக்கு அதாவது குடிநீர் வழங்கல் போன்ற பணிகளுக்கு செலவிடப்பட வேண்டும் என உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 61 சுரங்க குத்தகைகள் அனைத்தும் 2015-க்கு முன்பு வழங்கப்பட்டவை. 2013 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் மூலம் கிடைக்கும் ராயல்டியும் 30 சதவீத கூடுதல் வருமானமும் அரசுக்கு இழப்பு. இந்த தொகை குடிநீர் வழங்கல் முதலிய அத்தியாவசிய பணிகளுக்கு மக்களுக்கு செலவிடப்பட வேண்டிய தொகை அல்லவா? எனவே இதனை நிறுத்தி வைப்பது மக்களுக்கு எதிரான செயல் அல்லவா?
அரசியல் காரணங்களுக்காக நிறுத்தி வைத்துள்ளதை நீக்கினால் ஏராளமான நபர்கள் மீண்டும் வேலை பெறுவதோடு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த அரசுக்கும் 30 சதவீத கூடுதல் வருமானம் கிடைக்கும் அல்லவா?

Source : http://www.tnmine.tn.nic.in/GO/Ind-pn-2017-18.pdf

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *